சிம்பாப்வேயில் இடம்பெற்ற முக்கோண ரி20 தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற பாக்கிஸ்தான் அணியின் தலைவர் சவ்ராஸ் அகமதுடன் அவுஸ்திரேலிய வீரர்; கிளென் மக்ஸ்வெல் கைகுலுக்க மறுத்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாக்கிஸ்தான் அணி இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற பின்னர் மக்ஸ்வெல் பாக்கிஸ்தானின் ஏனைய வீரர்களுடன் கைகுலுக்குவதையும் பாக்கிஸ்தான் அணித்தலைவர் கையை நீட்டுகின்ற போதிலும் மக்ஸ்வெல் அதனை அலட்சியம் செய்வதையும் தொலைக்காட்சிகள் காண்பித்துள்ளன.
குறிப்பிட்ட போட்;டியின் போது பாக்கிஸ்தான் அணித்தலைவரும் மக்ஸ்வெலும் வார்த்தை பிரயோகங்களில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பாக்கிஸ்தான் வெற்றிபெற்றதும் மைதானத்திற்குள் முதலில் ஓடிய சவ்ராஸ் அகமதுடன் மக்ஸ்வெல் மோதலில் ஈடுபட்டார் இருவரும்கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையிலேயே மக்ஸ்வெலின் நடவடிக்கை குறித்து கவனம் திரும்பியுள்ளது.
இதேவேளை இந்த சம்பவம் குறித்து டுவிட்டரி;ல் கருத்து வெளியிட்டுள்ள கிளென்மக்ஸ்வெல் இது ஒரு விளையாட்டுவீரரிற்கு உரிய நடவடிக்கை இல்லை என தோன்றினாலும் தான் அப்படிப்பட்ட வீரர் இல்லை நான் அப்படி விளையாடுவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
வெற்றிபெற்றமைக்காக பாக்கிஸ்தானிற்கு பாராட்டுகள்,பக்கார் ஜமானும் சொயிப்மலிக்கும் தடுத்து நிறுத்த முடியாதவர்களாக தோன்றினர் என மக்ஸ்வெல் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
நடந்த சம்பவத்திற்கு கவலை வெளியிட்டுள்ள அவர் தான் பாக்கிஸ்தான் அணித்தலைவரை சந்தித்து கைகுலுக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். |