Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
சென்னையில் வாஜ்பாய்க்கு புகழ் அஞ்சலி கூட்டம் அனைத்துக்கட்சி தலைவர்கள் பங்கேற்று புகழாரம்
29 August, 2018, Wed 3:47 GMT+1  |  views: 184

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ந்தேதி உடல்நலக் குறைவால் டெல்லியில் காலமானார். மறைந்த வாஜ்பாய்க்கான புகழ் அஞ்சலி கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்தவர்களை பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்றார். கூட்டம் தொடங்கியதும் மேடையில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வாஜ்பாய் உருவப்படத்துக்கு தலைவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

கூட்டத்தில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் எஸ்.கிருஷ்ணசாமி, த.மா.கா. மூத்த துணைத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ., இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன் யாதவ், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில துணைச்செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், தமிழ்நாடு லோக் ஜனசக்தி தலைவர் ச.வித்யாதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

கூட்டத்தில், மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பேசியதாவது:-
நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளை, எதிரி கட்சிகளாக பார்க்காமல் அனைவர்களையும் நண்பர்களாக பாவித்து அவர்கள் கூறிய கருத்துகளுக்கும் மதிப்பளித்து வந்ததால் அனைவரின் மனதிலும் வாஜ்பாய் நீங்கா இடம் பிடித்தார். அத்துடன், அரசியல் தலைவர்களுக்கும் முன்மாதிரியாக திகழ்ந்தார். அவரது மறைவையொட்டி கடந்த 8 நாட்களாக அனைத்து கட்சிகள் சார்பிலும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
வாஜ்பாய் என்றாலே இந்திய தேசத்தின் ஒட்டுமொத்த உருவத்தைப் பார்க்க முடியும். ஒரு மனிதன் நல்லதை எப்படி யோசிக்க வேண்டும் என்பதற்கு அவர் ஒரு சிறந்த உதாரணம். நாட்டின் கலாசாரம் காக்கப்பட வேண்டும், தொழில்நுட்பம் கொண்டு வர வேண்டும் என்பதில் மிக தெளிவாக இருந்தார். உலக நாடுகளில் உள்ள அனைத்து தொழில்நுட்பங்களும் இந்தியாவில் இருக்க வேண்டும் என்று நினைத்தவர்.

அவர் வாழ்ந்த பாதையில் வாழ்ந்து செல்வது தான் அவருக்கு நாம் செலுத்தும் இதய அஞ்சலி. இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் பேசியதாவது:- தற்போது, மதுரையில் உள்ள மங்கம்மா சாலைபோன்று, 100 ஆண்டுகளுக்கு பிறகும் வாஜ்பாய் அமைத்த தங்க நாற்கர சாலை மக்களிடம் பேசப்படும். அதேபோன்று, சர்வ சிக்‌ஷா அபியான் என்ற அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் நாட்டின் கல்வி மேம்பாட்டு நிலையை உயர்த்தினார். தற்போது அவர் அனைவரையும் நேசித்ததால், குடும்பத்தில் ஒருவர் இறந்ததாக கருதி அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அஞ்சலி செலுத்திய அனைவருக்கும் பா.ஜ.க. சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசியதாவது:- வாஜ்பாய் என்ன திட்டங்கள் போட்டாலும், மக்களுக்கு சென்றடைகிறதா என்பதை நேரடியாக ஆய்வு செய்து வெற்றிகண்டவர். உதாரணமாக 2001-2002-ம் ஆண்டு வாஜ்பாய் நெல்லூரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வருவதாக தெரிவித்திருந்தார்கள். ஆனால் ஒரு லட்சம் கோடி செலவில் தான் அமைத்த தங்க நாற்கர சாலையில் காரில் பயணம் செய்து அந்த சாலை எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்பதற்காக அந்த சாலையில் பயணித்து ஆய்வு செய்தார். அவர் புகழை நாம் பெருமைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-அண்ணாவில் இருந்து கருணாநிதி, முரசொலிமாறன் உள்பட பல தி.மு.க. தலைவர்களிடம் வாஜ்பாய் நெருங்கிய தொடர்பில் இருந்தார். 60-வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது, வாஜ்பாய் தலைமையில் நடந்த ஒரு கவியரங்கத்தில் எனக்கு கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தபோதும், சிங்கப்பூரில் இருந்ததால் அதில் கலந்துகொள்ள முடியவில்லை. இப்போது வரைக்கும் அதில் கலந்துகொள்ள இயலாதது எனக்கு வருத்தமாக உள்ளது. எல்லோரையும் அரவணைப்போம் என்று சொன்ன வாஜ்பாயின் நெகிழ்வு தன்மைதான் இந்திய நாட்டை வல்லரசாக்கும். நாம் இந்தியன் என்று தலைநிமிர்ந்து நிற்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி பேசும்போது, தமிழர் ஒருவரை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று பா.ம.க. வைத்த கோரிக்கையை, அப்துல்கலாமை ஜனாதிபதியாக்கி அந்த கோரிக்கையை வாஜ்பாய் நிறைவேற்றினார். அனைவரையும் அரவணைத்து செல்லும் பாங்கை பெற்றிருந்ததால், அவர் மறைவுக்கு பிறகும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அனைத்து அரசியல் கட்சிகள் சார்பிலும் அவருக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது” என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசும்போது, இந்தியாவின் உயர்ந்த பதவியான பிரதமர் பதவியில் வாஜ்பாய் இருந்தபோது டெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில் மதுரையை சேர்ந்த பாமர பெண்மணியான சின்னப்பிள்ளையின் கால்களை தொட்டு வணங்கினார். அவருக்கு அதிகாரம் என்பது போதை, மமதை, ஆணவத்தை தரவில்லை. அதிகாரம் என்பது மக்களுக்கு தொண்டு செய்வதற்குத்தான் என்பதை அவர் உணர்ந்திருந்தார். கட்சி கொள்கை வேறு, ஆட்சி கொள்கை வேறு என்பதை அவரது 5 ஆண்டு ஆட்சியில் நிரூபித்தார். அவரை இழந்தது தேசத்திற்கு பேரிழப்பு. மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் இருப்பதற்கு அஸ்திவாரம் அமைத்த பெருமை வாஜ்பாயையே சேரும் என்றார்.

கூட்டத்தில், தமிழக பா.ஜ.க. பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், துணைத் தலைவர் சக்ரவர்த்தி, அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகம், தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பாத்தோமீட்டர் (Fathometer)

ஒலி அலைகளைப் பயன்படுத்தி கடலின் ஆழத்தை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தயே புயல்: சத்தீஷ்கர் மற்றும் மத்தியபிரதேச மாநிலங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
தயே புயலால் சத்தீஷ்கர் மற்றும் மத்தியபிரதேச மாநிலங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
22 September, 2018, Sat 8:04 | views: 238 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கருணாஸ் பேச்சுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
கருணாஸ் பேச்சுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
22 September, 2018, Sat 8:01 | views: 165 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சர்வதேச அளவில் மாநாட்டு அரங்கம்: பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்
டெல்லியில், சர்வதேச அளவிலான மாநாடுகள், கண்காட்சிகள் உள்ளிட்டவற்றை நடத்தும் வகையிலான அரங்கம் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டவுள்ளார்.
20 September, 2018, Thu 3:55 | views: 355 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அணைகளை பாதுகாக்க ரூ.3,466 கோடியில் திட்டம் தமிழகத்துக்கு ரூ.543 கோடி; மத்திய மந்திரிசபை ஒப்புதல்
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், மத்திய பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட், உத்தரகாண்ட் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 198 அணைகளை பாதுகாத்து பராம
20 September, 2018, Thu 3:54 | views: 218 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அமைச்சர் தங்கமணி பதவி விலக வேண்டும் : மு.க.ஸ்டாலின் அறிக்கை
காற்றாலை மின்சார ஊழல் குறித்து சுதந்திரமான விசாரணைக்கு வழிவிடும் வகையில் மின்துறை அமைச்சர் தங்கமணி பதவி விலக வேண்டும்
20 September, 2018, Thu 3:53 | views: 166 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS