Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில் நியாயமான முடிவு எடுக்கப்படும்!! கவர்னர்
16 September, 2018, Sun 5:15 GMT+1  |  views: 261

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.

இதை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு முடிவு எடுத்து கவர்னரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கலாம் என்று கடந்த 6-ந் தேதி அறிவுறுத்தியது.

இதைத்தொடர்ந்து 9-ந் தேதி கூடிய தமிழக அமைச்சரவை, ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி, அதை கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைத்தது. மேலும் 7 பேர் தொடர்பான கோப்புகளையும் கவர்னருக்கு அனுப்பியது.

தமிழக அரசின் இந்த பரிந்துரை குறித்து கருத்து கேட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கவர்னர் அறிக்கை அனுப்பி இருப்பதாக கடந்த வியாழக்கிழமை தகவல் வெளியானது.

இந்த நிலையில் இதுகுறித்து கவர்னர் மாளிகையின் சார்பில் நேற்று செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த அனுமானத்தின் அடிப்படையில் சில தனியார் தொலைக்காட்சிகள் விவாதங்களை நடத்தி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த பிரச்சினை (7 பேரின் விடுதலை) சிக்கலான ஒன்றாகும். இதில் சட்டரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும், அரசியல் சாசன அடிப்படையிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த விவகாரம் தொடர்பாக ஏராளமான ஆவணங்கள் உள்ளன. பல்வேறு கோர்ட்டு தீர்ப்புகள் அடங்கிய அந்த ஆவணங்களை 14-ந் தேதியன்றுதான் மாநில அரசு ஒப்படைத்தது. மேலும் பல ஆவணங்களை தந்து கொண்டிருக்கின்றனர். அந்த ஆவணங்கள் அனைத்தையும் உன்னிப்பாக கவனித்து மேல்நடவடிக்கை எடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

இந்த பணியில் தேவைப்படும் போது ஆலோசனைகள் பெறப்படும். இந்த விஷயத்தில் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் நியாயமான முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக அகலமான  நீர்வீழ்ச்சி எது?  
  நயாகரா நீர்வீழ்ச்சி

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஆதார் எண் கட்டாயமா? இல்லையா? என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு
ஆதார் எண் கட்டாயமா? இல்லையா? என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று (புதன்கிழமை) தீர்ப்பு வழங்குகிறது.
26 September, 2018, Wed 4:10 | views: 211 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தி.மு.க. கட்சி அல்ல, அது ஒரு கம்பெனி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
தி.மு.க. கட்சி அல்ல, அது ஒரு கம்பெனி என்று சேலத்தில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
26 September, 2018, Wed 4:09 | views: 163 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை: மாஜிஸ்திரேட்டு பணிஇடை நீக்கம்
பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சத்தியமங்கலம் மாஜிஸ்திரேட்டு பணிஇடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
26 September, 2018, Wed 4:07 | views: 140 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடை இல்லை -சுப்ரீம் கோர்ட்டு
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
26 September, 2018, Wed 4:06 | views: 122 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
டீசல் விலை அதிகரிப்பால் லாரி வாடகை 25 சதவீதம் உயர்வு உடனடியாக அமலுக்கு வந்தது
டீசல் விலை அதிகரிப்பால் லாரி வாடகை 25 சதவீதம் உயர்த்தப்படுவதாக சரக்கு லாரி உரிமையாளர்கள் அறிவித்து உள்ளனர்.
25 September, 2018, Tue 4:20 | views: 304 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS