Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
180318
அழகுக் கலைநிபுனர் தேவை
070318
வீடு வாடகைக்கு
040318
ஆங்கில ஆசிரியர்
200218
அழகுக் கலைநிபுனர் தேவை
190218
Baill விற்பனைக்கு
160218
ஆசிரியர் தேவை
160218
Bail விற்பனைக்கு
030218
Bail விற்பனைக்கு
010218
கடை Bail விற்பனைக்கு
130118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
குரங்கணி தீ விபத்து குறித்து விசாரணைக்கு அரசு உத்தரவு
13 March, 2018, Tue 2:28 GMT+1  |  views: 323

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தேனி மாவட்டம், போடி வட்டம், குரங்கணி மலைப்பகுதியில், 11-ந் தேதியன்று கொழுக்குமலை கிராமத்தில் இருந்து குரங்கணி கிராமம் நோக்கி கீழிறங்கிக்கொண்டிருந்த, மலையேற்றம் சென்ற 36 நபர்கள் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிக்கொண்டனர். இந்த செய்தியை அறிந்து நான் மிகவும் மனவேதனை அடைந்தேன்.

இந்த கொடிய விபத்து பற்றிய செய்தி அறிந்தவுடன், மலைப்பகுதியில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். எனது வேண்டுகோளுக்கு இணங்க துணை முதல்-அமைச்சர், வனத்துறை அமைச்சர், வனத்துறை உயர் அலுவலர்கள், மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட வன அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப்பணிகளை மேற்கொண்டனர்.

தீயணைப்புத் துறை, வனத்துறை, வருவாய்த் துறை, காவல் துறையினர் ஆகியோர் தேவையான உபகரணங்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டதில் 26 நபர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசின் வேண்டுகோளை ஏற்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஹெலிகாப்டர் மற்றும் கமாண்டோ படையினரை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தனர். இவர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காட்டுத்தீயில் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கும், மருத்துவ துறையினருக்கும் உத்தரவிட்டுள்ளேன்.

இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக்கொள்கிறேன். காட்டுத்தீயில் சிக்கியவர்களில் சென்னையைச் சேர்ந்த அகிலா, ஹேமலதா, புனிதா, சுபா, அருண், விவின், நிஷா மற்றும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த திவ்யா, விவேக் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகிய பத்து நபர்கள் துரதிருஷ்டவசமாக உயிர் இழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த பத்து நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

காட்டுத் தீ சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளவும், வனத்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் மலை ஏற்றத்திற்கு அழைத்துச் சென்றவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிர் இழந்த பத்து நபர்களின் குடும்பத்திற்கு தலா நான்கு லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்தும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்தும் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

அம்மீட்டர் (Ammeter)

மின்சாரத்தின்  அளவீட்டை கணக்கிடுவது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் நோட்டீஸ்
மத்திய பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் அனுமதி கோரியது.
23 March, 2018, Fri 14:25 | views: 390 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: டெல்லி ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கோரி கார்த்தி சிதம்பரம் மனு
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்ஜாமீன் கோரி கார்த்தி சிதம்பரம் தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
23 March, 2018, Fri 14:23 | views: 211 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நதிகளை இணைப்பதன் மூலம் காவிரி பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்
நதிகளை இணைப்பதன் மூலம் காவிரி பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறினார்
23 March, 2018, Fri 3:39 | views: 299 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மத்திய நிதி ஆணையத்தின் அதிகார வரம்பை முழுமையாக ஏற்க முடியாது
மத்திய நிதி ஆணையத்தின் அதிகார வரம்பை முழுமையாக ஏற்க முடியாது என்று சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
23 March, 2018, Fri 3:38 | views: 167 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நெல்லையில் விதிக்கப்பட்டு இருந்த 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது
நெல்லை மாவட்டத்தில் ராம ராஜ்ய ரத யாத்திரையை முன்னிட்டு கடந்த 19-ம் தேதி முதல் அமலில் இருந்த 144 தடை உத்தரவு இன்று வாபஸ்...
23 March, 2018, Fri 3:36 | views: 171 |  செய்தியை வாசிக்க
new-veeras-le-blanc-mesnil-france

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
F2 A LOUER
800 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS