23 மாடிக் கட்டடத்தை ஏறிப் பிரபலமடைந்த அணில்கரடி! வீடியோ இணைப்பு
17 June, 2018, Sun 7:31 GMT+1 | views: 1245
மினசோட்டா, அமெரிக்கா: 23 மாடிகளைப் படிக்கட்டில் ஏறுவது எளிதல்ல. ஆனால் அணில்கரடி ஒன்று கிட்டத்தட்ட ஒருநாள் முழுவதையும் எடுத்து 23 மாடிக்கட்டத்தில் ஏறியது.
அணில்கரடி மாடி ஏறுவதைப் பார்க்க கூட்டங்கூட்டமாக மக்கள் திரண்டனர். அணில்கரடி இப்போது சமூக ஊடகத்தில் #MPRraccoon எனப் பிரபலமடைந்துள்ளது. அதிகாலை 3 மணிக்குக் கட்டடத்தின் 23ஆம் மாடியை அது எட்டியது.
ஆர்வத்துடன் அதை நேரிலும் இணையத்திலும் பார்த்தனர் பலர். மேல்மாடியை அடைந்த அணில்கரடிக்கு சாப்பாட்டுடன் கூண்டு ஒன்று காத்திருந்தது.
காலை சுமார் 8.30 மணிக்கு விலங்கு கட்டடத்தில் ஏறுவதை வழிப்போக்கர்கள் பார்த்தனர். சிலர் அதை மீட்க முயன்றனர். ஆனால் அணில்கரடி பயந்துபோய் இன்னும் உயரமாக ஏறியது. அவ்வப்போது சுவரின் விளிம்புகளில் அது இளைப்பாறியது.
வீரதீர சாகசம் புரிந்த அணில்கரடிக்குப் பல ரசிகர்கள் கிடைத்துள்ளனர். அதற்கு Twitter பக்கம்கூட இப்போது உண்டு!
* உலகிலேயே மிகப் பெரிய பாலைவனம் எது? சஹாரா பாலைவனம் (ஆபிரிக்கா)
•
உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு:இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.