Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு வாடகைக்கு

Saint-Ouen-l’Aumôneல் F1 – 15m2 வீடு வாடகைக்கு..
மாத வாடகை :490€
click to call 06 17 86 85 87

வீடு விற்பனைக்கு

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
18
வியாழக்கிழமை
ஜூலை
துர்முகி 2047
திதி: தசமி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

ஐதராபாத் அணியை வீழ்த்தி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

20 May, 2018, Sun 5:11   |  views: 1422

ஐதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. 
 
ஐதராபாத்தில் நேற்று இரவு நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்தும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளும் மோதின.
 
டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமியும் களமிறங்கினர். இருவரும் இணைந்து நிதானமாக ஆடினர். இதனால் முதல் விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்தது. கோஸ்வாமி 35 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அடுத்து இறங்கிய கேன் வில்லியம்சன் அதிரடியாக ஆடி 17 பந்துகளில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 36 ரன்கள் எடுத்து வெளியேறினார். சிறப்பாக ஆடிய ஷிகர் தவான் அரை சதமடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
 
அப்போது அணியின் எண்ணிக்கை 15.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்திருந்தது. அவரை தொடர்ந்து இறங்கிய யூசுப் பதான் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்தவர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இறுதியில், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது.
 
கொல்கத்தா அணி சார்பில் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளும், சுனில் நரேன், குல்தீப் யாதவ், ஜவோன் சியர்லஸ், ஆண்ட்ரூ ரசல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 173 ரன்களை இலக்காக ஐதராபாத் அணி நிர்ணயித்தது.
 
இதையடுத்து, 173 ரன்களை இலக்காக கொண்டு கொல்கத்தா அணி விளையாடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுனில் நரேன், கிறிஸ் லின் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். இதனால் 3.3 ஓவரில் அணியின் ஸ்கோர் 50-ஐ தாண்டியது. 4-வது ஓவரை ஷகிப் அல் ஹசன் வீசினார். அந்த ஓவரின் நான்காவது பந்தில் நரேன் ஆட்டமிழந்தார். அவர் 10 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்ஸ உட்பட 29 ரன்கள் எடுத்தார். அதன்பின் ராபின் உத்தப்பா களமிறங்கினார்.
 
கொல்கத்தா அணி 6 ஓவரின் ஒரு விக்கெட் இழப்பிற்கு 66 ரன்கள் எடுத்தது. லின், உத்தப்பா இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன் குவித்தனர். இந்த ஜோடியும் பாட்னர்ஷிப்பில் 50 ரன்களை கடந்தது. சிறப்பாக விளையாடிய லின் 36 பந்தில் அரைசதம் அடித்தார். இதில் 4 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும். 
 
14-வது ஓவரை சித்தார்த் கவுல் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை லின் தூக்கி அடித்தார். அந்த பந்தை பவுண்டரி கோட்டுக்கு மணிஷ் பாண்டே சிறப்பான முறையில் கேட்ச் பிடித்தார். லின் 43 பந்தில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து கேப்டன் தினேஷ் கார்த்திக் களமிறங்கினார்.
 
கொல்கத்தா அணி 15 ஓவரில் 132 ரன்கள் எடுத்தது. இதனால் கடைசி 5 ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 41 ரன்கள் தேவைப்பட்டது. உத்தப்பா 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஆண்ட்ரே ரசல் 4 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். தொடர்ந்து நிதிஷ் ராணா களமிறங்கினார். கடைசி இரண்டு ஓவரில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது.  
 
இறுதியில் கொல்கத்தா அணி 19.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. தினேஷ் கார்த்திக்  ரன்களுடன் களத்தில் இருந்தார். ஐதராபாத் அணி பந்துவீச்சில் சித்தார்த் கவுல் இரண்டு விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
பரிஸ் ஈழநிலா
Live Music Group
Tel.: 06 20 31 24 90
உங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்  Tél.: 09 83 06 14 13   தமிழில் தொடர்பு கொள்ள:  Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26