Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
உள்துறை அமைச்சின் புதிய அறிக்கை - 277 பேர் காயம் - தொடரும் போராட்டங்கள் - பரிஸ் மீண்டும் முடக்கப்படுமா? - காணொளி
France Tamilnews
உயிர் பிரிந்த பிறகும் அழுகிறது என் ஆத்மா...
27 September, 2012, Thu 16:06 GMT+1  |  views: 3323
ParisTamil news

உயிரற்ற என்னுடல் மரணப்பெட்டியில்
மூடப்படாமல் கிடக்கிறது அஞ்சலிக்காக,
கூடவே என்னை விட்டுப்பிரிந்த ஆத்மா
நோட்டமிடுகிறது என்னைச்சூழ்ந்து
நிற்பவர்களைப் பார்த்து............

வெள்ளைத்துணித்துண்டால் கட்டப்படுகின்றன
என் இரு காற்பெருவிரல்களும்,
கைவிரல்கள் பிணைக்கப்படுகிறது,
மூக்கின் இரு ஓட்டைகள் பஞ்சினால் அடைக்கப்படுகிறது,
நெற்றியிலே நாணயக்குற்றி,
செத்த பிறகும் எத்தனை சித்திரவதை......

நான் மனமுவந்து கட்டியவளின் ஓர் இதயம் அழுகிறது,
அழகிய மும்மக்களைத் தந்தவர் என்ற  நன்றிக்காக,
மறு இதயம் மகிழ்கிறது,
அடுத்த தெரு வீட்டில் இருந்தவனுடன் இருந்த
அந்தரங்க வாழ்வுக்கு முழு விடுதலை வந்ததென்று......

இதுகண்டு முக‌த்தில் அவ்வளவு சோக‌த்தோடு,
வாழையிலை முழுதும் உதிரமாய்
மாறினாலும் உண்டாக‌‌ வேண்டும்
என்ப‌தை முன் தீர்மானித்தவள் போல,
அவ‌ன் மனைவியும்  புலம்புகிறாள்.........

பலர் அறியாமல் கடன் பெற்றவன்
கெட்டியான மாலையிட்டு
கண் கலங்குகிறான்,
அவன் அகத்திலும் பூரிப்பு,
இனியென் தொல்லை இருக்காதல்லவா.......

சொத்துக்களை அனுபவிப்பதில்
தடையாக இருந்தவன் சரிந்ததில்,
சகோதரன் கண்ணில் கொள்ளை மகிழ்ச்சி,
ஆனாலும் யாவரும் அறிய
முதலைக்கண்ணீர் வடிக்கிறான்.......

நேர்மையாய் நான் உழைத்த சேமிப்புப் பணத்தில்,
உரித்துடையவர் யாரென்பதில்,
சட்ட ஆலோசனை பெறுகிறார்கள்,
என்னை அப்பா என்றழைத்த முச்செல்வங்கள்........

உயர் பதவிகளைக் காண கனாக்கண்டிருந்த
அலுவலக சகபாடிகளுக்கு என் இழப்பு
ஓர் வரப்பிரசாதம்,
ஒரு விழாவாக கொண்டாடுகிறார்கள்........

கட்டியவளின் சொல்லையும் கடந்து
தெருவில் அனாதையாய்க் கிடந்த
நாய்க்குட்டியை என் அரவணைப்பில் வளர்த்தேன்,
அது ஒன்றுதான் மூலையில் கிடந்து
கலக்கத்தில் அழுகிறது  உண்மையாக.....

மேகம் குவியும்போது யானை போலவும்
சிங்கம் போலவும் சித்திரங்கள் தோன்றுகின்றன,
காற்றடித்ததும் அவை கலைந்துவிடுகின்றன,
மனிதர்களின் மனப்போக்கிலும்
அத்தகைய சித்திரங்கள் உண்டு,
அந்த சித்திரங்களை  நம்பி
ஏமாறுகிற கோமாளிகளுமுண்டு,
நானும் இன்று அந்த கோமாளியாகிவிட்டேனே,
என் விதி அதுவென்றால் இருந்துவிட்டுப் போகட்டும்.......

இன்னொரு பிறப்பிருந்தால் இறைவனே !,
என்னை ஐந்தறிவு  ஜீவனாக பிறக்கவிடு,
இந்த மானிட ஜென்மங்களின் பொய் முகங்களுடன்
வாழ்ந்த வாழ்க்கை போதும்............

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* தபால்தலையை (Stamp) வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு

  மலேசியா

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
அவள் பெயரும்... அந்த குரலும்...
கூட்டநெரிசலொன்றில் நடந்துகொண்டிருக்கிறேன் நான்...! அவள் பெயரைச்சொல்லி - யாரோ அழைக்கும் சத்தம்
18 November, 2018, Sun 13:51 | views: 248 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சாத்தானின் தேவதை !
திரும்பிப்பார்த்தேன்...! திரும்பிக்கொண்டாள்...!! புன்னகைத்தேன்...! முகம் மறைத்தாள்...!! காத்திருந்தேன்...! விலகி நடந்தாள்...!!
11 November, 2018, Sun 14:05 | views: 272 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயமறியாதவள்!
அது ஒரு அமாவாசை இரவு...! ஒளி தின்னும் இருள் மிருகம் நடமாடிக்கொண்டிருக்கிறது...!
29 October, 2018, Mon 13:19 | views: 547 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பட்டாம்பூச்சி...!
பட்டாம்பூச்சிகள் பறப்பதை நான் பார்த்திருக்கிறேன்...! இன்று பட்டாம்பூச்சியொன்று துப்பட்டா சிறகுகளை காற்றிலசைத்து
21 October, 2018, Sun 15:39 | views: 589 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வானத்தின் நாணம்...!!
கன்னியவள் வழுவழுத்த கன்னங்களில் காதலன் தன் முத்தங்களின் இதழ் பதிக்க நாளங்களில் குருதி பொங்கி பாய்ந்தோடி
14 October, 2018, Sun 15:26 | views: 491 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS