Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
தண்ணீர்… தண்ணீர் !
13 May, 2018, Sun 13:40 GMT+1  |  views: 1774

பெருந்துறவியான கோபோ ஓரிடத்தில் தங்க மாட்டார். ஒவ்வொரு ஊராகச் சென்று கொண்டிருப்பார். ஒருமுறை அவர் கடுமையான வெயிலில் நடந்து வந்தார். தாகம் அவரை வாட்டியது. அருகில் இருந்த ஊர் ஒன்று அவருக்குத் தெரிந்தது. அங்கே சென்ற அவர் ஒரு வீட்டின் முன் நின்றார்.

 
“”அம்மா தாயே! தாகமாக இருக்கிறது. தண்ணீர் கொடுத்தால் குடித்துவிட்டுச் செல்வேன்,” என்று குரல் கொடுத்தார்.
 
பெண்மணி ஒருத்தி வெளியே வந்தாள். “”ஐயா! சிறிது நேரம் பொறுமையாக இருங்கள். குளத்திற்குச் சென்று தண்ணீர் எடுத்து வருகிறேன்,” என்று இனிமையாகச் சொன்னாள் அவள். ஒரு குடத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.
 
நேரம் சென்று கொண்டே இருந்தது. அவள் வரும் அறிகுறியே தெரியவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பொறுமை இழந்தார் கோபோ. “நான் யார் என்பதை அறியாமல் என்னிடமே விளையாடுகிறாளா? அவள் வரட்டும் நான் யார் என்பதை அவளுக்குக் காட்டுகிறேன்,” என்று உள்ளுக்குள் பொறுமினார்.
 
இடுப்பில் தண்ணீர்க் குடத்துடன் மெல்ல நடந்து வந்தாள் அவள். வீட்டிற்குள் சென்ற அவள், ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் வந்தாள். அதை அவரிடம் நீட்டினாள்.
 
“”தண்ணீர் கொண்டு வருவதற்கா இவ்வளவு நேரம்?” என்று கோபத்துடன் கேட்டார் கோபோ.
 
“”ஐயா! இங்கே அருகில் எங்கும் தண்ணீர் இல்லை. ஐந்து கல் தொலைவில் உள்ள குளத்திற்குச் சென்று தண்ணீர் எடுத்து வருகிறேன்!”
 
அப்போதுதான் கோபோ அவளைக் கவனித்தார். வெயிலில் நடந்ததால் அவள் உடல் எங்கும் வியர்வை வழிந்தது. அவருடைய கோபம் போன இடம் தெரியவில்லை. “இந்த வெயிலில் ஐந்து கல் நடக்க வைத்து விட்டோமே’ என்று வருந்தினார்.
 
“”இதை ஏன் என்னிடம் முன்னரே சொல்லவில்லை?” என்று கேட்டார்.
 
“”ஐயா! மழை பெய்யாததால் இங்கே உள்ள கிணறுகளும், குளங்களும் வற்றிவிட்டன. ஐந்து கல் தொலைவில் உள்ள குளத்தில்தான் தண்ணீர் உள்ளது. நாங்கள் எல்லாரும் நாள்தோறும் அவ்வளவு தொலைவு சென்றுதான் தண்ணீர் எடுத்து வருகிறோம். நீங்கள் கேட்டபோது வீட்டில் தண்ணீர் இல்லை. அதனால்தான் அங்கே சென்று தண்ணீர் கொண்டு வந்தேன்!” என்று பணிவுடன் சொன்னாள் அவள்.
 
அவள் தந்த தண்ணீரைக் குடித்தார். அவர் உள்ளம் குளிர்ந்தது.
 
“”அம்மா! உங்கள் அன்பிற்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. உங்களால் இந்த ஊர் மக்கள் தண்ணீர்ப் பஞ்சம் இல்லாமல் வாழப்போகின்றனர்!” என்றார் கோபோ.
 
அங்கேயே தியானத்தில் ஆழ்ந்தார். நீண்ட நேரம் அவர் உதடுகள் மந்திரங்களைச் சொல்லியபடி இருந்தன. தியானம் கலைந்து எழுந்தார். தன் கையில் இருந்த தடியால் தரையில் தட்டினார். என்ன வியப்பு! அங்கே தரை பிளவுபட்டு நீரூற்று ஒன்று வேகமாக வெளியே வந்தது.
 
“”அம்மா! இந்த இனிமையான நீரூற்று என்றும் வற்றாது. நீங்களும் இந்த ஊர் மக்களும் வளமாக வாழ்வீர்கள்!” என்று வாழ்த்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டு விட்டார்.
 
குட்டீஸ்… ஒரே ஒரு பெண்ணின் உபசரிப்பு குணத்தால் அந்த கிராமமே ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டதைப் பார்த்தீர்களா?
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பைரோமீட்டர் (Pyrometer)

அதிகபட்ச வெப்பநிலையை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நரியை ஏமாற்றிய சேவலின் தந்திரம்!
காட்டில் உள்ள மரத்தின் மேல் சேவல் ஒன்று வாழ்ந்து வந்தது. அது காட்டு சேவல் ஆனதால் கண்டதை எல்லாம் தின்று உடல் கொழுத்துத் திரிந்தது;
15 February, 2019, Fri 13:02 | views: 350 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெற்றியைத் தீர்மானிப்பது கடவுளா?
இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே வெகு மும்முரமாக சண்டை நடந்து கொண்டிருந்தது. எதிரி நாட்டுப் படையிடம் கிட்டத்தட்ட தோற்றுவிட்ட நிலை
3 February, 2019, Sun 6:13 | views: 547 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கோழியால் வந்த குழப்பம்!
ஒர் ஊரில் ஒரு பள்ளி வாசல் இருந்தது. அங்கே தொழுகை நடந்து கொண்டிருந்தது. முல்லா அந்த வழிபாட்டை முன்னின்று நடத்திக்கொண்டிருந்தார்.
27 January, 2019, Sun 7:06 | views: 714 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யார் மன்னன் ?
முன்னொரு காலத்தில் நீதி தவறாத மன்னன் ஒருவன் ஆண்டு வந்தான். மக்கள் அவனை மிகவும் மதித்துப் போற்றினர். தங்கள் உயிரும், கண்ணும்போல் ப
19 January, 2019, Sat 15:17 | views: 725 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிங்கமும் நரியும்...!
ஒரு கா‌ட்டி‌ல் பல ‌வில‌ங்குக‌ள் வா‌ழ்‌ந்து வ‌ந்தன. அ‌தி‌ல் ஒரு ‌சி‌ங்கமு‌ம், ந‌ரியு‌ம் வெகு நாளாக உண‌வி‌ன்‌றி அலை‌ந்து ‌தி‌ரி‌ந்த
13 January, 2019, Sun 7:55 | views: 875 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS