Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
கரவை மக்கள் ஒன்றியம் - பிரான்சு
200618
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
கடை Bail விற்பனைக்கு
090618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
Spoken English classes
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
சிங்கப்பூரில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் - டொனால்டு டிரம்ப் சந்திப்பு
12 June, 2018, Tue 4:12 GMT+1  |  views: 880

கடந்த 1910 முதல் 1945 வரை ஜப்பானின் ஆட்சியின் கீழ் கொரியா இருந்தது. இரண்டாம் உலகப்போரின்போது கொரியா மீட்கப்பட்டது. போரில் வென்ற வல்லரசு நாடுகளான அமெரிக்காவும் ரஷ்யாவும் கொரியாவை இரண்டாகப் பிரித்தன. ரஷ்யாவின் ஆதரவுடன் வடகொரியாவில் கம்யூனிச ஆட்சியும் அமெரிக்காவின் ஆதரவுடன் தென்கொரியாவில் முதலாளித்துவ ஆட்சியும் அமைந்தன. 1950 ஜூனில் தென்கொரியா மீது வடகொரியா திடீர் தாக்குதல் தொடுத்தது. இந்த போர் 1953 ஜூலை வரை நீடித்தது. இதன் பின்னரும் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நீடித்து வந்தது.

கடந்த 2011 டிசம்பரில் கிம் ஜாங் உன், வடகொரியாவின் புதிய அதிபராக பதவியேற்றார். அதன்பின் அந்த நாடு அடுத்தடுத்து அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்தியதால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் அதிகரித்தது. வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே எந்நேரமும் போர் வெடிக்கலாம் என்று அஞ்சப்பட்டது. வடகொரியா மீது ஐ.நா. சபையும் அமெரிக்காவும் கடுமையான பொருளா தார தடைகளை விதித்தன.

இந்தப் பின்னணியில் தென்கொரியாவின் தீவிர முயற்சியால் சியோ லில் கடந்த பிப்ரவரியில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதன்பின் கடந்த ஏப்ரலில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் சந்தித்துப் பேசினர். அப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்திக்க கிம் விருப்பம் தெரிவித்தார். இதனை ட்ரம்ப் ஏற்றுக் கொண்டார். பல்வேறு குழப்பங்களுக்குப் பிறகு ஜூன் 12-ம் தேதி ட்ரம்ப்பும் கிம்மும் சிங்கப்பூரில் சந்தித்துப் பேச முடிவு செய்யப்பட்டது.

வடகொரிய தலைநகர் பியாங்யாங்கில் இருந்து அதிபர் கிம் ஜாங் உன், ‘ஏர் சீனா’ விமானத்தில் நேற்று முன் தினம் மதியம் சிங்கப்பூர் சென்றார். அதேபோல், டிரம்பும் சிங்கப்பூர் சென்றடைந்துள்ளார். இதன்பின், சிங்கப்பூர் பிரதமர் லீ - ஐ இரு நாட்டு தலைவர்களும் தனித்தனியே சந்தித்தனர். இரு தலைவர்களின் சந்திப்பு குறித்து செய்தி சேகரிப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து 3000-க்கும் மேற்பட்ட செய்தியாளர் கள் சிங்கப்பூரில் குவிந்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று காலை  சந்திப்பு நடைபெற உள்ள கேபெல்லா ஹோட்டலுக்கு  இரு தலைவர்களும் பலத்த பாதுகாப்புடன் சென்றனர். சந்திப்பு நடக்கவுள்ள ஓட்டலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலில் சென்றடைந்தார். அவரை சந்திக்க வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் தான் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

சரித்திர சிறப்பு வாய்ந்த சந்திப்பு

உலக நாடுகள் உற்று நோக்கிய இந்த சந்திப்பு இன்று காலை 6.30 ( இந்திய நேரப்படி) மணிக்கு நடைபெற்றது. இரு தலைவர்களும் சிரித்த முகத்துடன் கைகளை குலுக்கி கொண்டனர். இந்த சந்திப்பின்போது வடகொரியாவில் உள்ள அணு ஆயுதங்களை அழிக்க வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தியிருப்பார் என கூறப்படுகிறது.

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ஏரோமீட்டர் (Aerometer)

காற்று மற்றும் வாயுக்களின் எடை மற்றும் அடர்த்தியை அளக்கும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நாயுடன் மல்லுக்கட்டிய மலைப்பாம்பு!
தாய்லாந்தில் மலைப்பாம்பின் பிடியில் சிக்கி உயிருக்கு போராடிய நாயை இரண்டு நபர்கள் சேர்ந்து
22 June, 2018, Fri 13:46 | views: 980 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கனடா நாடாளுமன்றத்தில் தாய்ப்பாலூட்டி பெரும் வரவேற்பு பெற்ற உறுப்பினர்!
கேள்வி நேரத்தின்போது கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவது குறித்து கனடாவின் சுகாதாரத்துறை அமைச்சரை
22 June, 2018, Fri 11:53 | views: 640 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
38 வயது கணவரிடம் விவாகரத்து கேட்கும் 11 வயது சிறுமி!
சூடான் நாட்டில் 11 வயது சிறுமி தனது வாழ்க்கையில் ஏற்பட்ட நரக வேதனை காரணமா தனது 38 வயது கணவரிடம்
22 June, 2018, Fri 8:22 | views: 1019 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
3 நிமிடம் முன்னதாக மதிய உணவை உண்டதால் ஊழியருக்கு இப்படி ஒரு தண்டனையா?
மதிய உணவை வாங்க மேசையைவிட்டு 3 நிமிடம் முன்னதாகச் சென்றதால் ஜப்பானிய அதிகாரிக்கு அபராதம்
21 June, 2018, Thu 13:57 | views: 1551 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அழகாகுவதற்காக நாயின் சிறுநீரை குடிக்கும் பெண்!
ஒரு காலத்தில் மிகுந்த மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு முகம் முழுவதும் முகப்பருக்களால் நிறைந்து எப்போதும்
21 June, 2018, Thu 10:32 | views: 1266 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
Offre d'emploi / vendeur ou vendeuse
SMIC €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS