Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
உள்துறை அமைச்சின் புதிய அறிக்கை - 277 பேர் காயம் - தொடரும் போராட்டங்கள் - பரிஸ் மீண்டும் முடக்கப்படுமா? - காணொளி
France Tamilnews
சென்னை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா!
4 May, 2018, Fri 3:58 GMT+1  |  views: 1259
கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. 
 
ஐபிஎல் தொடரின் 33-வது லீக் ஆட்டம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சு தேர்வு செய்தார்.
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் நிதிஷ் ராணாவிற்குப் பதிலாக ரிங்கு சிங் சேர்க்கப்பட்டார். முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் சேர்த்தது. டோனி 25 பந்தில் 4 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 43 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். வாட்சன் 36 ரன்களும், ரெய்னா 31 ரன்களும், டு பிளஸ்சிஸ் 27 ரன்களும் எடுத்தனர். கொல்கத்தா அணி பந்துவீச்சில் பியூஸ் சாவ்லா, சுனில் நரேன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.
 
பின்னர் 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லைன், சுனில் நரேன் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரை நிகிடி வீசினார். அந்த ஓவரில் லைன் இரண்டு சிக்ஸர்கள் விளாசினார். அந்த ஓவரின் கடைசி பந்தில் லைன் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து உத்தப்பா களமிரங்கினார். அடுத்த ஓவரை ஆசிப் வீச, அந்த ஓவரின் நான்காவது பந்தில் நரேன் சிக்ஸர் அடித்தார். அடுத்த இரண்டு பந்துகளிலும் நரேன் அடுத்தடுத்து கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஜடேஜா தவறவிட்டார்.
 
நிகிடி வீசிய மூன்றாவது ஓவரில் கொல்கத்தா அணிக்கு மூன்று பவுண்டரிகள் உட்பட 14 ரன்கள் கிடைத்தது. 5-வது ஓவரை ஆசிப் வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் உத்தப்பா 6 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஷுப்மான் கில் களமிறங்கினார். 6-வது ஓவரை வாட்சன் வீச அந்த ஓவரில் ஷுப்மான் கில் மூன்று பவுண்டரிகள் அடித்தார். இதனால் ஆறு ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்தது. 
 
7-வது ஓவர் ஜடேஜாவிடம் கொடுக்கப்பட்டது. அந்த ஓவரின் முதல் மூன்று பந்தில் நரேன் 8 ரன்கள் எடுத்தார். நான்காவது பந்தை நரேன் தூக்கியடிக்க, அந்த பந்தை பிராவோ கேட்ச் பிடித்தார். நரேன் 20 பந்தில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகள் உட்பட 32 ரன்கள் எடுத்தார். இதையடுத்து ரிங்கு சிங் களமிறங்கினார். கொல்கத்தா அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்தது. ஹர்பஜன் சிங் வீசிய 12-வது ஓவரின் நான்காவது பந்தில் ரிங்கு சிங் போல்டானார். அவர் 16 ரன்கள் எடுத்தார். அவரைத்தொடர்ந்து கேப்டன் தினேஷ் கார்த்திக் களமிறங்கினார்.
 
15-வது ஓவரை ஆசிப் வீசினார். அந்த ஓவரில் கில் இரண்டு சிக்ஸர்களும், தினேஷ் கார்த்திக் ஒரு சிக்ஸரும் அடித்தனர். இதனால் அந்த ஓவரில் கொல்கத்தா அணிக்கு 21 ரன்கள் கிடைத்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கில் அரைசதம் அடித்தார். இது அவரது முதல் ஐபிஎல் அரைசதம் ஆகும். கொல்கத்தா அணி 16 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் குவித்தது. அப்போது கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 24 பந்தில் 23 ரன்கள் தேவைப்பட்டது. கில், தினேஷ் கார்த்திக் இருவரும் இணைந்து அணியை வெற்றிப்பெற வைத்தனர்.
 
கொல்கத்தா அணி 17.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. ஷிப்மான் கில் 57 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 45 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயர்ந்த பீட பூமி எது? 
   தீபெத் பீட பூமி

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பந்து வீச்சில் சந்தேகம்! அவுஸ்திரேலியா பறக்கும் அகில
இலங்கை அணியின் சுழற் பந்து வீச்சாளர் அகில தனஞ்சய இன்று அவுஸ்திரேலியாவுக்கு பயணமாகவுள்ளார்.
20 November, 2018, Tue 9:19 | views: 224 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தமிழர்களுக்கு கை கொடுத்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்வோம், உங்களோடு நானும் துணை
19 November, 2018, Mon 14:25 | views: 427 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொடரை இழந்தது இலங்கை!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 57 ஓட்டங்களினால் வெற்றி
18 November, 2018, Sun 12:06 | views: 281 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சேவாக் இல்லை என்றால் நான் இல்லை ! வீரர் உருக்கம்...
இந்தியாவில் ஐ.பி.எல்.கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிவரும் அர்மான் ஜாபர் என்பவர் தான் ஐ.பி.எல்.தொடர்களில்
17 November, 2018, Sat 16:29 | views: 450 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மீண்டும் தென் ஆப்பிரிக்காவுக்கு விழுந்த பெரிய அடி!
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணித்தலைவர் பாப் டூ பிளிசிஸ், இன்னும் இரண்டு ஆண்டுகளில் டி20 போட்டிகளில்
16 November, 2018, Fri 16:28 | views: 542 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS