உலகின் சிறந்த கால்பந்து வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்த பிரான்ஸ் வீரர்கள்!
26 July, 2018, Thu 4:47 GMT+1 | views: 3272
உலகின் சிறந்த கால்பந்து வீரரை தெரிவு செய்வதற்கான முதற்கட்ட பட்டியலை, சர்வதேச கால்பந்து சம்மேளனம் வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவில் 21வது உலகக் கிண்ண கால்பந்து போட்டி தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது, இதில் பிரான்ஸ் அணி கிண்ணத்தை கைப்பற்றி சாம்பியனானது.
இந்நிலையில் சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிபா, உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதுக்கான முதற்கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 10 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அவர்களில் முக்கியமாக கிண்ணத்தை வென்ற பிரான்ஸ் அணியில் இருந்து கிரீஸ்மன், எம் பாப்பே, ரபெல் வரனே ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
மேலும் இங்கிலாந்து அணித்தலைவரும், உலகக் கிண்ணத்தில் 6 கோல்கள் அடித்தவருமான ஹாரிகேனும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். ஆனால், பிரேசிலின் நட்சத்திர வீரரான நெய்மார் இதில் இடம்பெறவில்லை.