Paristamil France administrationParistamil France administration
வர்த்தகர் பதிவு விளம்பரம் செய்ய வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
கடை Bail விற்பனைக்கு
090618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
Spoken English classes
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: இலங்கை - இந்தியா இன்று மீண்டும் மோதல்!
12 March, 2018, Mon 7:00 GMT+1  |  views: 1197

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இந்தியா - இலங்கை அணிகள் இன்று மீண்டும் மோதுகின்றன. முந்தைய தோல்விக்கு நமது அணி பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

 
இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய மூன்று அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் ரவுண்ட் முடிந்து விட்டது.
 
இலங்கை அணி தனது தொடக்க ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது. அடுத்த ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை பதம் பார்த்தது. வங்காளதேச அணியோ 215 ரன்கள் இலக்கை சேசிங் செய்து, இலங்கைக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. ஆக, மூன்று அணிகளும் தலா ஒன்றில் வெற்றி, ஒன்றில் தோல்வி என்று சமநிலை வகிப்பதால் இந்த போட்டித் தொடர் இப்போது கூடுதல் சுவாரஸ்யத்தை உருவாக்கி இருக்கிறது.
 
இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் 4-வது லீக்கில் இந்திய அணி, மறுபடியும் இலங்கையை சந்திக்கிறது. முந்தைய ஆட்டத்தில் செய்த தவறுகளை திருத்திக்கொண்டு, இலங்கையை பழிதீர்ப்பதற்கு இந்திய அணிக்கு இது அருமையான வாய்ப்பாகும். அது மட்டுமின்றி இதில் வெற்றி பெற்றால், நெருக்கடியும் ஓரளவு தணியும்.
 
விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருப்பதால் இந்திய அணியை வழிநடத்தும் ரோகித் சர்மா பார்ம் இன்றி தவிப்பது தான் கவலைக்குரிய அம்சமாக இருக்கிறது. கடைசியாக அவர் விளையாடிய ஐந்து 20 ஓவர் ஆட்டங்களில் 21, 0, 11, 0, 17 ரன் வீதமே எடுத்துள்ளார். மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான் அட்டகாசப்படுத்தி வரும் நிலையில் (கடைசி 5 ஆட்டத்தில் 72, 24, 47, 90, 55 ரன்) ரோகித் சர்மாவும் மிரட்டினால் அணி வலுவான ஸ்கோரை எட்ட முடியும். மிடில் வரிசையில் சுரேஷ் ரெய்னா, தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே ஆகியோரின் பங்களிப்பை அணி நிர்வாகம் அதிகம் எதிர்பார்க்கிறது.
 
இலங்கை அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் நல்ல நிலையில் இருக்கிறது. குசல் பெரேரா தொடர்ச்சியாக இரு அரைசதங்களை விளாசியுள்ளார். எல்லா வகையிலும் சவால் கொடுக்க இலங்கை அணி தயாராக இருப்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
 
பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் மூன்று ஆட்டங்களிலும் 2-வது பேட் செய்த அணியே வெற்றி கண்டிருப்பதால் இன்றைய ஆட்டத்தில் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும்.
 
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
 
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா, மனிஷ் பாண்டே, ரிஷாப் பான்ட் அல்லது லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர், ஜெய்தேவ் உனட்கட், ஷர்துல் தாகூர், யுஸ்வேந்திர சாஹல்.
 
இலங்கை: குணதிலகா, குசல் மென்டிஸ், குசல் பெரேரா, ஷனகா, திசராபெரேரா (கேப்டன்), தரங்கா, ஜீவன் மென்டிஸ், தனஞ்ஜெயா டி சில்வா, அகிலா தனஞ்ஜெயா, சமீரா, நுவான் பிரதீப்.
 
இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை டி ஸ்போர்ட் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

வெர்னியர் (Vernier)

சென்டிமீட்டர் அளவைவிட மிகக் குறைவான அளவீட்டை அளக்கும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
எகிப்து அணியை வென்ற ரஷியா!
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் எகிப்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ரஷியா அணி வெற்றி
20 June, 2018, Wed 4:21 | views: 442 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
செனகல் அணி போலந்தை வீழ்த்தியது!
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் போலந்தை 2-1 என வீழ்த்தி செனகல் அணி வெற்றி பெற்றுள்ளது.
20 June, 2018, Wed 4:11 | views: 219 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று சாதனை!
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் கொலம்பியாவை 2-1 என வீழ்த்தி ஜப்பான் அணி வரலாற்றுச் சாதனையை
20 June, 2018, Wed 3:56 | views: 300 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
60 வருட மோசமான சாதனையை தகர்த்த ஸ்வீடன்!
உலகக்கோப்பை முதல் ஆட்டத்தில் தென்கொரியாவை 1-0 என ஸ்வீடன் வீழ்த்தி 60 வருட வறட்சிக்கு முற்றுப்புள்ளி
19 June, 2018, Tue 5:05 | views: 1055 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
துனிசியாவை வீழ்த்திய இங்கிலாந்து!
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்றைய மூன்றாவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல்
19 June, 2018, Tue 4:42 | views: 369 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS