Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலைக்கு ஆள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
17
சனிக்கிழமை
ஆகஸ்ட்
துர்முகி 2047
திதி: ஏகாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

குருப்பெயர்ச்சியின் பலன்கள்! உங்கள் ராசிக்கு கிடைக்குப் போகும் அதிர்ஷ்டங்கள்

5 October, 2018, Fri 11:32   |  views: 2986

 

 மேசம்

பிரச்னைகளை சமாளிக்கும் மன தைரியம் கொண்ட நீங்கள், மனசாட்சிக்கு விரோதமாக எதையும் செய்யத் த்தயங்குவீர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை அறிந்த நீங்கள், சோதனைகளையும் சாதனைகளாக மாற்றி முன்னேறத் துடிப்பவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு உங்களை சாதிக்க வைத்ததுடன், வசதி, வாய்ப்புகளையும் தந்த உங்கள் பாக்யாதிபதியாகிய குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 வரை உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் மறைவதால் எதையும் சமாளிக்கும் சாமர்த்தியத்தையும், மனப்பக்குவத்தையும் தருவார். அலைச்சலுடன் ஆதாயமும் கிடைக்கும். பயணங்களும், தவிர்க்க முடியாத செலவுகளும் துரத்தும். 
 
மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். வேலைச்சுமையால் தூக்கம் குறையும். கனவுத் தொல்லைகளும் அவ்வப்போது வந்து நீங்கும். எல்லாப் பிரச்னைகளுக்கும் மற்றவர்களை நீங்கள் காரணம் கூறுவது அவ்வளவு நல்ல தல்ல. ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். சொத்துக்கான வரியை செலுத்தி சரியாக பராமரியுங்கள். தாயாரின் உடல் நிலை பாதிக்கும். வாகனத்திற்கான லைசன்ஸ், இன்ஸ்யூரன்ஸை குறிப்பிட்ட காலத்திற்குள் புதுப்பிக்கத் தவறாதீர்கள். அபராதம் கட்ட வேண்டி வரும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். யாரை நம்புவது என்கிற குழப்பத்திற்கு ஆளாவீர்கள். 
 
குருபகவானின் பார்வை பலன்கள்
 
குருபகவான் 2ம் வீட்டை பார்ப்பதால் பணப்புழக்கம் கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வீடு கட்ட சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ ப்ளான் அப்ரூவலாகி வரும். அரசால் அனுகூலம் உண்டு. பூர்வீக சொத்து கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். குழந்தை பாக்யம் கிடைக்கும். குரு உங்கள் சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் தாயாரின் ஆரோக்யம் சீராகும். அவருடனான மனத்தாங்கல் நீங்கும். தாய்வழி சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உங்களுடைய படைப்புகள் தொலைக்காட்சி, வானொலி, செய்தி தாள்களில் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். குரு 12ம் வீட்டை பார்ப்பதால் புகழ் பெற்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஒரு சொத்தை விற்று மற்றொன்று வாங்குவீர்கள்.
 
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்
 
04.10.2018 முதல் 20.10.2018 வரை உங்களின் பாக்யவிரயாதிபதியான குருபகவான் தன் சாரமான விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். தந்தையார் ஆதரவாக இருப்பார். அவர்வழி உறவினர்களும் உதவிகரமாக இருப்பார்கள். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். வழக்கு சாதகமாகும். புது வேலை கிடைக்கும். 21.10.2018 முதல் 19.12.2018 வரை உங்களின் ஜீவனாதிபதியும்லாபாதிபதியான சனி பகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் வேலைச்சுமை, பணப்பற்றாக்குறை, இனந்தெரியாத கவலைகள், குடும்பத்தில் சலசலப்பு, உத்யோகத்தில் எதிர்ப்புகள் வந்து செல்லும். 
 
வேற்றுமதத்தைச் சேர்ந்த நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். மூத்த சகோதரங்கள் உதவுவார்கள். 20.12.2018 முதல் 12.03.2019 வரை மற்றும் 09.08.2019 முதல் 27.10.2019 வரை உள்ள காலகட்டங்களில் உங்களின் சேவகாதிபதியும்சஷ்டமாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால் வீண் செலவுகள், சிறுசிறு விபத்துகள், உங்களைப் பற்றிய வதந்திகள், பழைய கடனை நினைத்து அச்சம், இளைய சகோதர வகையில் மனத்தாங்கல்கள் வந்து செல்லும். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்காதீர்கள்.
 
குருபகவானின் அதிசார வக்ர சஞ்சாரம்
 
13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 9ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். அரசாங்க விஷயம் உடனே முடியும். தந்தையார் உறுதுணையாக இருப்பார். அவரின் உடல் நிலையும் சீராகும்.
 
குருபகவானின் வக்ர சஞ்சாரம்
 
10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் அக்காலக்கட்டத்தில் அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும். குடும்பத்தில் ஓரளவு நிம்மதி உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். குழந்தை பாக்யம் உண்டு. மனைவிவழியில் இருந்த மோதல்கள் விலகும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள்.
 
வியாபாரத்தில் பழைய தவறுகள் நிகழ்ந்து விடாத வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். சிறுசிறு நட்டங்கள் வந்துப் போகும். தரமான பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். வேலையாட்களுக்கு எவ்வளவு உதவினாலும் நன்றி மறந்த நிலையில் நடந்து கொள்வார்கள். அதை நினைத்து வருத்தப்படுவீர்கள். கடையை அவசரப்பட்டு வேறு இடத்திற்கு மாற்ற வேண்டாம். இருக்கின்ற இடத்திலேயே தொடர்வது நல்லது. இரும்பு, கடல் உணவுகள், ஹோட்டல், ரசாயன வகைகள் மற்றும் ஏற்றுமதிஇறக்குமதி வகைகளால் லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்களால் பிரச்னைகள் வரும்.
 
உத்யோகத்தில் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். அலட்சியம் வேண்டாம். மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். உயரதிகாரிகள் உங்களைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் உங்களின் தவறுகளை சுட்டிக் காட்டினால் மாற்றிக் கொள்வது நல்லது. உங்களைவிட அனுபவம் குறைவானவர்கள், வயதில் சிறியவர்களிடமெல்லாம் நீங்கள் அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். திடீர் இடமாற்றம் உண்டு. சக ஊழியர்களின் வேலைகளை சேர்த்துப் பார்ப்பீர்கள். அயல்நாட்டு வாய்ப்புகள் வரும். 
 
கன்னிப் பெண்களே! சின்னச் சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளப்பாருங்கள். ஃபேஸ் புக், டிவிட்டரை கவனமாகக் கையாளுங்கள். சிலர் உங்களுக்கு களங்கம் விளைவிக்க முயற்சிப்பார்கள். திருமண விஷயத்தை பெற்றோரிடம் ஒப்படைத்துவிடுவது நல்லது. பள்ளி கல்லூரி கால தோழியை சந்திப்பீர்கள்.
 
மாணவ மாணவிகளே! கடைசி நேரத்தில் படிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள். கணிதப் பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். விளையாடும் போது காலில் அடிபடக்கூடும். உங்களின் தனித்திறமையை வளர்த்துக் கொள்ளப்பாருங்கள். சக மாணவர்களிடம் கவனமாகப் பழகுங்கள். அவர்கள் செய்யும் தவறுகளுக்கு உங்களை சிக்க வைப்பார்கள்.   
 

ரிஷபம்

 
பெருந்தன்மையும், சகிப்புத் தன்மையும் கொண்ட நீங்கள், இதமான பேச்சால் எல்லோரையும் கவர்ந்திழுப்பவர்கள். தன்கையே தனக்குதவி என்று வாழும் நீங்கள், கடின உழைப்பால் படிப்படியாக முன்னேறி வாழ்வின் சிகரத்தை எட்டிப் பிடிப்பவர்கள். இதுவரை ஆறாம் வீட்டில் அமர்ந்து உங்களை அவமானப்படுத்திய குருபகவான் பல கஷ்ட, நஷ்டங்களை தந்து, மறைமுக எதிர்ப்புகளால் உங்களை திணறடித்து, கடன் பிரச்னைகளால் தூக்கத்தைக் குறைய வைத்த குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 வரை ராசிக்கு 7ம் வீட்டில் அமர்ந்து உங்களை நேருக்கு நேர் பார்க்க இருப்பதால் எதிலும் உங்கள் கை ஓங்கும். வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். 
 
சிலர் வங்கிக் கடனுதவி கிடைத்து புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். மனைவி உங்களுடைய புது முயற்சிகளுக்கு பக்கபலமாக இருப்பார். அவரின் ஆரோக்யம் சீராகும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்த மோதல்களும் விலகும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மகளின் திருமணத்தை எல்லோரும் மெச்சும் படி நடத்துவீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அவருக்கும் எதிர்பார்த்த குடும்பத்திலிருந்த நல்ல பெண் அமைவார். இளைய சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள். புது பதவிக்கு உங்களுடைய பெயர் பரீசலிக்கப்படும்.
 
குருபகவானின் பார்வைப் பலன்கள்
 
குருபகவான் உங்களின் லாப வீட்டை பார்ப்பதால் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள். சமுதாயத்தில் மதிக்கத்தகுந்த அளவிற்கு கௌரவப் பதவிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. வெளிமாநில புண்ணியத் தலங்கள் சென்று வருவீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். மூத்த சகோதரங்களுடன் இருந்த பிணக்குகள் நீங்கும். உங்கள் ராசிக்கு 3ம் வீட்டை குரு பார்ப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். கோயில் பஜனைகளில் கலந்து கொள்வீர்கள்.
 
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்
 
04.10.2018 முதல் 20.10.2018 வரை உங்களின் அஷ்டமலாபாதிபதியான குருபகவான் விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. எதிர்மறை எண்ணங்கள் தலைதூக்கும். மூத்த சகோதர வகையில் சச்சரவு வரும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். புது பதவிகள், பொறுப்புகளை யோசித்து ஏற்பது நல்லது. 21.10.2018 முதல் 19.12.2018 வரை உங்களின் பாக்யாதிபதியும்ஜீவனாதிபதியுமான சனிபகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உடல் ஆரோக்யம் சீராகும். சொந்தமாக வீடு கட்டுவீர்கள். வேலை கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். ஷேர் மூலம் பணம் வரும். கல்யாணம் கூடி வரும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். 20.12.2018 முதல் 12.03.2019 வரை மற்றும் 09.08.2019 முதல் 27.10.2019 வரை உங்களின் தனபூர்வபுண்ணியாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால் தடைப்பட்ட வேலைகள் முடியும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். குழந்தை பாக்யம் உண்டாகும். பிள்ளைகளால் சொந்தபந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பூர்வீக சொத்து கைக்கு வரும்.
 
குருபகவானின் அதிசார வக்ர சஞ்சாரம்
 
13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 8ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் மறைமுக எதிர்ப்புகள், பணப்பற்றாக்குறை, இனந்தெரியாத கவலைகள் வந்து செல்லும்.
 
குருபகவானின் வக்ர சஞ்சாரம்
 
10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் மனக்குழப்பம், பூர்வீக சொத்துப் பிரச்னை, வீண் டென்ஷன் வந்து செல்லும். பிள்ளைகளை அன்பாக நடத்துங்கள். உங்களுடைய கனவுகளை அவர்கள் மீது திணிக்க வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். கோயில் கும்பாபிஷேகம் மற்றும் கல்யாண விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். மனைவி உங்களைப் புரிந்து கொள்வார். புது வாகனம் வாங்குவீர்கள்.
 
வியாபாரத்தில் அடுத்தடுத்து சில நஷ்டங்களை சந்தித்தீர்களே! எதிலும் ஆர்வமில்லாமல் இருந்தீர்களே! பலரிடம் ஏமாந்தீர்களே! இனி சில சூட்சுமங்களையும், ரகசியங்களையும் தெரிந்து கொண்டு அதற்கேற்ப லாபம் ஈட்டுவீர்கள். புதுத் தொடர்புகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். புதிய நண்பர்களால் வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் வரும். அயல்நாட்டிலிருப்பவர்களும் உதவுவார்கள். உங்கள் கருத்துகளுக்கு, புதிய முயற்சிகளுக்கு மறுப்பு தெரிவிக்காத நல்லவர் பங்குதாரராக வருவார். சிலர் செய்து கொண்டிருக்கும் தொழிலை விட்டு விட்டு வேற்று தொழிலில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது. புரோக்கரேஜ், ஏற்று மதிஇறக்குமதி, கன்ஸ்ட்ரக்ஷன், பதிப்பகம், கட்டிட உதிரி பாகங்கள், அரிசி மண்டி வகைகளால் லாபம் அதிகரிக்கும். 
 
உத்யோகத்தில் ஓடி ஓடி வேலை பார்த்தும் கெட்ட பெயர்தானே கிடைத்தது! இனி முடங்கிக் கிடந்த நீங்கள் புத்துயிர் பெறுவீர்கள். உங்களின் தனித்தன்மை வெளிப்படும். மேலதிகாரியின் சொந்த விஷயங்களில் தலையிடும் அளவிற்கு நெருக்கமாவீர்கள். அதிகாரிகளுடன் அரவணைத்துப் போகும் மனப்பக்குவம் உண்டாகும். அவர்களின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதமின்றி கிடைக்கும். சிலர் உத்யோகம் சம்பந்தமாக அயல்நாடு சென்று வருவீர்கள். சக ஊழியர்களில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களின் மனது மாறும். 
 
கன்னிப்பெண்களே! நல்லவர்களின் நட்பு கிடைக்கும். கூடுதல் மொழி கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள். காதல் கைகூடும். வேலை கிடைக்கும். உயர்கல்வி, மேற்படிப்பு தொடர விரும்புபவர்களுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர கடிதம் வரும். கல்யாணப் பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடியும்.
 
மாணவ மாணவியர்களே! எண்ணங்கள் பூர்த்தியாகும். வகுப்பறையில் அமைதி காப்பதுடன், படிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். கெட்ட நண்பர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விளையாட்டில் பரிசு பெறுவீர்கள். 
 

மிதுனம்

 
எதிலும் புதுமையை புகுத்துபவர்களில் வல்லவர்களான நீங்கள், பொது உடைமைச் சிந்தனையும் அதிகம் உள்ளவர்கள். நிறை குறைகளை அலசி ஆராய்ந்து மற்றவர்களை துல்லியமாக கணிக்கும் நீங்கள் சிரமப்படுபவர்களை கைதூக்கி விடுபவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் அமர்ந்து உங்களின் வருங்காலத் திட்டங்களை நிறைவேற்றியதுடன், குடும்ப வருமானத்தையும் ஓரளவு உயர்த்திய குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 வரை ராசிக்கு 6ம் வீட்டில் மறைகிறார். சகட குருவாச்சே! சங்கடங்களையும், எதிர்ப்புகளையும் தருவாரே என்று கலங்காதீர்கள். ஓரளவு நல்லதே நடக்கும். வாழ்க்கையின் சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். சமூகத்தின் மீதும் சின்னச் சின்ன கோபமெல்லாம் வந்து நீங்கும். 
 
சிலர் உங்களை தவறான போக்கிற்கு தூண்டுவார்கள். உதவி செய்கிறேன் என்று சொல்லியிருந்தவர்கள் உங்களுக்கு உதவாமல் போகக்கூடும். எனவே மாற்றுவழியை யோசிப்பது நல்லது. சிலர் உங்களைப் பார்த்தால் புகழ்ந்து பேசுவதும், நீங்கள் இல்லாத போது உங்களை விமர்சிக்கவும் செய்வார்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். எல்லா இடங்களிலும் நான் தான் விட்டுக் கொடுத்துப் போக வேண்டுமா என்றெல்லாம் சில நேரங்களில் உணர்ச்சிவசப்படுவீர்கள். மனிதர்களின் இரட்டை வேடத்தை நினைத்து கோபப்படுவீர்கள். நீங்கள் சிரித்தால் உலகமும் சிரிக்கும், நீங்கள் கோபப்பட்டால் உலகமும் கோபப்படும் என்பதை மறந்துவிடாதீர்கள். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும்.
 
குருபகவானின் பார்வை பலன்கள்
 
குருபகவான் குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் பணவரவு உண்டு. குடும்பத்தில் நிம்மதி உண்டு. அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். சாமர்த்தியமாகப் பேசி காய் நகர்த்துவீர்கள். பழைய நகையை மாற்றி புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். மகளுக்கு திருமணம் நிச்சயமாகும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். குரு 10ம் வீட்டைப் பார்ப்பதால் புது வேலை கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். கடினமான வேலைகளையும் எளிதாக முடிக்கும் சக்தி கிடைக்கும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். குரு 12ம் வீட்டை பார்ப்பதால் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். சுபசெலவுகளும் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். நீண்ட நாட்களாக போக நினைத்த புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.  
 
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம் 
 
04.10.2018 முதல் 20.10.2018 வரை உங்களின் சப்தமஜீவனாதிபதியான குருபகவான் விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் வேலைச்சுமை, வீண் அலைச்சல், கணவன்மனைவிக்குள் மனஸ்தாபம், எதிலும் பற்றற்ற போக்கு, மனைவிக்கு மருத்துவச் செலவுகள், உத்யோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து போகும். உங்களைப் பற்றி சிலர் அவதூறு பேசுவார்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வருமான வரி, சொத்து வரிகளையெல்லாம் தாமதமின்றி செலுத்தப்பாருங்கள். வாகனம் பழுதாகி சரியாகும். 21.10.2018 முதல் 19.12.2018 வரை உங்களின் அஷ்டமபாக்யாதிபதியான சனி பகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் பணம் வரத் தொடங்கும். வருமானம் உயரும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். 
 
தந்தையின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வேற்று மதத்தவர்கள், அண்டை மாநிலத்தில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. புது பதவி, பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். 20.12.2018 முதல் 12.03.2019 மற்றும் 09.08.2019 முதல் 27.10.2019 வரை உங்கள் ராசிநாதனும் சுகாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால் திடீர் பணவரவு உண்டு. தோற்றப் பொலிவு கூடும். கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். அறிவு பூர்வமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். பழைய பிரச்னைகள் தீரும். தாயாரின் உடல் நிலை சீராகும். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் அல்லது அறை அமைப்பீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். வாகனம் வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.
 
குருபகவானின் அதிசார வக்ர சஞ்சாரம்
 
13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 7ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் அக்காலக்கட்டத்தில் செல்வாக்குக் கூடும். பணவரவு உண்டு. வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும்.
 
குருபகவானின் வக்ர சஞ்சாரம்
 
10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பூர்வீக சொத்தில் உங்கள் ரசனைக் கேற்ப சில மாற்றங்கள் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். கோயில் கும்பாபிஷேகத்தில் முதல் மரியாதை கிடைக்கும். என்றாலும் முன்கோபம், திடீர் பயணங்கள், கடன் பிரச்னைகள் வந்து செல்லும். ஷேர் மூலம் பணம் வரும். 
 
வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்து லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்கள் முரண்டு பிடிப்பார்கள். அவர்களிடம் வேலை வாங்குவதற்குள் அவர்களை எதிர்பார்க்காமல் நாமே அந்த வேலையை செய்து விடலாம் என்று முடிவெடுப்பீர்கள். தொழிலில் போட்டி அதிகமாகும். வாடிக்கையாளர்களை கடிந்து 
கொள்ளாதீர்கள். 
 
உத்யோகத்தில் என்னதான் உண்மையாக உழைத்தாலும் எந்த பலனும் இல்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். உண்மையாக இருப்பது மட்டும் போதாது உயரதிகாரிகளுக்கு தகுந்தாற்போலும் பேசும் வித்தையையும் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற முடிவிற்கு வருவீர்கள். சக ஊழியர்களின் விடுப்பால் வேலைச்சுமை அதிகமாகும். வேறு சிலர் செய்த தவறுகளுக்கெல்லாம் நாம் பலிகடா ஆகி விட்டோமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள். புது உத்யோக வாய்ப்புகள் வந்தாலும் பொறுத்திருந்து செயல்படுவது நல்லது. உத்யோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் கொஞ்சம் இழுபறி நிலை நீடிக்கும். 
 
கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். பெற்றோருடன் இருந்து வந்த கருத்து மோதல் நீங்கும். வெளி மாநிலத்தில் வேலை கிடைக்கும். உங்கள் ரசனைக்கேற்ற வாழ்க்கைத் துணை அமையும்.
 
மாணவ மாணவிகளே! யோகா, தியானம் செய்து நினைவாற்றலை அதிகப்படுத்தப்பாருங்கள். உயர்கல்வியில் விளையாட்டுத்தனம் வேண்டாம். நுழைவுத் தேர்வு, போட்டித் தேர்வுக்கு முழு நேரம் ஒதுக்கி தயார்படுத்திக் கொள்ளுங்கள். வகுப்பறையில் கேள்வி கேட்க தயக்கம் வேண்டாம்.
 

 கடகம்

 
தொலை தூரச்சிந்தனையுடைய நீங்கள், நாளை நமதே என்ற நம்பிக்கையுடன் எதையும் செய்பவர்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் நீங்கள், எதிரிகளையும் சிந்திக்க வைக்கும் செயல்திறன் கொண்டவர்கள். இதுவரை உங்களின் ராசிக்கு சுகவீடான 4ம் வீட்டில் அமர்ந்து கொண்டு வீண் விரயத்தையும், ஏமாற்றங்களையும், இனம்புரியாத பயத்தையும், தாயாருடன் பகைமையையும் ஏற்படுத்திய குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 வரை ராசிக்கு 5ம் வீட்டில் அமர்வதால் உங்களை புதிய பாதையில் பயணிக்க வைப்பார். உங்கள் வாழ்வில் எதிர்பாராத அதிரடி மாற்றங்கள் உண்டாகும். அடிப்படை வசதி, வாய்ப்புகள் உயரும். தயக்கம், தடுமாற்றம் நீங்கும். 
 
குழப்பங்களிலிருந்து விடுபட்டு தெள்ளத் தெளிவாக சில முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். வீடு கல்யாணம், கச்சேரி என்று வீடு களைகட்டும். குடும்பத்தில் கலகமூட்டியவர்களை இனம் கண்டறிந்து ஒதுக்கித் தள்ளுவீர்கள். வீண் சந்தேகத்தாலும், சச்சரவுகளாலும் பேசாமல் இருந்த கணவன் மனைவிக்குள் இனி அன்யோன்யம் பிறக்கும். மகளின் திருமணத்தை கோலாகலமாக நடத்துவீர்கள். மகனுக்கும் நல்ல இடத்தில் மணப்பெண் அமையும். அவருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பும் வரும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். பூர்வீக சொத்து பங்கு கைக்கு வரும். தாயாருக்கு இருந்த நோய் விலகும். அவருடனான மோதல்களும் நீங்கும். தாய்வழி உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். 
 
குருபகவானின் பார்வை பலன்கள்
 
குரு உங்களின் 9ம் வீட்டை பார்ப்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். கோயில் கும்பாபிஷேகத்தை தலைமையேற்று நடத்துவீர்கள். தந்தையாருடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். அவரின் ஆரோக்யம் சீராகும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பதினோறாவது வீட்டை குரு பார்ப்பதால் உங்களின் புகழ், கௌரவம் கூடும். மூத்த சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். 
 
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்
 
04.10.2018 முதல் 20.10.2018 வரை உங்களின் சஷ்டமபாக்யாதிபதியான குருபகவான் சுய நட்சத்திரமான விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் பணப்புழக்கம் கணிசமாக உயரும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். எதிர்ப்புகள் குறையும். கல்யாணம் கூடி வரும். குடும்பத்தில் இருந்த சச்சரவு குறையும். வழக்கு சாதகமாகும். தந்தையார் ஆதரிப்பார். அவருக்கு இருந்த ஆரோக்யக் குறைவு சீராகும். பிதுர்வழி சொத்து பிரச்னை முடிவுக்கு வரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். 21.10.2018 முதல் 19.12.2018 வரை உங்களின் சப்தஅஷ்டமாதிபதியான சனி பகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும். வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். 
 
உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். கடன் பிரச்னையால் கௌரவத்திற்கு பங்கு வந்துவிடுமோ என்ற அச்சமும் வரும். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். 20.12.2018 முதல் 12.03.2019 மற்றும் 09.08.2019 முதல் 27.10.2019 வரை சேவகாதிபதியும் விரயஸ்தானாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் குரு செல்வதால் திடீர் பயணங்கள், வீண் செலவுகள், கனவுத் தொல்லை, சளித் தொந்தரவு, கழுத்து வலி, வாகனப் பழுது வந்து நீங்கும். இளைய சகோதரங்களால் சங்கடங்கள் வரும். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. 
 
குருபகவானின் அதிசார வக்ர சஞ்சாரம்:
 
13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 6ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் அக்காலக்கட்டத்தில் வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். வீட்டிலும் கழிவு நீர் குழாய் அடைப்பு, குடி நீர் குழாய் அடைப்பு வந்து நீங்கும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் அவ்வப்போது பழுதாகும். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம்.
 
குருபகவானின் வக்ர சஞ்சாரம்
 
10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். சாணக்கியத்தனமாக பேசி காரியம் சாதிப்பீர்கள். தள்ளிப் போன விஷயங்கள் முடியும். தூரத்துச் சொந்தங்கள் தேடி வருவார்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள். ஒரு சொத்தை விற்று மறுசொத்து வாங்குவீர்கள்.
 
வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. அசல் வந்தால் போதும் என்று நினைத்திருந்த உங்களுக்கு கணிசமாக ஆதாயமுண்டாகும். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். இங்கிதமாகவும், இதமாகவும் பேசி வாடிக்கையாளர்களை கவருவீர்கள். சிலர் புது தொழில் அல்லது புது கிளைகள் தொடங்குவீர்கள். மெடிக்கல், வாகனம், கல்விக் கூடங்கள், கமிஷன் வகைகளால் லாபமடைவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கத்தால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். உங்கள் ரசனைக்கேற்ப கடையை விரிவு படுத்துவீர்கள். சிலர் சொந்த இடத்திற்கு மாற்றுவீர்கள். சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உங்கள் திட்டத்தை ஊக்குவிக்கும், உங்களை உற்சாகப்படுத்தும் பங்குதாரர் அறிமுகமாவார்.
 
உத்யோகத்தில் உங்களை எதிரியைப் போல பார்த்த மேலதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். உங்கள் கை ஓங்கும். வழக்கில் வெற்றியடைந்து இழந்த பெரிய பதவியில் மீண்டும் அமர்வீர்கள். வெகுநாட்களாக எதிர்பார்த்த பதவியுயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. புது மேலதிகாரி உங்களை புரிந்து கொள்வார். சக ஊழியர்களை திருத்துவீர்கள். இயக்கம், சங்கம் சார்பாக பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப் படுவீர்கள்.
 
கன்னிப்பெண்களே! கல்வியும் இனிக்கும், காதலும் இனிக்கும். உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். தோஷங்களால் தடைபட்ட கல்யாணம் நல்ல விதத்தில் முடியும். நினைத்ததை சாதிப்பீர்கள். எதிர்பார்த்த நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் புது வேலை அமையும். பெற்றோரின் கனவுகளை நனவாக்குவீர்கள். கூடா நட்பு விலகும்.  
 
மாணவ மாணவிகளே! நினைவாற்றல், அறிவாற்றல் கூடும். அனைத்துப் பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் குவிப்பீர்கள். ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உயர்கல்வியில் வெற்றியுண்டு. விரும்பிய கோர்ஸில் சேருவீர்கள். சக மாணவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைப்பீர்கள்.     
 

 சிம்மம்

 
போற்றுதலுக்கும், தூற்றுதலுக்கும் அஞ்சாத நீங்கள், யாருக்காகவும் தன் கொள்கைகளை மாற்றிக் கொள்ளாதவர்கள். முன் வைத்த காலைப் பின் வைக்காமல் முன்னேறும் குணமுடைய நீங்கள் திடீரென்று முடிவெடுத்து எதிரிகளை திக்குமுக்காடச் செய்துவிடுவீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களின் புதிய முயற்சிகளை முடக்கி வைத்தாரே! எந்த ஒரு வேலைகளையும் முதல் கட்டத்திலேயே முடிக்க முடியாமல் அலைக்கழித்தாரே! எதை செய்தாலும் அதில் ஒரு தயக்கத்தையும், தடுமாற்றத்தையும் ஏற்படுத்தினாரே! தந்தையாருக்கு மருத்துவச் செலவுகளையும், அவருடன் கருத்து மோதல்களையும் ஏற்படுத்திய குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 ராசிக்கு 4ம் வீட்டில் அமர்வதால் சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து செயல்படும் சாமர்த்தியத்தை கற்றுக் கொள்வீர்கள். உங்களின் பலம் எது, பலவீனம் எது என்பதை தெரிந்து கொள்வது நல்லது. 
 
கணவன்-மனைவிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். உன் சொந்தம், என் சொந்தம் என்று மோதிக் கொள்ளாமல் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உணர்ச்சி வசப்படாமல் அறிவுபூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். வீடு கட்ட அரசாங்க அனுமதி தாமதமாக கிடைக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகமாகும். தாயாருக்கு சின்னச் ச்சின்ன அறுவை சிகிச்சை, மூட்டு வலி, முதுகு தண்டில் வலி வந்து போகும். வீடு, மனை வாங்கும் போது தாய் பத்திரம், வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் சரி பார்த்து வாங்குவது நல்லது. கூடாப்பழக்க வழக்கங்கள் இலவசமாக தொற்ற வாய்ப்பிருக்கிறது. நல்லவர்களின் நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். போக்குவரத்து விதிகளை மீறி வாகனத்தை இயக்க வேண்டாம். சின்னச் சின்ன அபராதம் செலுத்த வேண்டி வரும். பூர்வீக சொத்துப் பிரச்னையில் நேரத்தை வீணடிக்காதீர்கள்.  
 
குருபகவானின் பார்வை பலன்கள்
 
குரு உங்கள் ராசிக்கு 8ம் வீட்டை பார்ப்பதால் அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். பயணங்களால் பயனுண்டு. மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் வரும். குரு உங்கள் உத்யோகஸ்தானத்தை பார்ப்பதால் சிலருக்கு புது வேலை கிடைக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும். குரு 12ம் வீட்டை பார்ப்பதால் புகழ் பெற்ற புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். வீட்டில் கூடுதல் அறை கட்டுவீர்கள்.  
 
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்
 
04.10.2018 முதல் 20.10.2018 வரை உங்களின் பூர்வ புண்யாதிபதியும்அஷ்டமாதிபதியுமான குருபகவான் தன் சாரமான விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு அயல்நாடு சென்று படிக்கும் வாய்ப்பு வரும். பூர்வீக சொத்து கைக்கு வரும். வாகனத்தை மாற்றுவீர்கள். 21.10.2018 முதல் 19.12.2018 வரை உங்களின் சஷ்டமசப்தமாதிபதியான சனி பகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் பிறர் மீது நம்பிக்கையின்மை, அசதி, சோர்வு, சுபச் செலவுகள் வந்து போகும். திடீரென்று அறிமுகமாகுபவரை நம்பி வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். மறதியால் விலை உயர்ந்த பொருட்களை இழக்க நேரிடும். 
 
வேலைச்சுமையால் மனைவி கோபப்படுவார். பழைய கசப்பான சம்பவங்களை மனைவியிடம் விவாதிக்காதீர்கள். அவரின் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். 20.12.2018 முதல் 12.03.2019 மற்றும் 09.08.2019 முதல் 27.10.2019 வரை தனாதிபதியும் லாபாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் மனஅழுத்தம், டென்ஷன் அதிகரிக்கும். சில சமயங்களில் தனிமைப்படுத்தப் பட்டதைப் போல் உணர்வீர்கள். பணப்பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சி செய்வார்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும். வாகனத்தை இயக்கும் போது அலைபேசியை தவிர்ப்பது நல்லது.
 
குருபகவானின் அதிசார வக்ர சஞ்சாரம்
 
13.3.2019 முதல் 18.5.2019 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 5ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் பணவரவு உண்டு. செல்வாக்கு அதிகரிக்கும். மகளுக்கு திருமணம் கூடி வரும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாகும். மகனுக்கு இருந்த கூடாபழக்க வழக்கங்கள் நீங்கும்.   
 
குருபகவானின் வக்ர சஞ்சாரம்
 
10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் திடீர் திருப்பம் உண்டாகும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் பலிதமாகும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். சிலர் வீடு மாற வேண்டுமென்று நினைப்பீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். புது பதவி, பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சிலர் வீட்டில் கூடுதலாக அறை அல்லது தளம் அமைப்பீர்கள். 
 
வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்து கொண்டேயிருக்கும். அவ்வப்போது மாறி வரும் சந்தை நிலவரத்திற்கேற்ப முதலீடு செய்து லாபம் ஈட்டப்பாருங்கள். தொழில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். விளம்பர யுக்திகளை கையாளுங்கள். வேலையாட்கள் அடிக்கடி விடுப்பில் செல்வார்கள். கடையை வேறிடத்திற்கு மாற்ற வேண்டிய நிர்பந்தத்திற்குள்ளாவீர்கள். ரியல் எஸ்டேட், புரோக்கரேஜ், உணவு, துணி வகைகளால் லாபமடைவீர்கள். வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். பங்குதாரர்களுடன் மோதல்கள் வெடிக்கும். சிலர் நம்பிக்கையான பங்குதாரரை விட்டுப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும்.        
 
உத்யோகத்தில் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும். உயரதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொள்வார்கள். கூடுதல் நேரம் ஒதுக்கி நீங்கள் உழைத்த போதும் அதற்கு எவ்வித பாராட்டும் இல்லாமல் போகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அடிக்கடி இடமாற்றம் வரும். சில நேரங்களில் உங்களின் அடிப்படை உரிமைக்காகக் கூட போராட வேண்டி வரும். எதிர்பார்த்த சலுகைகளும், சம்பள உயர்வும் தாமதமாக கிடைக்கும். 
 
கன்னிப் பெண்களே! கல்யாணம் கூடி வரும். காதல் விவகாரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். பெற்றோரின் முடிவுகளை ஏற்றுக் கொள்ளுங்கள். வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும். உயர்கல்வியிலும் முன்னேற்றம் உண்டு. தாயாரை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். புதிய நண்பர்களிடம் கவனமாக பழகுங்கள்.  
 
மாணவ மாணவிகளே! தொடக்கத்திலிருந்தே படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். எதிர்பார்த்த கல்விப் பிரிவில், கல்வி நிறுவனத்தில் சேர அதிகம் செலவு செய்ய வேண்டி வரும். பொது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.
 

கன்னி

 
கனவிலும், கற்பனையிலும் மாறிமாறி சஞ்சரிக்கும் நீங்கள் நிஜத்தைத் தேடி அலைவீர்கள். பேதம் பார்க்காமல் எல்லோரிடமும் சமமாகப் பழகும் நீங்கள், பலரையும் வழிநடத்திச் செல்லும் அளவிற்குப் பட்டறிவு கொண்டவர்கள். விட்டுக் கொடுக்கும் மனது கொண்ட நீங்கள், எல்லோரையும் அன்பால் அரவணைப்பவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு தனஸ்தானமான 2ம் வீட்டில் அமர்ந்து கொண்டு பணப்புழக்கத்தையும், சமூகத்தில் அந்தஸ்தையும், வசதி, வாய்ப்புகளையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தந்த குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 வரை ராசிக்கு 3ம் வீட்டில் அமர்வதால் எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். எந்த ஒரு வேலைகளையும் முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வாயுக் கோளாறால் நெஞ்சு வலிக்கும். இளைய சகோதர வகையில் பிணக்குகள் வரும். 
 
வீண் வறட்டு கௌரவத்திற்காக சேமிப்பை கரைத்துக் கொண்டிருக்காதீர்கள். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். திடீரென்று அறிமுகமாகுபவரை நம்பி வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். வாகனத்தில் செல்லும் போது தவறாமல் தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். மற்றவர்களை நம்பி குறுக்கு வழியில் செல்ல வேண்டாம். கணவன் மனைவிக்குள் சச்சரவுகள் வந்தாலும், அன்பும், அன்யோன்யமும் குறையாது. மற்றவர்களை நம்பி முக்கிய விஷயங்களை ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. தங்க நகைகளை கவனமாகக் கையாளுங்கள். அக்கம்பக்கம் வீட்டாருடன் அளவாகப் பழகுங்கள். சிலர் உங்களை நேரில் பார்க்கும் போது நல்லவர்களாகவும், பார்க்காத போது உங்களைப் பற்றி தவறாகவும் சொல்லிக் கொண்டிருப்பார்கள். உறவினர், நண்பர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். இடைவெளி விட்டுப் பழகுவது நல்லது. வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். வீடு கட்டுவது, வாங்குவது போன்ற முயற்சிகள் தாமதமாகி முடியும்.
 
குருபகவானின் பார்வை பலன்கள்
 
குரு உங்கள் ராசிக்கு 7ம் வீட்டை பார்ப்பதால் மனைவிவழியில் உதவிகள் உண்டு. கூடாப்பழக்கம் விலகும். கனவுத் தொல்லை குறையும். குரு 9ம் வீட்டை பார்ப்பதால் பணவரவு உண்டு. தந்தைவழி சொத்துக்கள் கைக்கு வரும். வேலை கிடைக்கும். குரு லாப வீட்டை பார்ப்பதால் மூத்த சகோதரர் ஆதரவாக இருப்பார். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள்.    
 
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்
 
04.10.2018 முதல் 20.10.2018 வரை உங்களின் சுகசப்தமாதிபதியான குருபகவான் தன் சாரமான விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் தாயாருக்கு நெஞ்சு எரிச்சல், முதுகுத் தண்டில் வலி வந்து போகும். அவருடன் வீண் விவாதங்களும் வரக்கூடும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள், பிரேக் எல்லாம் சரி பார்த்துச் செல்வது நல்லது. சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். 21.10.2018 முதல் 19.12.2018 வரை உங்களின் பூர்வ புண்யாதிபதியும் சஷ்டமாதிபதியுமான சனி பகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். 
 
பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். சொந்த பந்தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். ஹிந்தி, தெலுங்கு மொழி பேசுபவர்களால் பயனடைவீர்கள். 20.12.2018 முதல் 12.03.2019 மற்றும் 09.08.2019 முதல் 27.10.2019  வரை உங்களின் ராசியாதிபதியும்ஜீவனாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால் கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். அழகு, அறிவு கூடும். குடும்பத்திலும் சந்தோஷம் குடிகொள்ளும். புதிதாக சொத்து வாங்குவீர்கள். உடல் நலம் சீராகும். நட்பு வட்டம் விரிவடையும். உத்யோகத்தில் செல்வாக்கு உயரும். பெரிய பதவியில் இருக்கும் உங்களுடைய பழைய நண்பரால் ஆதாயமடைவீர்கள்.
 
குருபகவானின் அதிசார வக்ர சஞ்சாரம்
 
13.3.2019 முதல் 18.5.2019 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 4ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் அவ்வப்போது ஒரு வெறுமையை உணருவீர்கள். ஒருவித படபடப்பு, ஹார்மோன் பிரச்னை, ஈகோவால் கணவன்மனைவிக்குள் சச்சரவு வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை ஏற்படும். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள்.
 
குருபகவானின் வக்ர சஞ்சாரம்
 
10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வேற்றுமாநிலம் அல்லது வெளிநாட்டில் வேலை அமையும். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீடு வாங்குவீர்கள்.
 
வியாபாரிகளே! சில சூட்சுமங்களையும், ரகசியங்களையும் தெரிந்து கொண்டு அதற்கேற்ப லாபம் ஈட்டுவீர்கள். பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். புதிய நண்பர்களால் வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் வரும். வேலையாட்களிடம் கண்டிப்பு காட்ட வேண்டாம். தரமானப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். கட்டிட உதிரி பாகங்கள், ஸ்டேஷனரி, பெட்ரோகெமிக்கல், டிராவல்ஸ் வகைகளால் ஆதாயமடைவீர்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். பங்குதாரர்களில் ஒருவர் உங்களை ஆதரித்தாலும் மற்றொருவர் மூலமாக குடைச்சல்கள் இருக்கும்.   
 
உத்யோகஸ்தர்களே! சின்னச் சின்ன அலைக்கழிப்புகள் இருக்கும். மேலதிகாரியின் குறை, நிறைகளையெல்லாம் சுட்டிக் காட்ட வேண்டாம். பணிகளை கொஞ்சம் போராடி முடிக்க வேண்டி வரும். சக ஊழியர்களின் கடின உழைப்பால் தடைப்பட்ட வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். தேர்வில் வெற்றி பெற்று உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். என்றாலும் தன்நிலையை தக்க வைத்துக் கொள்ள கொஞ்சம் போராட வேண்டி வரும். சம்பள பாக்கி கைக்கு வரும். உயரதிகாரிகளின் பார்வை உங்கள் மீது திரும்பும். இடமாற்றம் சாதகமாகும்.  
 
கன்னிப்பெண்களே! சிலர் தடைப்பட்ட உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு கிட்டும். காதல் கசக்கும். உங்கள் ரசனைக்கேற்ப நல்ல வரன் அமையும். பெற்றோருடன் இருந்த மனத்தாங்கல்கள் நீங்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று வேலையில் அமருவீர்கள். 
 
மாணவ மாணவிகளே! விரும்பிய கல்விப் பிரிவில் எதிர்பார்த்த நிறுவனத்தில் சேருவீர்கள். அறிவாற்றல் கூடும். சின்னச் சின்ன தவறுகளையும் திருத்திக் கொள்ளுங்கள். நட்பு வட்டம் விரிவடையும். வகுப்பறையில் ஆசிரியரிடம் தயங்காமல் சந்தேகங்களைக் கேளுங்கள்.
 

துலாம்

 
எந்த ஊர் சென்றாலும் சொந்த ஊரை மறவாத நீங்கள் அவ்வப்போது கடந்த கால நினைவுகளில் மூழ்குவீர்கள். வாழ்க்கையின் உச்சகட்டத்தை எட்டிய பிறகும் கூட விழுந்து கிடந்ததை மறக்காதவர்களே! தோல்வி என்பது வெற்றிக்கான ஏணிப்படி தான் என்பதை உணர்ந்த நீங்கள், கடின உழைப்பாளிகள். இதுவரையில் உங்கள் ராசிக்குள் ஜென்ம குருவாக அமர்ந்து வாழ்க்கை மீது ஒருவித வெறுப்பையும், சலிப்பையும் ஏற்படுத்தினாரே! எங்கு சென்றாலும் ஏமாற்றங்களையும், இழப்புகளையும் தந்தாரே! குடும்பத்திலும் உங்களுக்கென்று ஒரு தனித்துவம் இல்லாமல் செய்தாரே! எவ்வளவு உழைத்தாலும் நல்ல பெயர் இல்லையே என்று ஆதங்கப்பட்டு புலம்ப வைத்தாரே! இப்படி பலவகையிலும் இன்னல்களை மாறி மாறித் தந்து மனதில் அமைதியே இல்லாமல் நிலை குலையச் செய்த குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 வரை உங்கள் ராசியை விட்டு விலகி தன வீடான 2ம் வீட்டில் அமர்வதால் தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். 
 
குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால் இனி மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன், மனைவி ஒன்று சேருவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.  தாழ்வு மனப்பான்மை, தோல்விமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். கூடாப்பழக்கமுள்ளவர்களின் நட்பை விட்டு முழுமையாக விலகுவீர்கள். விலை உயர்ந்த தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனம், மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். இனந்தெரியாத கவலைகளால் தூக்கமில்லாமல் தவித்தீர்களே! இனி ஆழ்ந்த உறக்கம் வரும். நீண்ட நாட்களாக போக நினைத்த புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். தந்தையாருடன் இருந்த மோதல்கள் விலகும். அவரின் ஆரோக்யமும் சீராகும். பாகப்பிரிவினை சுமூகமாக முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.  
 
குருபகவானின் பார்வைப் பலன்கள்
 
குரு உங்கள் ராசிக்கு 6ம் வீட்டை பார்ப்பதால் கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். பெரிய நோயிலிருந்து விடுபடுவீர்கள். குரு 8ம் வீட்டை பார்ப்பதால் வெளிநாடு செல்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். ஆயுள் கூடும். வேற்றுமதத்தினர் உதவுவார். குரு 10ம் வீட்டை பார்ப்பதால் பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். உங்கள் கல்வித் தகுதிக் கேற்ப நல்ல வேலை கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.  
 
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்
 
04.10.2018 முதல் 20.10.2018 வரை உங்களின் சேவகாதிபதியும், சஷ்டமாதிபதியுமான குருபகவான் விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்காதீர்கள். உங்களின் தனித்தன்மையை இழந்துவிடாதீர்கள். 21.10.2018 முதல் 19.12.2018 வரை உங்களின் சுக, பூர்வ புண்யாதிபதியான சனிபகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் புதிய யோசனைகள் பிறக்கும். பிள்ளைகளால் சொந்த பந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். 
 
புது வேலை கிடைக்கும். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிட்டும்.வேற்றுமதத்தவர்கள், மொழியினர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பூர்வீக சொத்தால் வருமானம் வரும். 20.12.2018 முதல் 12.03.2019 வரை மற்றும் 09.08.2019 முதல் 27.10.2019 வரை உங்களின் பாக்யாதிபதியும் விரயாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால் பணவரவு உண்டு. புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். தந்தை மற்றும் தந்தைவழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும்.
 
குருபகவானின் அதிசார வக்ர சஞ்சாரம்
 
13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் அதிசார வக்ரமாகி செல்வதால் இக்காலக்கட்டத்தில் தலைசுற்றல், அடிவயிற்றில் வலி, வீண் பழி வந்துசெல்லும். சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். மனைவிவழியில் செலவுகள் அதிகமாகும். 
 
குருபகவானின் வக்ர சஞ்சாரம்
 
10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களைப் பற்றி மற்றவர்களிடம் விவாதிக்க வேண்டாம். தூக்கம் குறையும். நண்பர்களுடன் மோதல்கள் வரும். யூரினரி இன்ஃபெக்‌ஷன், தோலில் நமைச்சல், மறதியும், பித்தத்தால் தலைச்சுற்றலும் வந்து நீங்கும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். இடையிடையே பணவரவும், வி.ஐ.பி தொடர்பும் கிடைக்கும்.   
 
வியாபாரத்தில் கடந்த ஓராண்டு காலமாக ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். ரெட்டிப்பு லாபம் உண்டு. புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். முரண்டுபிடித்த வேலையாட்கள் இனி ஒத்துழைப்பார்கள். புது வாடிக்கையாளர்களின் வருகையால் உற்சாகமடைவீர்கள். சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள்.  சிலர் சொந்த இடத்திற்கு கடையை மாற்றி அழகுபடுத்துவீர்கள். சிலர் சில்லரை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்திற்கு மாறுவீர்கள். சங்கம், இயக்கம் இவற்றில் கௌரவ பதவிகள் தேடி வரும். ஹார்டுவேர், இரும்பு, வாகனம், மூலிகை வகைகளால் லாபமடைவீர்கள். அரசாங்கத்தால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் இணைவார். 
 
உத்யோகத்தில் ஆர்வம் இல்லாமல் இருந்தீர்களே! சிறுசிறு அவமானங்களையும் சந்தித்தீர்களே! இனி உங்கள் உழைப்பிற்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும். உயரதிகாரிகளின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள். ஓரங்கட்டி ஒதுக்கப்பட்டிருந்த உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த சக ஊழியர்களும் மதிக்கத் தொடங்குவார்கள். உங்கள் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.  
 
கன்னிப்பெண்களே! அலர்ஜி, வயிற்று வலி விலகும். உண்மையான காதல் எது என்பதை உணருவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தையும் சாதகமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று புது வேலையில் அமருவீர்கள். மொழி அறிவுத் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். பெற்றோரின் அரவணைப்பு உண்டு. 
 
மாணவ, மாணவிகளே! நினைவாற்றல் கூடும். படிப்பில் இருந்த அலட்சியப் போக்கு மாறும். கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். வகுப்பறையில் சக மாணவர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். அரசியல்வாதிகளே! தலைமையே வியந்து பாராட்டுமளவிற்கு உங்களுடைய களப்பணி சிறப்பாக இருக்கும். எதிர்க்கட்சியினரை உங்களுடைய காரசாரமான பேச்சால் அசர வைப்பீர்கள். பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.
 

விருச்சிகம்

 
விரிவான சிந்தனையும், வேடிக்கையான பேச்சும், வினோதப் போக்கும் கொண்ட நீங்கள், நாலும் அறிந்தவர்கள். தன்மானம் அதிகமுள்ள நீங்கள் தயவு, தாட்சண்யம் அதிகம் பார்ப்பவர்கள். விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ள மாட்டீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு வீண் அலைச்சல், விரயச் செலவுகள், ஏமாற்றங்கள், தூக்கமின்மையை தந்து கொண்டிருந்த குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 வரை உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜென்ம குருவாக அமர்வதால் பொறுப்புகளும், வேலைச்சுமையும் அதிகரிக்கும். ஒரு தேடலும், நிம்மதியற்ற போக்கும் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களை எதிர்ப்பீர்கள். அவசரப்பட்டு வாக்குறுதி தந்து அதை நிறைவேற்ற முடியாமல் திணறுவீர்கள். 
 
ஜென்ம குருவாக இருப்பதால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். யாரிடமாவது சண்டைபோட வேண்டுமென நினைப்பீர்கள். உங்களைப்பற்றி தவறாக எப்போதோ எங்கேயோ யாரோ சொன்னதெல்லாம் இப்போது நினைவிற்கு வந்து புலம்புவீர்கள். சாப்பாட்டில் உப்பைக் குறையுங்கள். ரத்த அழுத்தம் அதிகமாகும். பெரிய நோய் இருப்பதாக நினைத்து பயம் வரும். உங்கள் இயல்புக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். தங்க ஆபரணங்களை இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம். வங்கியில் உங்கள் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு காசோலை தருவது நல்லது. திடீரென்று அறிமுகமாகுபவரை நம்பி முடிவுகள் எடுக்க வேண்டாம்.
 
குருபகவானின் பார்வை பலன்கள்
 
குரு உங்கள் ராசிக்கு 5ம் வீட்டைபார்ப்பதால் குழந்தை பாக்கியம் உண்டு. பூர்வீக சொத்துப் பிரச்னைகள் கொஞ்சம் கொஞ்சமாக தீரும். சிலர் தங்களது பங்கை விற்று நகரத்தை ஒட்டி இடம் வாங்குவீர்கள். தியானம், பொது சேவையில் மனம் ஈடுபாடு கொள்ளும். மகளுக்கு நல்ல வரன் அமையும். குரு 7ம் வீட்டைப் பார்ப்பதால் தள்ளிப் போன திருமணம் கூடி வரும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். கணவன், மனைவிக்குள் சச்சரவு இருந்தாலும் பாசம் குறையாது.
 
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்
 
04.10.2018 முதல் 20.10.2018 வரை உங்களின் தன, பூர்வபுண்யாதிபதியான குருபகவான் தன் சாரமான விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக் கட்டத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும். வி.ஐ.பிகளின் தொடர்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். 21.10.2018 முதல் 19.12.2018 வரை உங்களின் சேவகாதிபதியும், சுகாதிபதியுமான சனி பகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் வேலைச்சுமையால் பதட்டப்படுவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் முடியாமல் போனாலும் எதிர்பாராத காரியங்கள் முடிவடையும். வீட்டில் கழிவு நீர் குழாய், குடி நீர் குழாய் பழுதாக வாய்ப்பிருக்கிறது. 
 
தாயாருக்கு மூட்டு வலி, எலும்பு தேய்மானம் வரக்கூடும். அவருடன் ஆரோக்யமான விவாதங்களும் வந்து போகும். இளைய சகோதர வகையில் சங்கடங்கள் வரும். அநாவசிய செலவுகளைத் தவிர்க்கப்பாருங்கள். சிலர் பழைய வீட்டை இடித்துக் கட்டுவீர்கள். வாகனம் வாங்குவீர்கள். 20.12.2018 முதல் 12.03.2019 வரை மற்றும் 09.08.2019 முதல் 27.10.2019 வரை அஷ்டமாதிபதியும், லாபாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால் மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். உறவினர், நண்பர்களால் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துப் பராமரிப்புச் செலவுகள் வந்து போகும். தொண்டைப் புகைச்சல், சளித் தொந்தரவு, காய்ச்சல், மறைமுக நெருக்கடிகள், வாகன விபத்துகள் வந்து செல்லும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். அயல் நாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். நட்பு வட்டம் விரியும்.
 
குருபகவானின் அதிசார வக்ர சஞ்சாரம்
 
13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் அதிசார வக்ரத்தில் செல்வதால் திடீர் பணவரவு உண்டு. அரசால் ஆதாயமடைவீர்கள். சிலருக்கு வீடு, மனை அமையும். திருமண முயற்சிகள் பலிதமாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். உங்களை விட வயதில் குறைந்தவர்கள் மூலமாக ஆதாயமடைவீர்கள். அரசு காரியங்கள் உடனே முடியும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் கிடைக்கும்.
 
குருபகவானின் வக்ர சஞ்சாரம்
 
10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். வி.ஐ.பி ஒருவரின் அறிமுகம் திருப்புமுனையை உண்டாக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். உங்கள் ரசனைக் கேற்ப வீடு, வாகனம் அமையும். ஊர் பொது நிகழ்ச்சிகளையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள்.
 
வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலைவிடாதீர்கள். புதிதாக வரும் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறுவீர்கள். சின்னச் சின்ன நஷ்டங்களும், ஏமாற்றங்களும் இருக்கத் தான் செய்யும். புது முடிவுகளோ, முதலீடுகளோ வேண்டாம். பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். யாருக்கும் முன் பணம் தந்து ஏமாற வேண்டாம். வேலையாட்களுக்கு எவ்வளவு உதவினாலும் நன்றி மறந்த நிலையில் நடந்து கொள்கிறார்கள் என்று வருத்தப்படுவீர்கள். தெரியாத தொழிலிலும் இறங்க வேண்டாம். கூட்டுத் தொழிலை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. வேறு வழியில்லாமல் கூட்டுத் தொழில் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் முறைப்படி ஒப்பந்தங்களை பதிவு செய்வது நல்லது.
 
உத்யோகத்தில் நாளுக்கு நாள் வேலைச்சுமை கூடிக் கொண்டே போகும். அலுவலக ரகசியங்களை வெளியே சொல்ல வேண்டாம். உங்களின் திறமையை பயன்படுத்தி வேறு சிலர் முன்னேறுவார்கள். வேலையில் நீடிப்போமோ, நீடிக்க மாட்டோமோ என்ற சந்தேகம் தினந்தோறும் எழும். நீங்கள் எவ்வளவு உழைத்தாலும் நற்பெயர் கிடைக்காது சின்னச் சின்ன குறைகளை நேரடி அதிகாரி சுட்டிக் காட்டிக் கொண்டேயிருப்பார். சக ஊழியர்கள் செய்யும் தவறுகளை மேலிடத்திற்கு தெரிவித்துக் கொண்டிருக்காதீர்கள். உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். முறைப்படி தேர்வெழுதி வெற்றி பெற்றும் பதவி உயர்வு, சலுகைகள், சம்பள உயர்வைப் பெற போராட வேண்டி இருக்கும்.   
 
கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் எச்சரிக்கையாக இருங்கள். யதார்த்தமாகவும், விளையாட்டாகவும் நீங்கள் எதையோ சொல்லப் போய் அதை சிலர் பெரிதாக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. பெற்றோரின் ஆலோசனைகள் இப்போது கசப்பாக இருந்தாலும் பின்னர் அது சரியானது தான் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.
 
மாணவ, மாணவிகளே! டி.வி., சினிமா எல்லாம் விட்டு விட்டு படிப்பில் முழு கவனம் செலுத்துங்கள். மறதியால் மதிப்பெண் குறையும். நொறுக்குத் தீனிகளை உண்பதைக் குறையுங்கள். அறிவியல், கணித சூத்திரங்களையெல்லாம் எழுதிப் பார்ப்பது நல்லது.  
 

தனுசு

 
மற்றவர்கள் பயந்து பின்வாங்கும் செயல்களை தானாக முன்வந்து தைரியமாக செய்யும் ஆற்றலுடைய நீங்கள், தன்னை மதியாதவர்களுக்கும் மறுக்காமல் உதவுபவர்கள். எப்போதும் நியாயத்திற்காக போராடும் நீங்கள், மனசாட்சியை முக்கிய சாட்சியாக நினைப்பவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து கொண்டு ஓரளவு வசதி, வாய்ப்புகளையும், திடீர் யோகங்களையும், பணவரவையும் தந்து கொண்டிருந்த குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 வரை ராசிக்கு 12ம் வீடான விரய ஸ்தானத்தில் மறைவதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும். செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். பிரபலமான புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பழைய வீட்டை சிலர் இடித்து புதுப்பிப்பீர்கள். சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ அப்ரூவல் கிடைத்து சிலர் புதிதாக வீடு கட்டத் தொடங்குவீர்கள். 
 
மகளுக்கு வரன் தேடும் போது விசாரித்து திருமணம் முடிப்பது நல்லது. மகனின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். கூடாப்பழக்க வழக்கங்கள் தொற்ற வாய்ப்பிருக்கிறது. விளம்பரங்களை கண்டு ஏமாந்து சோப்பு, ஷாம்புவை மாற்ற வேண்டாம். அலர்ஜி, இன்ஃபெக்‌ஷன் வரக்கூடும். மனதில் பட்டதை பளிச்சென்று பேசி மற்றவர்களின் விமர்சனத்திற்குள்ளாவீர்கள். பழைய கடனை சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். மாதம் தவறாமல் அசலை செலுத்தினாலும் வட்டி கூடிக் கொண்டேப் போகிறதே என்று அச்சப்படுவீர்கள். வாகனத்திற்கான லைசன்ஸ், இன்ஸ்யூரன்ஸை குறிப்பிட்ட காலத்திற்குள் புதுப்பிக்கத் தவறாதீர்கள். அபராதம் கட்ட வேண்டி வரும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். பழைய இழப்புகள், ஏமாற்றங்களை அசை போட்டு தூக்கத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம். சொத்துக்குரிய ஆவணங்கள், பத்திரங்கள் தொலைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த வாக்குறுதியும் தர வேண்டாம். 
 
குருபகவானின் பார்வை பலன்கள்
 
குரு உங்கள் சுகஸ்தானத்தைப் பார்ப்பதால் தாயாரின் உடல் நிலை சீராகும். அடிக்கடி பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். நல்ல காற்றோட்டம், குடிநீர் உள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். சிலர் வேறு ஊருக்கு குடிபெயர்வீர்கள். கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பை துண்டிப்பீர்கள். குரு 6ம் வீட்டை பார்ப்பதால் பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும். பெரிய நோய் இருப்பது போன்ற பிரமை நீங்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். குரு 8ம் வீட்டைப் பார்ப்பதால் ஆயுள், ஆரோக்யம் கூடும். வழக்குகள் சாதகமாகும். ஷேர் மூலம் பணம் வரும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.  
 
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்
 
04.10.2018 முதல் 20.10.2018 வரை உங்களின் ராசிநாதனும், சுகாதிபதியுமான குருபகவான் தன் சாரமான விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் எதிர்பார்த்த காரியங்கள் உடனே முடியும். பணவரவு உண்டு. ஆபரணங்கள் வாங்குவீர்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். திருமண, விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். தாயார், தாய்மாமன், அத்தை வழியில் ஆதரவு பெருகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். 21.10.2018 முதல் 19.12.2018 வரை உங்களின் தனாதிபதியும், சேவகாதிபதியுமான சனி பகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். 
 
சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாவீர்கள். தைரியம் கூடும். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வந்தாலும் பாசம் குறையாது. வேற்று மொழி பேசுபவர்கள், வேற்றுமாநிலத்தைச் சேர்ந்தவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களுடன் சேர்ந்து புது வியாபாரம் தொடங்குவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. 20.12.2018 முதல் 12.03.2019 வரை மற்றும் 09.08.2019 முதல் 27.10.2019 வரை சப்தமாதிபதியும், ஜீவனாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால் வேலைச்சுமை, எதையோ இழந்ததைப் போல் ஒரு வித கவலைகள், தாழ்வு மனப்பான்மை, எதிலும் நாட்டமின்மை, பிறர் மீது நம்பிக்கையின்மை, காய்ச்சல், நரம்புச் சுளுக்கு, கை, கால் மரத்துப் போகுதல் வந்து செல்லும். புதிதாக அறிமுகமாகுபவரை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பால்ய நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். 
 
குருபகவானின் அதிசார வக்ர சஞ்சாரம்
 
13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்குள்ளேயே கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் வீண் விரயம், ஏமாற்றம், அல்சர், கை, கால், மூட்டு வலி, யாரை நம்புவது என்கிற குழப்பம் வந்து நீங்கும். இக்காலக்கட்டத்தில் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. 
 
குருபகவானின் வக்ர சஞ்சாரம்
 
10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் கொஞ்சம் அலைச்சலும், ஏமாற்றங்களும் இருக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்கள் உங்களைப் புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்வார்கள். ஆனால் எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். சொத்து வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வீடு கட்டுவீர்கள். உடல் பருமனைக் குறைப்பீர்கள். யோகா, தியானம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும்.  
 
வியாபாரத்தில் சில புதிய அனுபவங்கள் கிடைக்கும். தேங்கிக் கிடந்த சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்று முடிப்பீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பு தந்தாலும் அவ்வப்போது முரண்டு பிடிப்பார்கள். புதிதாக அறிமுகமாகும் நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். கடையையும் நவீனமயமாக்குவீர்கள். சங்கத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் உங்களுக்கென்று தனி இடம் உண்டு. இரும்பு, உணவு, ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமென்ட் வகைகளால் லாபம் கிடைக்கும். 
 
உத்யோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்பு கிடைக்கும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். மூத்த அதிகாரிகளுடன் சின்ன சின்ன முரண்பாடுகள் வந்து போகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் நினைத்ததை முடிப்பீர்கள். வேற்றுநாட்டு நிறுவனங்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். அரசுப் பணியாளர்கள் அலுவலக ரகசியங்களை வெளியிடாமல் இருப்பது நல்லது. பதவி உயர்வையும் எதிர்பார்க்கலாம் பழைய சம்பள பாக்கியும் கைக்கு வரும்.
 
கன்னிப் பெண்களே! பரபரப்பாக காணப்படுவீர்கள். எதிர்பார்த்தபடி நல்ல இடத்தில் வரன் அமையும். உயர்கல்வியில் விடுபட்ட பாடத்தை எழுதி வெற்றி பெறுவீர்கள். மாதவிடாய்க் கோளாறு, தூக்கமின்மை வந்து நீங்கும். பெற்றோரின் நீண்ட நாள் கனவுகளை நனவாக்குவீர்கள்.
 
மாணவ, மாணவிகளே! விளையாட்டுத்தனத்தைக் குறைத்து வகுப்பறையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கணிதம், மொழிப் பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குங்கள்.   
 

 மகரம்

 
குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சமமாக மதிக்கும் நீங்கள், மற்றவர்களின் மனம் நோகாமல் பேசக்கூடியவர்கள். தடைக்கற்களை படிக்கட்டுகளாக்கி முன்னேறும் நீங்கள் ஆரவாரமில்லாமல் சாதிப்பவர்கள். கொடை குணம் கொண்ட நீங்கள் குறுகிய வட்டத்தில் வாழாமல் பரந்து விரிந்த சிந்தனை படைத்தவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு உத்யோக ஸ்தானமான 10ம் வீட்டில் அமர்ந்து கொண்டு அடுக்கடுக்கான வேலைச்சுமையையும், உங்களைப் பற்றிய அவதூறு பேச்சுக்களையும், கௌரவக் குறைவான சம்பவங்களையும் அவமானத்தையும் ஏற்படுத்திய குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 வரை ராசிக்கு 11ம் வீட்டில் அமர்வதால் இப்போது என்னவாகுமோ, அடுத்தது என்ன நடக்குமோ என்ற அச்சத்தால் கூனிக்குறுகி, ஒதுங்கியிருந்த நீங்கள், இனி வெளியுலகத்திற்கு வருவீர்கள். எந்த வேலைகளையும் முழுமையாக முடிக்க முடியாமல் தட்டுத் தடுமாறினீர்களே! குடும்பத்திலும் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் பிரச்னை வந்ததே! இனி அவற்றிற்கெல்லாம் லாப ஸ்தான குருபகவான் நல்ல தீர்வுகளைத் தருவார். கடினமான காரியங்களையும் எளிதாக முடித்து வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தையெல்லாம் திருப்பித் தருவீர்கள்.      
 
குருபகவானின் பார்வை பலன்கள்
 
உங்கள் ராசிக்கு 3ம் வீட்டை குரு பார்ப்பதால் மனோபலம் கூடும். தன்னிச்சையாக, தைரியமாக முடிவுகள் எடுக்கத் தொடங்குவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டு. டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். குரு 5ம் வீட்டை பார்ப்பதால் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி இனி தெளிவு பிறக்கும். மகளுக்கு எதிர்பார்த்த குடும்பத்திலிருந்து நல்ல வரன் அமையும். மகன் கூடாப்பழக்கங்களிலிருந்து விடுபடுவார். உங்கள் அருமையைப் புரிந்து கொள்வார். குடும்பத்தினருடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள். பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். குரு ராசிக்கு 7ம் வீட்டை பார்ப்பதால் சோர்வு, சலிப்பு நீங்கி உற்சாகமடைவீர்கள். பணவரவு உண்டு. புதிய திட்டங்கள் நிறைவேறும். வி.ஐ.பிகளின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். மனைவிவழியில் ஆதாயமடைவீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
 
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்
 
04.10.2018 முதல் 20.10.2018 வரை உங்களின் விரயாதிபதியும், சேவகாதிபதியுமான குருபகவான் தன் சாரமான விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் அவ்வப்போது பலவீனமாக இருப்பதாக நினைப்பீர்கள். சிலரை நம்பி பணம் கொடுத்து ஏமாறுவீர்கள். முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. அவசர முடிவுகள் வேண்டாம். சிலர் உங்களைத் தூண்டி விடுவார்கள். கொந்தளித்து வார்த்தைகளைக் கொட்டி விடாதீர்கள். 21.10.2018 முதல் 19.12.2018 வரை உங்களின் ராசிநாதனும், தனாதிபதியுமான சனி பகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் குடும்பத்தில் அடுத்தடுத்து மகிழ்ச்சி தங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்ததை தந்து முடிப்பீர்கள். வீரியத்தை விட காரியம் தான் முக்கியம் என்பதை உணருவீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். 20.12.2018 முதல் 12.03.2019 வரை மற்றும் 09.08.2019 முதல் 27.10.2019 வரை உங்களின் சஷ்டமாதிபதியும், பாக்யாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் குரு செல்வதால் ஷேர் மூலம் பணம் வரும். பழைய நண்பர்கள், உறவினர்கள் தேடி வருவார்கள். பூர்வீக சொத்தில் மராமத்துப் பணிகள் செய்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். தந்தைவழியில் உதவிகள் உண்டு. சொந்த, பந்தங்கள் மத்தியில் கௌரவம் கூடும்.
 
குருபகவானின் அதிசார வக்ர சஞ்சாரம்
 
13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 12ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் இருக்கும். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். சுப செலவுகளும் அதிகரிக்கும். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள்.     
 
குருபகவானின் வக்ர சஞ்சாரம்
 
10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும். பணவரவு உண்டு. வீடு கட்ட, வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். மகளுக்கு திருமணம் கூடி வரும். முக்கிய கோப்புகளில் கையெழுத்திடும் முன்பாக சட்ட ஆலோசகரை கலந்தாலோசிப்பது நல்லது. வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். சில நேரங்களில் சிலரை நினைத்து வருத்தப்படுவீர்கள். சிலர் காரியம் ஆக வேண்டுமென்றால் காலைப் பிடிக்கிறார்கள். காரியம் ஆனப்பிறகு காலை வாருகிறார்கள் என்று வருந்துவீர்கள்.
 
வியாபாரத்தில் பற்று வரவு உயரும். சந்தை நிலவரத்தை தெரிந்து கொண்டு குறைந்த முதலீடு செய்து லாபம் ஈட்டுவீர்கள். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து புது முடிவு எடுப்பீர்கள். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். புது கிளைகள் தொடங்குவீர்கள். அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் வெளிநாட்டு நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும். ஷேர், ஸ்பெக்குலேஷன், இரும்பு, கட்டிட உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள்.
 
உத்யோகத்தில் வேலைச்சுமை, மறைமுக அவமானம், எதிர்ப்புகள் இருந்ததே! உங்களுக்கு எதிராக சில அதிகாரிகளும், சக ஊழியர்களும் வேலை பார்த்தார்களே! அந்த நிலையெல்லாம் மாறும். அலுவலக சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். உங்களை உருக்குலைய வைத்த மேலதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். மூத்த அதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். அவரிடமிருந்து அலுவலக ரகசியங்களை அறிந்து கொள்வீர்கள். சக ஊழியர்களிடையே உங்களுடைய தொலை நோக்குச் சிந்தனைக்கு பாராட்டுகள் கிடைக்கும். 
 
கன்னிப் பெண்களே! காதல் இனிக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். கல்யாணமும் கூடி வரும். தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். புது உத்யோகம் அமையும். ஆடை, ஆபரணம் சேரும். பெற்றோர் உங்களின் விருப்பங்களை நிறைவேற்றுவார்கள். 
 
மாணவ, மாணவிகளே! ஏனோ தானோ என்று படிக்காமால் இனி ஆர்வத்துடன் படிப்பீர்கள். நினைவாற்றல் கூடும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். மதிப்பெண் உயரும். நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள். சக மாணவர்களின் அன்பைப் பெறுவீர்கள். 
 

கும்பம்

 
தன்கடன் பணிசெய்து கிடப்பதே என்று காலநேரம் பாராமல் கடினமாக உழைக்கும் நீங்கள், அழுதாலும் உதட்டால் புன்னகைக்கும் குணமுடையவர்கள். அமைதியை விரும்பும் நீங்கள், போட்டியென வந்து விட்டால் விஸ்வரூபம் எடுத்து மற்றவர்களை மிரள வைப்பீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் அமர்ந்து கொண்டு தொட்ட காரியங்களையெல்லாம் துலங்க வைத்ததுடன், வி.ஐ.பிகள் மத்தியில் ஒரு அந்தஸ்தையும் பெற்றுத் தந்த குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 வரை உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் நுழைந்து பலன் தரப்போகிறார். பத்தாம் இடமென்றால் பதவியை பறித்துவிடுவாரே! கையில் காசுபணம் தங்காதே! என்றெல்லாம் பதட்டப்படாதீர்கள். ஓரளவு நன்மையே உண்டாகும். சிலருக்கு வெளிநாட்டில், அண்டை மாநிலத்தில் வேலை அமையும். என்றாலும் அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். 
 
குருபகவானின் பார்வை பலன்கள்
 
குரு உங்கள் ராசிக்கு 2ம் வீட்டை பார்ப்பதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். குடும்பத்தில் நல்லது நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சொத்து சேரும். குரு ஏழாம் பார்வையால் 4ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாருடன் இருந்த மனவருத்தம் நீங்கும். கை, கால், முதுகு வலியிலிருந்து தாயார் விடுபடுவார். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். புது வீட்டில் குடி புகுவீர்கள். கணவன், மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். இருவரும் கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். நவீன ரக வாகனம், செல்போன் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவிவழியில் செல்வாக்கு உயரும். குரு 6ம் வீட்டைப் பார்ப்பதால் மாதக் கணக்கில் தள்ளிப் போன காரியங்களெல்லாம் முடிவடையும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதிக வட்டிக் கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். 
 
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்
 
04.10.2018 முதல் 20.10.2018 வரை உங்களின் தனாதிபதியும், லாபாதிபதியுமான குருபகவான் தன் சாரமான விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் கடனாகக் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீட்டை விரிவுபடுத்துவது, அழகுபடுத்துவது போன்ற முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தில் நல்லது நடக்கும். மழலை பாக்கியம் கிடைக்கும். புது பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். என்றாலும் செலவுகளும், வேலைச்சுமையும் இருந்து கொண்டேயிருக்கும். மூத்த சகோதர வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். 21.10.2018 முதல் 19.12.2018 வரை உங்களின் ராசிநாதனும், விரயாதிபதியுமான சனி பகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் திடீர் செல்வாக்கு, யோகம், பணவரவு உண்டாகும். 
 
வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வேற்றுமதத்தவர்கள், மொழியினர்கள், மாநிலத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். புதிய நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். செலவுகளை க் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். 20.12.2018 முதல் 12.03.2019 வரை மற்றும் 09.08.2019 முதல் 27.10.2019 வரை உங்களின் பூர்வ புண்யாதிபதியும், அஷ்டமாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் குரு செல்வதால் பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். பிள்ளைகளால் சொந்த, பந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். மகளின் பிடிவாத குணம் மாறும். மகனின் உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாகும்.
 
குருபகவானின் அதிசார வக்ர சஞ்சாரம்
 
13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 11ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் செல்வம், செல்வாக்கு கூடும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புது பதவி, பொறுப்புகள் தேடி வரும்.
 
குருபகவானின் வக்ர சஞ்சாரம்
 
10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் திடீர் பயணங்களும், செலவுகளும் துரத்தும். தர்ம சங்கடமான சூழ்நிலைக்கு ஆளாவீர்கள். பால்ய நண்பர்களுடன் மோதல்கள் வரும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். பழைய பிரச்னைகள் மீண்டும் வந்துவிடுமோ என்ற பயம் வந்து போகும். படபடப்பு, நெஞ்சு எரிச்சல், இன்ஃபெக்‌ஷன் வரக்கூடும். கர்ப்பிணிப் பெண்கள் உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டு டன் இருப்பது அவசியம். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். இடையிடையே பணவரவு உண்டு. வீடு, மனை வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும்.     
 
வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்து லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்கள் முரண்டு பிடிப்பார்கள். அவர்களிடம் வேலை வாங்குவதற்குள் அவர்களை எதிர்பார்க்காமல் நாமே அந்த வேலையை செய்து விடலாம் என்று முடிவெடுப்பீர்கள். தொழில் போட்டி அதிகமாகும். வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். பழைய நிறுவனங்களைக் காட்டிலும் புதிய நிறுவனங்களின் பொருட்களை விற்பதன் மூலமாக அதிக ஆதாயமடைவீர்கள். கடை வாடகை அதிகமாகிக் கொண்டே போகிறதே கடன் ஏதாவது வாங்கி சொந்த இடம் பார்க்கலாமே என்ற முடிவுக்கு வருவீர்கள். லோன் கிடைக்கும். சிமென்ட், கணினி உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட், என்டர் பிரைசஸ் வகைகளால் லாபமடைவீர்கள்.
 
உத்யோகத்தில் என்னதான் உண்மையாக உழைத்தாலும் எந்த பலனும் இல்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். உண்மையாக இருப்பது மட்டும் போதாது உயரதிகாரிகளுக்கு தகுந்தாற்போலும் பேசும் வித்தையையும் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற முடிவிற்கு வருவீர்கள். சக ஊழியர்களின் விடுப்பால் வேலைச்சுமை அதிகமாகும். வேறு சிலர் செய்த தவறுகளுக்கெல்லாம் நாம் பலிகடா ஆகி விட்டோமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள். புது உத்யோக வாய்ப்புகள் வந்தாலும் பொறுத்திருந்து செயல்படுவது நல்லது. உத்யோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் கொஞ்சம் இழுபறி நிலை நீடிக்கும். 
 
கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். பெற்றோருடன் இருந்து வந்த கருத்து மோதல் நீங்கும். வெளி மாநிலத்தில் வேலை கிடைக்கும். உங்கள் ரசனைக் கேற்ற வாழ்க்கைத் துணை அமையும்.
 
மாணவ. மாணவிகளே! யோகா, தியானம் செய்து நினைவாற்றலை அதிகப்படுத்தப்பாருங்கள். உயர்கல்வியில் விளையாட்டுத்தனம் வேண்டாம். நுழைவுத் தேர்வு, போட்டித் தேர்வுக்கு முழு நேரம் ஒதுக்கி தயார்படுத்திக் கொள்ளுங்கள். வகுப்பறையில் கேள்வி கேட்க தயக்கம் வேண்டாம்.
 

மீனம் 

 
அடிப்படை உரிமைகளை எப்போதும் விட்டுக் கொடுக்காத நீங்கள் அடுத்தவர்களின் சுதந்திரத்தில் அநாவசியமாகத் தலையிட மாட்டீர்கள். சமயோஜித புத்தியால் எதையும் செய்து முடிக்கும் நீங்கள், எப்பொழுதும் பரபரப்பாக இருப்பீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு எட்டில் மறைந்து கொண்டு எதையும் எட்டாக் கனியாக்கியதுடன், மனஅழுத்தத்தையும், எதிர்மறை எண்ணங்களையும், விபத்துகளையும் தந்து கொண்டிருந்த குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 வரை உங்கள் ராசிக்கு பாக்ய வீடான 9ம் வீட்டில் நுழைவதால் வாழ்வில் புது வியூகங்களை அமைத்து முன்னேறத் தொடங்குவீர்கள். ‘ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் வீட்டில் குரு’ என்ற பழமொழிக்கேற்ப இனி தொட்ட காரியங்களெல்லாம் துலங்கும். 
 
குடும்ப விசேஷங்களில் ஒதுக்கப்பட்டீர்களே! பொது நிகழ்ச்சிகளிலும் மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டீர்களே! இனி அந்த அவல நிலை மாறும். எங்கு சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும். வளைந்து கொடுத்தால் வானம் போல் உயரலாம் என்பதை உணருவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். தந்தையாருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். தந்தைவழி சொத்துக்கள் வந்து சேரும். குடும்பத்தில் நிலவி வந்த சண்டை, சச்சரவுகளுக்கு தீர்வு கிடைக்கும். வங்கியிலிருந்த நகை, பத்திரத்தை மீட்பீர்கள். நீண்ட நாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த சொந்த, பந்தங்களெல்லாம் உங்கள் வளர்ச்சியைக் கண்டு வலிய வந்து உறவாடுவார்கள்.
 
குருபகவானின் பார்வை பலன்கள்
 
குருபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் எப்போதும் ஏதாவது ஒரு கவலையும், சோகமுமாக இருந்த உங்கள் முகம் இனி மலரும். அழகு, இளமை கூடும். புது வாகனம் வாங்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். அதிக வட்டிக் கடனை குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி பைசல் செய்வீர்கள். குரு உங்களின் 3ம் வீட்டை பார்ப்பதால் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். இளைய சகோதரங்களால் பயனடைவீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. குரு உங்களின் 5ம் வீட்டைப் பார்ப்பதால் முடிவுகள் எடுப்பதில் இருந்த குழப்பம், தடுமாற்றம் நீங்கும். அடிக்கடி கர்ப்பச் சிதைவு ஏற்பட்டவர்களுக்கு இனி குழந்தை தங்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். பாகப்பிரிவினை சுமுகமாகும்.
 
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்
 
04.10.2018 முதல் 20.10.2018 வரை உங்களின் ராசிநாதனும், ஜீவனாதிபதியுமான குருபகவான் தன் சாரமான விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பழைய பிரச்னைகள் தீரும். புது வேலை கிடைக்கும். அலுவலகத்தில் மரியாதை கூடும். வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைக்கும். அக்கம் பக்க வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். 21.10.2018 முதல் 19.12.2018 வரை உங்களின் லாபாதிபதியும், விரயாதிபதியுமான சனி பகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் ஷேர் மூலம் பணம் வரும். அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். வீடு, வாகன வசதி பெருகும். ஊர் பொது நிகழ்ச்சிகளையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. வேற்று மதத்தவர்கள் நண்பர்களாவார்கள். 20.12.2018 முதல் 12.03.2019 வரை மற்றும் 09.08.2019 முதல் 27.10.2019 வரை உங்களின் சுகாதிபதியும், சப்தமாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் குரு செல்வதால் கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். தாய்வழி சொத்து கைக்கு வரும்.
 
குருபகவானின் அதிசார வக்ர சஞ்சாரம்
 
13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 10ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் ஒரே நாளில் முக்கியமான இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். வீண் பழிச் சொல் வரும். மற்றவர்களைச் சார்ந்து இருக்க வேண்டாம். தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படும்.     
 
குருபகவானின் வக்ர சஞ்சாரம்
 
10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். உறவினர், நண்பர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். பழுதான டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். மனைவி உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார். மனைவிவழி உறவினர்களும் ஒத்தாசையாக இருப்பார்கள். 
 
வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். கொடுக்கல், வாங்கலில் சுமுகமான நிலை ஏற்படும். கடையை விரிவுபடுத்துவீர்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். ஷேர், ஸ்பெக்குலேஷன், உணவு, என்டர் பிரைசஸ், ஜுவல்லரி, மர வகைகளால் ஆதாயமடைவீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார். வங்கிக்கு கட்ட வேண்டிய கடனில் ஒருபகுதியைக் கட்டி முடிப்பீர்கள். மூத்த வியாபாரிகளின் ஆதரவால் புதிய பதவியில் அமர்வீர்கள். இயக்கம், சங்கம் நடத்தும் விழாக்கள், போராட்டங்களுக்கு முன்னிலை வகிப்பீர்கள். 
 
உத்யோகத்தில் உங்களைப் பற்றி குறை கூறியவர்களுக்கு இனி பதிலடி கொடுப்பீர்கள். தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு. சக ஊழியர்களும் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். சிலருக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும். உங்களின் கோரிக்கையை நேரடியாக மூத்த அதிகாரி ஏற்றுக் கொள்வார். 
 
கன்னிப் பெண்களே! உங்களுக்கு இருந்து வந்த மாதவிடாய்க் கோளாறு நீங்கும். ஸ்கின் அலர்ஜியும் விலகும். அழகு கூடும். உத்யோகம் அமையும். காதல் விவகாரத்தில் தெளிவு பிறக்கும். சிலர் உயர்கல்விக்காக அயல்நாடு செல்வீர்கள். எதிர்பார்த்தபடி நல்ல வரனும் அமைந்து திருமணம் சிறப்பாக முடியும். 
 
மாணவ, மாணவிகளே! நல்ல கல்வி நிறுவனத்தில் மேற்படிப்பைத் தொடங்குவீர்கள். கெட்ட நண்பர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். மொழித் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். மதிப்பெண் கூடும். கட்டுரை, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டிகளில் பரிசு பெறுவீர்கள். பெற்றோர் உங்களின் ஆசைகளை நிறைவேற்றுவார்கள். 

 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Mercedes benze ml 2.7
3500 €
Paristamil Annonce
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்  Tél.: 09 83 06 14 13   தமிழில் தொடர்பு கொள்ள:  Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26