Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
220518
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
காசாளர் தேவை
160518
இடம் தேவை
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
முந்துங்கள்!!
050518
Seriga Seri bridal
020518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
நினைவேந்தலுக்கு தயாராகியது முள்ளிவாய்க்கால் மண்!
17 May, 2018, Thu 5:46 GMT+1  |  views: 803
முள்ளிவாய்க்கால் படுகொலை நாள் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள், தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் 9 ஆவது ஆண்டு நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு,  மே 18 திகதி நாளை, துக்கநாளாகவும், தமிழினப் படுகொலை நாளாகவும் வடக்கு மாகாண சபை பிரகடனம் செய்துள்ளது.
 
தமிழினப் படுகொலைகள் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் மண்ணில் வழக்கம் போலவே, நாளை பாரிய நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கான ஒழுங்கமைப்புகளில் வடக்கு மாகாணசபைக்கும், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துக்கும் இடையில் நீடித்து வந்த இழுபறிகளுக்கு முடிவு காணப்பட்டுள்ளது.
 
அத்துடன் அனைத்து தரப்புகளும் இணைந்து நினைவேந்தல் நிகழ்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
நாளை காலை 11 மணியளவில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தில் பிரதான சுடர் ஏற்றப்படும்.
 
முன்னதாக நாளை காலை யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவர்கள் பாரிய உந்துருளிப் பேரணி ஒன்றை முள்ளிவாய்க்கால் நோக்கி நடத்தவுள்ளனர். இந்தப் பேரணி, முள்ளிவாய்க்காலை சென்றடைந்ததும், காலை 11 மணிக்கு நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வு இடம்பெறும்.
 
இந்த நிகழ்வில் பெருமளவு மக்களை பங்கேற்க வைப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. வாகன வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. நிகழ்வு ஒழுங்கமைப்பு, பங்கேற்கும் மக்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நடவடிக்கைகளில், வடக்கு மாகாணசபை, முன்னாள் போராளிகள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
 
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மைதானம் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு, தயாராகியுள்ளது.
 
நிகழ்விடத்தில் ஏற்பாடுகள் குறித்து வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் , அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்களுடன் நேற்று மாலை ஆராய்ந்தனர்.
 
இதற்கு முன் இருந்திராத வகையில் பெருமளவு மக்களை அணிதிரட்டி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ஒழுங்குபடுத்துவதில் அனைத்து தரப்புகளும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பிளானிமீட்டர் (Planimeter)

பரப்பை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சிறிலங்கன் விமானத்தில் விமானப் பணிப் பெண்ணின் கையை பிடித்த வர்த்தகருக்கு நேர்ந்த கதி!
சிறிலங்கன் விமானத்தில், போதை தலைக்கேரி, நடு வானில் வைத்து விமானப் பணிப் பெண் ஒருவரின் கையைப்
25 May, 2018, Fri 14:20 | views: 2068 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தூத்துக்குடியில் 12 பேர் படுகொலை! யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்!!
யாழ்ப்பாணம், நல்லூர் ஆலய முன்றலில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று முற்பகல்
25 May, 2018, Fri 10:42 | views: 673 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அம்பாறையில் முஸ்லிம் இளைஞன் மீது தாக்குதல் மேற்கொண்டமையால் பதற்றம்!
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பில் பதற்ற நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சற்றுமுன்னர் இளைஞர்
25 May, 2018, Fri 9:30 | views: 783 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சீரற்ற காலநிலை! தாமரைக் கோபுரத்திற்கு ஏற்பட்ட நிலை
தெற்காசியாவின் மிகவும் உயரமான கோபுரமாக கருதப்படுகின்ற தாமரைக் கோபுரம் தற்போது வித்தியாசமான
25 May, 2018, Fri 7:13 | views: 1151 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கை கிரிக்கட் வீரரின் தந்தை சுட்டுக் கொலை!
இலங்கையில் பிரபல கிரிக்கட் வீரர் தனன்ஜய டி சில்வாவின் தந்தையான கே. ரஞ்சன் சில்வா சுட்டுக்
25 May, 2018, Fri 3:57 | views: 1065 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
ENGLISH/ TAMIL/ FRENCH CLASSES

Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS