Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
பெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie!!!
France Tamilnews
சென்னை சூப்பர் கிங்சை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ்!
19 May, 2018, Sat 3:43 GMT+1  |  views: 1288
டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி வீழ்த்தியது. 
 
ஐபிஎல் தொடரின் 52-வது லீக் ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
 
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் டோனி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ப்ரித்வி ஷா, ஷ்ரேயாஸ் அய்யர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ப்ரித்வி ஷா 17 ரன்களும், ஷ்ரேயாஸ் அய்யர் 19 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
 
அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்ட ரிஷப் பந்த் 26 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் அய்யர், பந்த் இருவரையும் ஒரே ஓவரில் லுங்கி நிகிடி வீழ்த்தினார். அதன்பின் வந்த கிளென் மேக்ஸ்வெல் 5 ரன்னிலும், அபிஷோக் ஷர்மா 2 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க டெல்லி அணியின் ஸ்கோர் அப்படியே படுத்தது.
 
அதன்பின் வந்த விஜய் சங்கர், எச்.பட்டேல் தாக்குப்பிடித்து ஓரளவிற்கு ரன்கள் அடிக்க டெல்லி டேர்டெவில்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 163 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது டெல்லி டேர்டெவில்ஸ். விஜய் சங்கர் 28 பந்தில் 36 ரன்களும், ஹர்ஷல் பட்டேல் 16 பந்தில் 36 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை அணி பந்துவீச்சில் நிகிடி 2 விக்கெட் வீழ்த்தினார்.
 
இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி பேட்டிங் செய்தது. சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வாட்சன், ராயுடு ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடினர். இதனால் 5 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 22 ரன்கள் மட்டுமே எடுத்தது. 6-வது ஓவரை அவேஷ் கான் வீசினார். அந்த ஓவரில் ராயுடு 3 சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி உட்பட 22 ரன்கள் எடுத்தார். 
 
நிதானமாக விளையாடிய வாட்சன், அமித் மிஷ்ரா வீசிய 7-வது ஓவரின் 5-வது பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரெய்னாவுக்கு முதல் பந்திலேயே கேட்ச் மிஸ் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ராயுடு 28 பந்தில் அரைசதம் அடித்தார். இதில் 4 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும். அரைசதம் அடித்த அடுத்த பந்திலேயே ராயுடு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து கேப்டன் டோனி களமிறங்கினார். சென்னை அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்தது.
 
டோனி, ரெய்னா இருவரும் நிதானமாக விளையாடினர். 14-வது ஓவரை டெல்லி அணியின் சந்தீப் லமிசானே வீசினார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே ரெய்னா ஆட்டமிழந்தார். அதன்பின் சாம் பில்லிங்ஸ் களமிறங்கினார். அமித் மிஷ்ரா வீசிய 15-வது ஓவரின் 3-வது பந்தில் பில்லிங்ஸ் ஆட்டமிழந்தார். 15 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்தது. 
 
18-வது ஓவரை போல்ட் வீசினார். அந்த ஒவரின் கடைசி பந்தில் டோனி ஆட்டமிழந்தார். அவர் 23 பந்தில் 17 ரன்கள் எடுத்தார். அவரைத்தொடர்ந்து பிராவோ களமிறங்கினார். அவர் போல்ட் வீசிய 20-வது ஓவரின் 2-வது பந்தில் ஆட்டமிழந்தார். சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி பந்துவீச்சில் போல்ட், அமித் மிஷ்ரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர். 
 
இதன்மூலம் டெல்லி அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணியின் ஹர்சல் பட்டேல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

மேனோமீட்டர் (Manometer)

வாயுவின் அழுத்தத்தைக் கணக்கிடும் கருவி இது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மீண்டும் அதிரடிய காட்டிய இலங்கை வீரர்
B.P.L இறுதி ஓவரில் திசர பெரேராவின் அதிரடி துடுப்பாட்டத்தினால் Comilla Victorians அணி வெற்றியை தனதாக்கியது. Khulna Titans மற்று
19 January, 2019, Sat 6:55 | views: 291 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அவுஸ்திரேலிய மண்ணில் அணி அபார வெற்றி! வரலாற்று சாதனை படைத்த இந்தியா
சரித்திர டெஸ்ட் தொடரை வென்ற கையோடு அவுஸ்திரேலியா அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும், இந்தியக் கிரிக்கெட் அணி
18 January, 2019, Fri 12:38 | views: 560 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாண்ட்யா, கே.எல்.ராகுலுக்கு இந்திய ஜாம்பவான் ஆதரவு!
சர்ச்சையில் சிக்கியுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, மற்றும் கே.எல்.ராகுலுக்கு சவுரவ் கங்குலி ஆதரவு தெரிவித்துள்ள
18 January, 2019, Fri 9:16 | views: 349 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயிற்சி போட்டியில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு ஏற்பட்ட நிலை!
அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாடிவரும் இலங்கை அணியின் இரு வீரர்கள் சற்று முன்
17 January, 2019, Thu 11:21 | views: 723 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வீட்டிலேயே முடங்கிய ஹர்திக் பாண்டியா!
இந்திய அணி வீரரான ஹர்திக் பாண்ட்யா தொலைக்காட்சி நேரலையில் பெண்கள் குறித்து பேசியதால் சஸ்பெண்ட் செய்தது குறித்து வருத்தமடைந்து வீட
17 January, 2019, Thu 8:34 | views: 662 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS