Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வேலையாள்த் தேவை
05022019
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
மோசமான களத்தடுப்பு! இலங்கை அணி படு தோல்வி
2 August, 2018, Thu 4:30 GMT+1  |  views: 1296
இலங்கையின் அணியின் அசமந்தப் போக்கின் காரணமாகவும் மோசமான களத் தடுப்புக் காரணமாகவும் தென்னாபிரிக்க அணி இரண்டாவது ஒரு நாள் போட்டியில் 4 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றது. 
 
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியின் இரண்டாவது போட்டி தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில்  நேற்று ஆரம்பமானது.
 
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களினை இழந்து 244 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
 
இலங்கை அணி சார்பாக அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் 111 பந்துகளுக்கு 79 ஓட்டங்களையும் நிரோஷன் திக்வெல்ல 78 பந்துகளுக்கு 69 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
 
245 என்ற வெற்றி இலக்கினை நோக்கி களமிறங்கிய தென்னாபிரிக்க அணியின் டீகொக் மற்றும் அம்லா ஜோடி உறுதியான ஒரு அஸ்த்திபாரத்தை அணிக்காக இட்டது. அதனூடன் இலங்கை அணியின் மோசமான களத் தடுப்பும் இரண்டு பிடி நழுவல்களும் தென்னாபிரிக்க அணியின் ஓட்ட அதிகரிப்புக்கு மேலும் வலுச் சேர்த்தது. 
 
ஒரு கட்டத்தில் 14 ஓவர்களை எதிர்கொண்ட இந்த ஜோடி 91 ஓட்டங்களை பெற்றுக் கொண்டபோது அகில தனஞ்சயவின் பந்து வீச்சினால் ஹஸீம் அம்லா 43 பந்துகளுக்கு 43 ஓட்டங்களை பெற்றுக் கொண்டபோது ஆட்டமிழந்து வெளியேற 14.2 ஓவரில் இவருக்கு பக்க பலமாக துடுப்பெடுத்தாடிய டீகொக் 43 பந்துகளை எதிர்கொண்டு அரை சதம் விளாச 15 ஓவரில் அணியின் ஓட்ட எண்ணிக்கை 100 ஐ கடந்தது. 
 
ஹஸீம் அம்லாவின் ஆட்டமிழப்பினையடுத்து களமிறங்கிய மர்க்ரம் வெகு நேரம் தாக்கு பிடிக்காமல் அகில தனஞ்சயவின் பந்து வீச்சில் மூன்று ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டமிழந்தார்.
 
இவரையடுத்து களமிறங்கிய அணித் தலைவர் டூப்பிளஸ்ஸியும் டீகொக்குமாக இணைந்து 53 ஓட்டங்களை பெற்றுக் கொண்டிருந்த வேளை டீகொக் 87 ஓட்டங்களுடன் ராஜிதவின் பந்து வீச்சில் லக்மலிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.
 
இவரையடுத்து சிறப்பாக ஆடி வந்த டூப்பிளஸ்ஸி மூன்று ஆறு ஓட்டங்கள் மூன்று நான்கு ஓட்டங்கள் அடங்களாக 41 பந்துகளுக்கு 49 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை அகில தனஞ்சயவின் பந்தில் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்து அரைசதம் அடிப்பதற்கான வாய்ப்பினை நழுவ விட்டார். 
 
அவரைத் தொடர்ந்து களம்புகுந்த மில்லருடம் மூன்று ஓட்டங்களுடன் சுரங்க லக்மலின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் 33 ஆவது ஒவரின் போது தென்னாபிரிக்க அணி  ஐந்து விக்கெட்டுக்களை இழந்து 200 ஓட்டங்களை கடந்தது. 
 
இறுதியாக தென்னாபிரிக்கா அணி 42.5 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 246 ஓட்டங்களை பெற்று இலங்கை அணி நிர்ணயித்த வெற்றி இலக்கினை கடந்தது.
 
இலங்கை அணி சார்பாக பந்து வீச்சில் அகில தனஞ்சய 60 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுக்களையும் சுரங்க லக்மால், கசூன் ராஜித மற்றும் திஸர பெரேரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்கள். போட்டியின் ஆட்ட நாயகனாக தென்னாபிரிக்க அணியின் டீகொக் தெரிவானார்.
 
இந்தப் போட்டியில் வெற்றியீட்டியதன் மூலம் தென்னாபிரிக்க அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 
 
இவ் இரு அணிகளுக்குமான மூன்றாவது போட்டி எதிர்வரும் 03 ஆம் திகதி கண்டி பல்லேகல மைதானத்தில் காலை 9.45 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலே ஆயிரம் ஏரிகளின் நாடு என்றழைக்கப்படும் நாடு எது?
  பின்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஒருநாள் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு!
சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள, ஒருநாள் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியலில் பல மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. வாரந்தோறும்
21 February, 2019, Thu 8:35 | views: 373 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கை – தென்னாபிரிக்க இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்!
இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. தென்னாபிரிக்காவின் போர்ட் எ
21 February, 2019, Thu 8:18 | views: 202 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
2019 IPL போட்டி அட்டவணை வெளியீடு!
2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள IPL போட்டிக்கான முதல் கட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பிசிசிஐ யினால் நேற்று (19) இந்த போட்டி அட்டவணை
20 February, 2019, Wed 8:11 | views: 694 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு! மீண்டும் அணிக்குள் முக்கிய வீரர்
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச போட்டிக்கான 17 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. லசித் மலிங்க தலைமையில
19 February, 2019, Tue 5:45 | views: 735 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் தவறா? வெளியாகியது இறுதி முடிவு
இலங்கை அணியின் இளம் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை என சர்வதேச கிரிக்
19 February, 2019, Tue 5:31 | views: 462 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS