ஒரு நிமிடத்தில் 51 தர்பூசணிப் பழங்களை தலையால் உடைத்த இளைஞர்: வீடியோ இணைப்பு
13 May, 2018, Sun 8:13 GMT+1 | views: 1458
பாகிஸ்தானில் இளைஞர் ஒருவர் ஒரு நிமிடத்தில் 51 தர்பூசணிப் பழங்களை தலையால் உடைத்து உலக சாதனை படைத்துள்ளார்.
கராச்சி நகரைச் சேர்ந்தவர் ரஷித் நஸீம் என்பவர் கராத்தே வீரராக உள்ளார். இவர் ஏற்கனவே ஒரே நிமிடத்தில் 281 அக்ரூட் பருப்புகளை கையால் உடைத்து உலக சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் ஒரு நிமிடத்தில் 43 தர்பூசணி பழங்களை தலையால் உடைத்து ஜெர்மனியைச் சேர்ந்த தப்ஸி அகமது என்பவர் செய்த உலக சாதனையை முறியடிக்க ரஷித் முடிவு செய்தார்.
இதையடுத்து ஒரே நிமிடத்தில் 51 பழங்களை தலையால் மோதி உடைத்து பழைய சாதனையை முறியடித்தார்.
கவனத்திற்கு:இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.