Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராக அரியணையில் அமர்த்துவோம் தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
29 August, 2018, Wed 3:50 GMT+1  |  views: 241

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, தமிழக முன்னாள் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, ஐ.நா.சபை பொதுச்செயலாளராக இருந்த கோபி அன்னான், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேர், கேரளாவில் பெருமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 373 பேர் ஆகியோரது மறைவுக்கு தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* போட்டியிட்ட 13 முறையும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றும், 2 முறை சட்ட மேலவை உறுப்பினராக இருந்தும் மொத்தம் 60 ஆண்டுகள் உறுப்பினராக, தமிழகத்தில் இதுவரை யாரும் உருவாக்காத சரித்திரத்தை படைத்தவர் கருணாநிதி. பேரறிஞர் அண்ணாவின் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராகவும், பிறகு 19 ஆண்டுகள் தமிழக முதல்-அமைச்சராகவும் இருந்து அரும்பணி ஆற்றியவர் கருணாநிதி.

நாடு போற்றும் நல்ல நிர்வாகி என்ற தனித்தன்மைகளின் தகுதிமிக்க தொகுப்பாகவும், அடி முதல் நுனி வரை வலிவும், பொலிவும் மிக்க கட்டமைப்பினை கழகத்திற்கு உருவாக்கி தந்த செயலூக்கம் கொண்ட தலைவராகவும் விளங்கிய கருணாநிதிக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கி மத்திய அரசு பெருமைப்படுத்திட வேண்டும்.

தமிழகத்தில் வாழும் தமிழர்கள் மட்டுமல்லாது, உலகத் தமிழர்களின் ஒருமித்த விழைவாகும் என்பதால், மத்திய அரசு அதனை நிறைவேற்றித்தர வேண்டுமென இந்த பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

* ஒரு தாய் மக்களான நாம் அனைவரும், அர்ஜூனனின் கூரிய குவிமைய நோக்குடன் பயணிப்போம்; கவனம் சிதையாது, காரியம் சாதிப்போம்; அராஜக அ.தி.மு.க. ஆட்சியை அப்புறப்படுத்துவோம்; தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராக அரியணையில் அமர்த்துவோம்.

தமிழகத்தை முன்னேற்ற பாதையில் மீண்டும் செலுத்துவோம்; இன-மொழி பெருமையை பேணுவோம்; அதுவரை மெய் வருத்தம் பாராது, பசி நோக்காது, கண் துஞ்சாது அயராது உழைப்போம்; அதற்கான சூளுரையை இன்றே இப்போதே மேற்கொள்வோம்.  மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பொருளாளராக தேர்வு செய்யப்பட்ட துரைமுருகன் பேசியதாவது:-

தி.மு.க. மிகப்பெரிய இயக்கம். கருணாநிதி பொறுப்பை ஏற்றபோது அவரோடு நான் இருந்தேன். சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்து அவர் பதவியேற்கவில்லை. கருணாநிதி சிலுவையை சுமந்து வந்து பொறுப்பை ஏற்றார். ஏராளமான எதிர்ப்பை ஏற்று பதவிக்கு வந்தார். ஆனால் மு.க.ஸ்டாலின் ஒரு சிறு சலசலப்பும் இல்லாமல், யாரிடமும் எதிர்ப்பு இல்லாமல் பதவிக்கு வந்துள்ளார். அந்த கட்டத்தையும் நினைத்து பார்க்கிறேன். இதையும் நினைத்து பார்க்கிறேன்.

உன்னோடும், உன் தந்தையோடும் நடந்து வந்துள்ளேன். நான் அண்ணாவோடு அரசியல் நடத்தியவன், கருணாநிதியோடு பழகியவன். எத்தனையோ பதவிகளை தி.மு.க.வில் ஏற்றுள்ளேன். ஆனால் கழகத்தின் பேச்சாளர் என்பதில்தான் எனக்கு பெருமை. நூற்றாண்டு இயக்கத்தை வழி நடத்தப்போகிற அடுத்த கட்டம் மு.க.ஸ்டாலினிடம் வந்துள்ளது. நீங்கள் ஒரு சரித்திர புருஷன். வரலாற்றில் இடம் பெறப்போகிற தலைவர் மு.க.ஸ்டாலின்.
இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:- மனதில், முகத்தில் புன்னகையை புகட்டக்கூடிய வாய்ப்பை இந்த நாள் கொடுத்திருக்கிறது. இவர் என் தலைவர், இவரை பெற்றிருப்பதற்கு எத்தனை பேறு பெற்றிருக்கிறேன் என்று நெகிழ்கிறேன். உச்சி சூரியனை இயற்கை பறித்துக்கொண்டது. இருள்மை கவிழ்ந்தது, திசையறியா காட்டில் தமிழ் இனமே நின்று கொண்டிருந்தது. இந்த சூழலில் கிழக்கு சூரியனாக இப்போது உதித்திருக்கிறார் அண்ணன் மு.க.ஸ்டாலின்.

தி.மு.க.வை வழி நடத்தக்கூடிய தகுதி மு.க.ஸ்டாலினுக்கு மட்டுமே இருக்கிறது என்று யாருக்கும் கிஞ்சிற்றும் சந்தேகம் இல்லை. தி.மு.க. தலைவர் பொறுப்பை மு.க.ஸ்டாலின் ஏற்றிருப்பது சடங்குதான். கட்சிக்கு முன் நாம் எதுவும் இல்லை. கலைஞர் எதற்கும் ஆசைபட்டது இல்லை. அண்ணா அருகே அவருடைய உடல் அடக்கம் செய்யவேண்டும் என்பது மட்டும் தான் ஆசையாக இருந்தது.

கலைஞரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக மெரினா கடற்கரையில் இடம் கேட்டு, ஒரு முகமறியா முதல்-அமைச்சர் முன்பு போய் நின்றார் மு.க.ஸ்டாலின். அவர்கள் இடம் கொடுக்கவில்லை. நாங்கள் எல்லாம் போராட்டம் நடத்தலாம் என்று கூறினோம்.

ஆனால், மு.க.ஸ்டாலின் சட்டத்தின் உதவியை நாடினார். மு.க.ஸ்டாலின் கோபப்பட்டிருந்தால், அன்றையதினம் மொத்த தமிழகமும் அவர் பின்னால் வந்திருக்கும். எத்தனை உயிர்களை இழந்திருப்போம். மனசாட்சியற்ற ஆட்சியாளர்கள் இங்கே இருக்கிறார்கள். துப்பாக்கி சூடு கூட நடந்திருக்கும். ஆனால், ஒரு தலைவனாக அதுபோன்ற சூழலை தவிர்த்து, கருணாநிதியின் ஆசையை நிறைவேற்றினார். கண்ணியத்தை காத்து தலைவராக நிமிர்ந்து நின்றார். மகனாகவும், தலைவராகவும் நிரூபித்த தருணம் அது. ஒரு தலைவர் என்பதற்கு அதுதான் இலக்கணம். இவ்வாறு அவர் பேசினார்.
 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பயோ ஜியோகிராபி (Biogeography)

பூமியில் பரவியிருக்கும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஆந்திராவில் தெலுங்கு தேச எம்.எல்.ஏ. சுட்டுக்கொலை மாவோயிஸ்டுகள் வெறிச்செயல்
ஆந்திராவில் தெலுங்கு தேச எம்.எல்.ஏ. சுட்டுக்கொல்லப்பட்டார். வெறிச்செயலில் ஈடுபட்ட மாவோயிஸ்டு அமைப்பினரை போலீசார் தேடி வருகின்றனர்
24 September, 2018, Mon 4:14 | views: 331 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தி.மு.க.வை ஊழல் கட்சி என்பதா? எடப்பாடி பழனிசாமிக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்
தி.மு.க.வை ஊழல் கட்சி என்று பேசிய எடப்பாடி பழனிசாமிக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
24 September, 2018, Mon 4:13 | views: 182 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. கைது நீதிமன்ற உத்தரவின் பேரில் வேலூர் சிறையில் அடைப்பு
முதல்-அமைச்சர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. கைது
24 September, 2018, Mon 4:11 | views: 199 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஒருங்கிணைக்கப்பட்ட தேசிய மருத்துவ பாதுகாப்பு திட்டம் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்
முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட தேசிய மருத்துவ பாதுகாப்பு திட்டத்தை சுகாதாரத்துறை
24 September, 2018, Mon 4:10 | views: 128 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
10 கோடி ஏழை குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு : பிரதமர் தொடங்கி வைத்தார்
10 கோடி ஏழை குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் ஆண்டுக்கு
24 September, 2018, Mon 4:09 | views: 132 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS