Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
டெல்லி டேர்டெவில்சை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்!
6 May, 2018, Sun 6:26 GMT+1  |  views: 1066
ஐதராபாத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தியது. 
 
ஐபிஎல் தொடரின் 35-வது லீக்கும், இன்றைய 2-வது ஆட்டமும் ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி அந்த அணியின் ப்ரித்வி ஷா, மேக்ஸ்வெல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
 
மேக்ஸ்வெல் 2 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். அடுத்து ப்ரித்வி ஷா உடன் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். ப்ரித்வி ஷா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 25 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் ப்ரித்வி ஷா 36 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யர் உடன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார்.
 
ப்ரித்வி ஷா ஆட்டமிழந்ததும் டெல்லி அணியின் ஸ்கோர் வேகத்தில் சறுக்கல் ஏற்பட்டது. 16-வது ஓவரின் முதல் பந்தில் ஷ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழந்தார். இவர் 36 பந்தில் 44 ரன்கள் சேர்த்தார். ரிஷப் பந்த் 19 பந்தில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விஜய் சங்கர் 13 பந்தில் 23 ரன்கள் அடிக்க டெல்லி டேர்டெவில்ஸ் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் ரஷித் கான் 2 விக்கெட் வீழ்த்தினார்.
 
பின்னர் 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அலெக்ஸ் ஹேல்ஸ், ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். அவேஷ் கான் வீசிய இரண்டாவது ஓவரில் ஹேல்ஸ் கொடுத்த கேட்ச் வாய்ப்பை மேக்ஸ்வெல் தவறவிட்டார். இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட ஹேல்ஸ் தொடர்ந்து அதிரடியாக விளையாடினார். 
 
5 ஓவர்களில் ஐதராபாத் அணி 34 ரன்கள் எடுத்திருந்தது. 6-வது ஒவரை அனேஷ் கான் வீசினார். முதல் பந்தையே அவர் நோ-பாலாக வீசினார். இதையத்து பிரி ஹிட்டில் தவான் சிக்ஸர் அடித்தார். அதைத்தொடர்ந்து அந்த ஓவரின் 3,4 மற்றும் 6-வது பந்துகளில் ஹேல்ஸ் சிக்ஸர் அடித்தார். இதனால் ஆறு ஓவர்களில் ஐதராபாத் அணி 61 ரன்கள் குவித்தது. 
 
8-வது ஓவரை மிஷ்ரா வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தில் ஹேல்ஸ் கிளின் போல்டானார். ஹேல்ஸ் 31 பந்தில் 45 ரன்கள் எடுத்தார். இதில் 3 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும். அவரைத்தொடர்ந்து கேன் வில்லியம்சன் களமிறங்கினார். 10 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்தது. மிஷ்ரா வீசிய 11-வது ஓவரின் கடைசி பந்தில் தவான் 33 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போல்டானார். அதன்பின் மணிஷ் பாண்டே களமிறங்கினார்.
 
வில்லியம்சன், மணிஷ் பாண்டே இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். ஐதராபாத் அணி 16 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது. அப்போது அந்த அணியின் வெற்றிக்கு 4 ஓவர்களில் 39 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை பிளங்கீட் வீச அந்த ஓவரின் முதல் பந்திலேயே மணிஷ் பாண்டே ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து யூசுப் பதான் களமிறங்கினார்.
 
கடைசி இரண்டு ஓவரில் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை போல்ட் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே பதான் சிக்ஸர் அடித்தார். அதைத்தொடர்ந்து மூன்றாவது பந்தில் பதான் பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் 14 ரன்கள் கிடைத்தது. கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை டேன் கிறிஸ்டேன் வீசினார். அந்த ஓவரில் யூசுப் பதான் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார். 
 
இறுதியில் ஐதராபாத் அணி 19.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ஐதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வில்லியம்சன் 32 ரன்களுடனும், யூசுப் பதான் 27 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சிறப்பாக பந்துவீசிய அமித் மிஷ்ரா 4 ஓவர்களில் 19 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பைரோமீட்டர் (Pyrometer)

அதிகபட்ச வெப்பநிலையை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இந்தியாவுடான போட்டியில் நூலிழையில் தோல்வியடைந்த ஹாங்காங்..!!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்
19 September, 2018, Wed 8:19 | views: 356 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஐந்து முறை சாம்பியனான இலங்கை அணிக்கு ஏற்பட்ட நிலை!
ஆசிய கோப்பையை ஐந்து முறை கைப்பற்றிய இலங்கை அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் இருந்து
18 September, 2018, Tue 4:30 | views: 800 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஹாங்காங் அணியை எளிதில் வீழ்த்திய பாகிஸ்தான்..!!
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய இரண்டாவது போட்டியில் ஹாங்காங் அணியை, பாகிஸ்தான் அணி
17 September, 2018, Mon 9:47 | views: 376 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
137 ஓட்டத்தினால் பங்களாதேஷ் அணியிடம் தோல்வியடைந்த இலங்கை அணி..!!
பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆசியக் கிண்ணத் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி
16 September, 2018, Sun 12:17 | views: 532 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆசிய கிண்ணத்திற்காக முட்டிமோதவுள்ள 6 ஆசிய அணிகள்!
உலக கிரிக்கெட் அரசாங்கில் ஆசிய நாடுகளுக்கே உரித்தான ஆசிய கிண்ணப் போட்டியின் 14 ஆவது ஆசிய
15 September, 2018, Sat 5:00 | views: 863 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு Livry-Gargan
1150€ €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS