paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
கடை Bail
விற்பனைக்கு
Troyes 10000 நகர மத்தியில் நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் பலசரக்குக் கடை Bail விற்பனைக்கு
விற்பனை
யாழ்மாவட்டத்தில் வீடு, காணி, கடை விற்பனைக்கு
Bondyயில்
கடை விற்பனைக்கு
வீடு வாடகைக்கு
@  Fontenay-sous-Bois
தேவை
பரிஸ் 18இல் உள்ள தொலைத் தொடர்பு நிலயத்திற்கு ஓரளவு பிரெஞ்சு மொழி பேசத்தெரிந்த வேலைக்கான வீசா உள்ளவரும், பகுதிநேர அடிப்படையில் வேலை செய்யக்கூடிய செல்பேசி திருத்துனர் (Réparateur de Téléphone Portable) தேவை
மின்னஞ்சலில்
  விளம்பரம்
Mohan Jewellery
french-language-training
Europe Petrol Station
Auto Ecole Aswini
Paris Decoration
Peinture - Plomberie -Electricit
கவனத்திற்குரிய செய்தி
புதிய வீதிப்போக்குவரத்து நடைமுறைகள் - பகுதி1 - பிரான்சின் நெடுஞ்சாலைகள் சுடுகாடுகளல்ல - பெருமளவில் நிறுவப்படும் ரடார்கள்!
France Tamilnews
கட்டாயமாக்கப்படும் இணையவழி வருமானவரி!!
France Tamilnews
இணையஇணைப்புப் பகிர்வு - ஆபத்தின் உச்சம்!! அவதானம்!!
France Tamilnews
நாளை முதல் நவிகோ புரட்சி!!
France Tamilnews
பூமியை அச்சுறுத்தும் அஸ்டிராய்ட்கள்
23 May, 2012, Wed 19:47 GMT+1  |  views: 4827
ParisTamil news
]
  • Mohan Jewellery
  • Europe Petrol Station
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
  • Tamildarling

கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விண்கல் -அஸ்டிராய்ட் -பூமிக்கு நெருக்கமாக வந்து பூமியை எட்டிப் பார்த்துவிட்டுச் சென்றது. அப்போது அது பூமியிலிருந்து சுமார் 4 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. பூமிக்கும் இதர கோள்களுக்கும் இடையிலான தூரம் கோடிக் கணக்கான கிலோ மீட்டர் என்பதை வைத்துப் பார்த்தால் 4 லட்சம் கிலோ மீட்டர் என்பது “அருகாமையில்” என்று சொல்லத் தக்கதே.

இந்த விண்கல் 2004 டிசம்பரில் கண்டு பிடிக்கப்பட்ட போது இது இந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் பூமியின் மீது வந்து மோதலாம் என்று கருதப்பட்டது. ஆனால் பின்னர் இதன் சுற்றுப்பாதையை விரிவாக ஆராய்ந்த போது அவ்வித ஆபத்து ஏதும் இல்லை என்று கண்டறியப்பட்டது. பறக்கும் பாறை என்று சொல்லத்தக்க இந்த விண்கல்லின் நீளம் சுமார் 700 மீட்டர். எனினும் பூமிக்கு “ஆபத்தை உண்டாக்கக் கூடிய வாய்ப்பு உள்ள விண்கல்” என்ற பட்டியலில் இது சேர்க்கப்பட்டுள்ளது.

நிபுணர்கள் தயாரித்து வைத்துள்ள இப்பட்டியலில் சுமார் 783 விண்கற்கள் இடம் பெற்றுள்ளன. சிறியதும் பெரியதுமான இந்த விண்கற்கள் பூமியின் மீது மோத வாய்ப்பு உள்ளதா என்பது பற்றி விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர். பெரிய விண்கல் ஒன்று பூமியின் மீது வந்து மோது மேயானால் அதன் விளைவாகப் பேரழிவு ஏற்பட்டு மனித இனமே அழிந்து போக வாய்ப்புள்ளது. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இப்படியான பறக்கும் பாறை ஒன்று பூமியின் மீது வந்து மோதியிருக்கலாம் என்றும் அதன் விளைவாகவே பூமியில் அப்போது பேரெண்ணிக் கையில் இருந்த டைனோசார் விலங்குகள் கிட்டத்தட்ட பூண்டோடு அழிந்து போனதாகவும் ஒரு கருத்து உள்ளது.

புதன், வியாழன், பூமி போன்று பல கோள்கள் தனித்தனிப் பாதையில் - தனித்தனி வட்டங்களில் -சூரியனைச் சுற்றி வருகின்றன. செவ்வாய் கோளுக்கும் அதை அடுத்த வட்டத்தில் உள்ள வியாழனுக்கும் நடுவே ஏதோ ஒரு கோள் இருந்திருக்க வேண்டும் என்றும் அது சுக்கு நூறாக உடைந்து விட்டதாகவும் ஒரு கருத்து உள்ளது.

போடே என்ற ஜெர்மன் விஞ்ஞானி சூரியனுக்கும் பல்வேறு கோள்களுக்கும் உள்ள தூரத்தை வைத்து ஒரு “குருட்டாம் போக்கு” கணக்குப் போட்டு 1772 ஆம் ஆண்டில் மேற்படிக் கருத்தைக் கூறினார். பிறகு வானவியல் நிபுணர்கள் தொலை நோக்கி மூலம் வானை சல்லடை போட்டுத் தேடியபோது பல குட்டிக் கோள்கள் கண்டு பிடிக்கப்பட்டன. இவற்றில் பல, சில நூறு கிலோ மீட்டர் குறுக்களவு கொண்டவை.

இவை தவிர போடே குறிப்பிட்டுக் கூறிய சுற்றுப் பாதையில் “ஆட்டு மந்தை” போல எண்ணற்ற குட்டிக் கோள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவை அனைத்துமே சூரியனைச் சுற்றி வருபவை. இவை ஆங்கிலத்தில் அஸ்டிராய்ட்ஸ் என்று குறிப் பிடப்படுகின்றன. இந்த அஸ்டிராய்டுகளில் பல, தமது சுற்றுப் பாதையிலிருந்து விலகி பூமியின் சுற்றுப் பாதையைக் கடந்து சூரியனைச் சுற்றிச் செல்கின்றன.

சில அஸ்டிராய்டுகள் பூமிக்கு அருகில் பூமியைக் கடந்து செல்கின்றன. சமீபத்திய கணக்குப்படி 3 லட்சத்துக்கும் அதிகமான அஸ்டிராய்டுகள் உள்ளன. இவை அனைத்துக்கும் பெயர்கள் உண்டு. ஆரம்ப நாட்களில் இவற்றைக் கண்டுபி டித்தவர்கள் விசித்திரமான பெயர்களை வைத்தனர். இப்போது சர்வதேச வானவியல் அமைப்பின் அங்கீகாரத்துடன் முதலில் எண்கள் அளிக்கப்படுகின்றன. பின்னர் பெயர் வைக்கப்படுகிறது. தமிழகத்தில் காவலூர் என்னுமிடத்தில் உள்ள வான் ஆராய்ச்சிக்கூடம் 1988 பிப்ரவரியில் கண்டு பிடித்த ஒரு அஸ்டிராய்டுக்கு பிரபல கணித மேதை ராமானுஜத்தின் பெயர் வைக் கப்பட்டுள்ளது.

2000 நவம்பரில் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு அஸ்டிராய்ட் பெயர் வருணன். மாதம் ஒன்றுக்கு சுமார் 5000 வீதம் புதிது புதிதாக அஸ்டிராய்டுகள் கண்டுபிடிக்கப் பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் அஸ்டிராய்ட் ஒன்றினால் பூமிக்கு ஆபத்து ஏற்படும் போலத் தோன் றினால் பூமியை எவ்விதம் காப்பாற்றுவது என்பது பற்றிப் பல திட்டங்கள் பரிசீலிக் கப்பட்டு வருகின்றன.

பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது?
   எவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)

Mohan Jewellery Mart
 மோகன் ஜுவலரிமாட் இன்றைய தங்கத்தின் விலை கிராம்: 33,69 € --Tél:01 42 05 65 26
 
AKS - Service du Monde  Tél.:09 67 48 60 40
Zitrone 3L

1,50€
  King mackerel 1kg

3,99€
  Rice 5kg

5,50€
TK Cash and Carry  Tél.:09 80 68 74 21
Le carton de 4g Tilapias

8,00€
  Nido 2,50 Kg

17,50€
  Coca-Cola 33cl boite de 24

8,90€
888 limousine
•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பாம்புத் தோல் போன்று காட்சியளிக்கும் புளூட்டோ
சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில் ஒன்றான புளூட்டோ மொத்தம் உள்ள 9 கிரகங்களிலும் மிகச்சிறியது. சிறிய கிரகமான புளூட்டோவை ஆராய நாசாவால் நியூ கரிசான்ஸ் விண்கலம் கடந்த 9 ஆண்டுகளுக்கு
25 September, 2015, Fri 17:41 | views: 541 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
செவ்வாய் கிரகத்தில் பனிக்கட்டிப் படிமம்
செவ்வாய் கிரகத்தில் பனிக்கட்டி படிமங்கள் உறைந்திருப்பதற்கு ஆதாரமாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் அண்மையில் புகைப்படம் வெளியிட்டது. செவ்வாய் கிரகத்துக்கு அடியில் பனிக்கட்டி படிமங்கள்
15 September, 2015, Tue 10:50 | views: 602 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சர்வதேச விண்வெளி மையத்தில் பிரதிபலித்த பூமியின் மின்னல்
பூமியில் ஏற்பட்ட மின்னல், சர்வதேச விண்வெளி மையத்தில் பிரதிபலிக்கும் நிகழ்வு விண்வெளி வீரர் ஒருவரின் புகைப்படத்தில் பதிவாகியுள்ளது. பூமியிலிருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ப
6 September, 2015, Sun 4:15 | views: 700 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கடல் தேளின் படிமம் கண்டுபிடிப்பு
460 மில்லியன் வருடங்களுக்கு முன்பாக வசித்த பிரம்மாண்டமான கடல் தேளின் படிமங்களை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தத் தேள் 2 மீட்டர் நீளம் கொண்டதாக இருந்தது. ஒல்லியான உ
5 September, 2015, Sat 0:56 | views: 573 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
செவ்வாய் கிரகத்தில் பயணிகள் விமானம்! புதிய தகவல்
செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி ரோவர் எடுத்த புகைபடத்தை நாசா வெளியிட்டு உள்ளது. அதில் செவ்வாய் கிரக "மேற்பரப்பில் வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கான முக்கிய ஆதாரம் ஒன்று வெளியாகி
26 August, 2015, Wed 14:52 | views: 2716 |  செய்தியை வாசிக்க
french-language-training
Amethyste International
  பிரான்ஸ் நிர்வாக தகவல்கள்
La franchise - காப்பீட்டு விலக்கு - தலைசுற்ற வைக்கும் சொல்!
  தகவலை வாசிக்க: 25 புள்ளிகள்  
மகப்பேறு - நிர்வாகம் மற்றும் மருத்துவப் பதிவு நடைமுறைகள் (La dclaration de grossesse)
  தகவலை வாசிக்க: 5 புள்ளிகள்  
விண்ணப்பித்தல் - புதுப்பித்தல் - களவு அல்லது தொலைதல்
  தகவலை வாசிக்க: 10 புள்ளிகள்  
Sous-location -Hebergement - Colocation - உப உள் வாடகை - கூட்டுவாடகை - இலவசத் தங்குமிட அனுமதி
  தகவலை வாசிக்க: 30 புள்ளிகள்  
  Annonce
Appartement Aulnay Sous Bois 2 pieces
130000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS