Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
160518
இடம் தேவை
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வேலையாள்த் தேவை
050518
முந்துங்கள்!!
050518
புத்தம் புது வீடுகள் வாங்க!!
050518
Seriga Seri bridal
020518
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
2-வது அணியாக பிளேஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்தது சென்னை!
14 May, 2018, Mon 3:48 GMT+1  |  views: 477
அம்பதி ராயுடு, வாட்சனின் அபார ஆட்டத்தால் ஐதராபாத்தை துவம்சம் செய்து 2-வது அணியாக பிளேஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ். 
 
அம்பதி ராயுடுவின் அதிரடி சதத்தால் ஐதராபாத்தை வீழ்த்தி பிளேஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்தது சென்னை
சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 46-வது ஆட்டம் புனேயில் நடைபெற்றது. 
 
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் பேட்டிங் செய்தது. ஷிகர் தவான் (79), கேன் வில்லியம்சன் (51) ஆட்டத்தால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் சேர்த்தது.
 
பின்னர் 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வாட்சன், அம்பதி ராயுடு ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்கோர் 13.3 ஓவரில் 134 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. 35 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 57 ரன்கள் சேர்த்த நிலையில் வாட்சன் ரன்அவுட் ஆனார்.
 
அடுத்து வந்த ரெய்னா 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 3-வது விக்கெட்டுக்கு அம்பதி ராயுடு உடன் டோனி ஜோடி சேர்ந்தார். டோனி நிதானமாக விளையாட அம்பதி ராயுடு அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். இதனால் அவர் 90 ரன்னைத் தாண்டினார்.
 
18-வது ஓவரின் 5-வது பந்தில் ஒரு ரன் எடுத்து ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் ஸ்கோரை சமன் செய்தது. அடுத்த பந்தில் டோனி ஒரு ரன் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 19 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அம்பதி ராயுடு 62 பந்தில் 7 பவுண்டரி, 7 சிக்சருடன் 100 ரன்களுடனும், டோனி 20 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.
 
இந்த வெற்றியின் மூலம் 12 ஆட்டத்தில் 8-ல் வெற்றி பெற்று பிளேஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* 1941-ம் ஆண்டு இங்கிலாந்தில் முதல்முதலாக ஜெட் விமானம் பறக்கவிடப்பட்டது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வெளியேற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ்!
புனேயில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில்
21 May, 2018, Mon 6:02 | views: 200 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிர்ச்சி கொடுத்த டெல்லி டேர்டெவில்ஸ்!
டெல்லியில் நடைபெற்ற ஐபில் போட்டியில் மும்பை இந்தியன்சை வெளியேற்றி அதிர்ச்சி அளித்தது டெல்லி
21 May, 2018, Mon 4:23 | views: 207 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஐதராபாத் அணியை வீழ்த்தி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!
ஐதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி
20 May, 2018, Sun 5:11 | views: 357 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிளே ஆப் சுற்றை தக்கவைத்த ராஜஸ்தான்!
ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூரை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆப் சுற்றை தக்க
19 May, 2018, Sat 16:59 | views: 484 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சென்னை சூப்பர் கிங்சை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ்!
டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி
19 May, 2018, Sat 3:43 | views: 440 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS