Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஜோதிட நிலையம்
170818*15
வாடகைக்கு வீடு தேவை
170818*15
அழகுக் கலைநிபுனர் தேவை
100818*15
பிரெஞ்சுக் குடியுரிமை வழிகாட்டல்...
100818*15
வீட்டு வேலைக்கு ஆள் தேவை
100818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
Bail விற்பனைக்கு
230618
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
சிட்டு குருவியும் குட்டி யானையும்...!
3 June, 2018, Sun 15:29 GMT+1  |  views: 1505
”ஒரு காட்டுல யானைக் குட்டி இருந்தது. அதுக்குத் தான் பெரிய ஆள்ன்னு நினைப்பு,  தினமும் காட்டுல நடந்துக்கிட்டே தும்பிக்கைக்கு எட்டுகிற மரக் கிளைகளை ஒடிச்சு சாப்பிட்டுக்கிட்டே போகும். அப்படி ஒரு நாள் ஒரு மரத்தை நெருங்கினப்ப, அங்கே இருந்த சிட்டுக்குருவி கையை ஆட்டி, ‘வணக்கம் யானை நண்பா’ என்று கூறியது”
 
அதை கேட்ட யானைக்குட்டி அலட்சியமாக சொன்னது.‘உன்னோட உருவம் எவ்வளவு? என்னோட உருவம்  எவ்வளவு? நாம எப்படி நண்பர்களா இருக்க முடியும்?”
 
உடனே குருவி பதில் சொன்னது’
 
‘ஏன் முடியாது. நட்புக்கு உருவம் முக்கியம் இல்லை. மனசு தான் முக்கியம், நான் இந்த மரத்தில்  ரொம்ப நாட்களாக இருக்கேன். நீ இதை ஒடிச்சேன்னா, நானும் இங்கே இருக்கிற மற்ற பறவைகளும் எங்கே போவது? ” என்று கேட்டது.
 
”அதுக்கு யானை கேலியான குரலில் சொன்னது,
இந்த மரம் உங்களுக்கு வேணும்னா வீடா இருக்கலாம் ஆனா எனக்கு இது தான் சாப்பாடு” என்றது
 
அதைக்கேட்ட குருவி சொன்னது
 
”அப்படின்னா நமக்குள்ளே ஒரு போட்டி வைத்துக்கொள்ளலாம். அதில் நீங்கள் வெற்றி அடைந்தாள் , இந்த மரத்தின் கிளைகளை உடைத்து சாப்பிட்டுகொள்  நான் வெற்றி அடைந்தாள்  மரத்தை ஒடிக்க்கூடாது’ என்றது சிட்டுக்குருவி.
 
‘பொடிப் பயல் உன்னோடு போட்டியா? சரி சொல்லு’ என்றது யானைக் குட்டி.
 
”நாம ரெண்டு பேரும் அந்த மலை வரைக்கும் பறக்கணும். யார் முதலில் அங்கே போய்ச் சேர்கிறோமோ, அவங்கதான் வெற்றி அடைந்த மாதிரி” என்றது சிட்டுக்குருவி.
 
யானை தன்னாலே பறக்க முடியாதுனு தெரிஞ்சாலும் வீம்புக்காக இவ்வளவு தானா பறந்துட்டா போகுது என்று போட்டிக்கு ஒப்புக் கொண்டது
 
போட்டி ஞாயிற்றுகிழமை காலை நடைபெறும் என்று நாள் முடிவு செய்யப்பட்டது, இப்போ யானைக்கு ஒரு பிரச்சனை, நாலு நாளைக்குள்ளே எப்படியாவது பறக்க கற்றுக் கொள்ள வேண்டும், என்ன செய்வது, யாரிடம் கற்றுக் கொள்வது என குழம்பியது
 
பறக்கிறது என்பது பெரிய விஷயமா என்ன, லேசாக கத்துக் கொள்ளலாம் என்று நினைத்த யானை வழியிலே ஒரு கோழியை பார்த்தது
 
”கோழி கோழி, எனக்கு ஒரு உதவி செய்யணும்,  நான் எப்படியாவது பறக்கணும். அதுக்கு ஒரு வழி சொல்லு” என்றது.
 
அதைக்கேட்ட கோழி சொன்னது ”அது ரொம்ப சுலபம் அண்ணே. நான் என்ன செய்றேன்னு கவனி! அதே மாதிரி செய்தேன்னா நீயும் பறக்கலாம்” என்றது.
யானையும் ஒத்துக் கொண்டது
 
கோழி அங்கே இருந்த ஒரு பாறை மேலே ஏறி நின்னுகிட்டு சடசடனு. இறக்கை அடித்தபடியே தாவியது,  சில நொடிகள் அந்தரத்தில் பறந்தவாறு கீழே வந்து சேர்ந்துச்சு. ‘இவ்வளவு தான், சுலபம், எங்கே நீ பற பாக்கலாம்’ என்றது.
 
யானையும் கஷ்டப்பட்டு பாறை மீது ஏறி நின்று கோழி மாதிரி காலை விரிச்சிகிட்டு தாவியது,  அவ்வளவு தான், தொபுக்கடீர்னு கீழே விழுந்து நல்ல அடி, தொப்பை கலங்கி போச்சு,
 
யம்மா, யப்பானு கத்திகிட்டே டேய் பறக்குறதுக்கு வழி கேட்டா இடுப்பை முறிக்குறதுக்கு வழி சொல்றேனு சொல்லிகிட்டே எழுந்து நின்னுச்சி,
 
எங்கே யானை தன்னை அடித்துவிடுமோ என்று  பயந்து போன கோழி ஒரே ஓட்டமா ஓடிப்போனது.
 
யானை வலியோடு சே, அவசரப்பட்டு போட்டிக்கு ஒப்புக்கிட்டோமோ? , சிட்டுக் குருவியிடம் தோற்கக் கூடாது. எப்படியும் ஜெயிச்சுடணும்’னு நினைச்சது.
 
அப்போ, அந்தப் பக்கமாக ஒரு காகம் பறந்து வந்தது. அதை நிறுத்திய யானை, விஷயத்தைச் சொல்லிச்சு. யானையை மேலே இருந்து கீழே வரைக்கும் பார்த்த காகம், ‘உன்னோட வெயிட்தாண்ணே பிரச்னையே. நாலு நாள் சாப்பிடமா கிடந்தால் நல்லாப் பறக்கலாம்’ என்று சொல்லிவிட்டுப் பறந்துபோச்சு.”
 
யானை எதுவும் சாப்பிடாமல் பட்டினிகிடந்து நாலு நாள்ல வாடி வதங்கிப் போச்சு, எழுந்து நிக்கவே முடியலை, சரி எப்படியாவது பறந்து பாக்கலாம்னு தாவினா கண்ணை கட்டிகிட்டு மயக்கம் வந்து விழுந்திருச்சி,
 
காக்கா பக்கத்தில வந்து உட்கார்ந்து இதுக்கே உன்னாலே தாங்க முடியலையா, அப்போ நீ பறந்த மாதிரி தானு கேலி செய்தது
 
அதைக்கேட்ட யானை கோபத்தில அடிக்க தும்பிக்கையை சுழற்றியதும் காக்கா பறந்து போய்கிட்டே, உன்னாலே என்னை ஒண்ணும் பண்ண முடியாது, எனக்கு ரெக்கை இருக்கு, உனக்கு ரெக்கையில்லைனு சொல்லிச்சி,
யானைக்கு கோபம் அதிகமாகி கத்தியது,
 
அதைக்கேட்ட கழுகு கிட்டே வந்து சொன்னது,
 
‘ ஏன் அண்ணே கோபபடுறே, பறக்கிறது சாதாரண விஷயம் தான், அதுக்கு நீ என்ன செய்யணும்னா, அதோ தெரியுதே உயரமான மலை, அது மேலே ஏறு. உச்சிக்குப் போனதும், அங்கே இருந்து நான் பறக்கணும்னு சொல்லிகிட்டே கண்ணை மூடிக்கிட்டு குதி, தானா பறந்துடுவே  என்றது.
 
யானைக்கு அப்படி குதித்தால் பறக்கமுடியுமா என்று தயக்கமாக இருந்த்து, கழுகு சொன்னது
 
என்னை நம்புனா, உடனே நீ பறந்துடலாம் என்றது
 
யானை மூச்சுவாங்க மலை மேல ஏற ஆரம்பிச்சது, உச்சிக்கு போறதுக்கு முன்னாடி மூச்சு தள்ளிப்போச்சி, அங்கேயிருந்து கிழே பார்த்தா அவ்வளவு பெரிய காடு மரம் எல்லாம் குட்டியா தெரியுது, கண்ணை மூடிகிட்டு கிழே குதிக்க எட்டி பார்த்தா தலை சுத்துச்சி, வேற வழியில்லை என்று குதிக்க போகும் போது குருவி பறந்து வந்து சொன்னது
 
யானை அண்ணே, இங்கே இருந்து குதிச்சா நீங்க காலி, இவ்வளவு உயரத்துல இருந்து பாருங்க காடுங்கிறது எவ்வளவு அழகா இருக்கு, இதுக்குள்ளே ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு, இதுல யாருமே பெரிய ஆளும் இல்லை, யாரும் சின்ன ஆளும் இல்லை, 
 
இந்த காடு மனுசன் உண்டாக்கினது இல்லே, காலம் காலமாக இருந்துகிட்டே வர்ற இயற்கை, உங்களாலே பறக்க முடியாது, என்னால சின்ன கல்லைக் கூட தூக்க முடியாது, அவங்க அவங்க பலம் திறமை அவங்களுக்கு, இப்போ கூட ஒண்ணும் ஆகிடலை, நாம நட்பாக இருக்கிறதா இருந்தா போட்டியே வேண்டாம் என்றது
 
யானை யோசித்துப் பார்த்தது,
 
குருவி சொல்றது சரி தான், நம்மாலே பறக்கமுடியாது, குருவியாலே மரத்தை தூக்கமுடியாது, நாம ஏன் தேவையில்லாமல் அது கூட போட்டி போடணும்னு நினைச்சது, சே நான் தான் பெரிய ஆளுனு திமிரா நடந்துகிட்டேன், நாம இனிமே நண்பர்கள் ஆகிறலாம்னு சொல்லிச்சி குருவியும் அதை ஏத்துகிடுச்சி,
அன்று முதல் யானையும் சிட்டுக் குருவியும் காட்ல நண்பர்களாக இருந்தார்கள்.
 
நாம எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், நம்மால முடியாத ஒரு விஷயம், இன்னொருவரால் லேசாக செய்ய முடியும். அதனால், யாரையுமே நாம அலட்சியமா நினைக்கக் கூடாது. எல்லோர் கிட்டேயும் அன்பாகவும் நட்பாகவும் நடந்துக்கணும்
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக நீளமான நதி  எது?
   நைல் நதி (6695கி.மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இலாபம் பெரும் நோக்கமே முதலாலித்துவம்...!!
ஒரு ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்து வந்தான். தனது ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளைக் கொண்டு சென்று
10 August, 2018, Fri 12:29 | views: 690 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரண்டு புலிக்கு எங்கே போவேன்...?
ஓர் ஊரில் பெண் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. அவள் கணவன் வணிகத்திற்காக
29 July, 2018, Sun 14:23 | views: 1336 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ராமு சுயநலவாதியா?
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தில் ஏறி அதில் தொங்கும் உடலைக் கீழே
22 July, 2018, Sun 12:54 | views: 786 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஏன் திறக்கவில்லை சொர்க்கவாசல்?
கரிஷி மந்தபாலர் கடும் பிரம்மச்சாரி. எப்போதும் இறைச் சிந்தனையில் தோய்ந்திருப்பவர். அவருக்கு சொர்க்கம்
15 July, 2018, Sun 16:19 | views: 787 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கடுமையான முயற்சி..!!
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே
8 July, 2018, Sun 14:33 | views: 806 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi / crêpier

Paristamil Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
STUDIO A LOUER
500 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS