Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
கொல்கத்தா அணிக்கு எதிராக 55 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி!
28 April, 2018, Sat 3:44 GMT+1  |  views: 1156
ஐ.பி.எல். தொடரில், ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது. 
 
ஐபிஎல் தொடரின் இன்றைய 26-வது ஆட்டம் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் 8 மணிக்கு தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
 
டெல்லி அணியின் ப்ரித்வி ஷா, கொலின் மன்ரோ தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர். இதனால் டெல்லி அணி 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்தது. 
 
மன்ரோ 18 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஷிவம் மாவி பந்தில் போல்டாகி வெளியேறினார். அதன்பின் ப்ரித்வி ஷா உடன் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய ப்ரித்வி ஷா 44 பந்தில் 62 ரன்கள் எடுத்து பியூஷ் சாவ்லா பந்தில் போல்டாகி ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 93 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
 
கொல்கத்தா அணி 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தொடக்க வீரர்களாக கிறிஸ் லின், சுனில் நரேன் களமிறங்கினர். மேக்ஸ்வெல் வீசிய இரண்டாவது ஓவரிலேயே அதிரடி வீரர் கிறிஸ் லின் 5 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய உத்தப்பா 1 ரன்கள் எடுத்த நிலையில் நடையை கட்டினார்.
 
அடுத்ததாக வந்த நிதிஷ் ரானா, நரேனுடன் ஜோடி சேர முயன்ற நிலையில் டிரெண்ட் போல்ட், நரேனை 26 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேற்றினார். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் தினேஷ் கார்த்திக் 18 பந்தில் 18 ரன்கள் எடுத்து அவுட் ஆக கொல்த்தா அணி 9.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் மட்டுமே எடுத்தது.
 
இதையடுத்து களமிறங்கிய சுப்மான் கில், ஆண்ட்ரே ரஸல் ஜோடி சேர்ந்தனர். இருவரும் மாறி,மாறி சிக்ஸ், பவுண்டரி என அடித்து அணியின் ரன்களை வேகமாக உயர்த்தினர். கொல்கத்தா அணி 141 ரன்கள் எடுத்த போது கில் 37 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து வந்த சிவம் மாவி டக் அவுட் ஆனார். அதிரடியாக ஆடிய ரஸல் 44 ரன்களில் அவேஸ் கான் பந்தில் போல்ட் ஆனார்.  பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக கொல்கத்தா அணி  20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. இதனால், ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான முதல் போட்டியிலேயே டெல்லி அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி உள்ளது.
 
டெல்லி அணி தரப்பில் போல்ட், மேக்ஸ்வெல், அவேஸ் கான், மிஸ்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். ஆட்ட நாயகனாக டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் தேர்வு செய்யப்பட்டார். 
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* 1990-ம் ஆண்டு பீஜிங் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல் முதலாக கபடி ஆட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

2004-ம் ஆண்டு முதல் உலக கோப்பைக்கான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
டோனிக்கு நிகர் யாருமில்லை! புகழும் பிரபலம்
அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமாக விளையாடிய மகேந்திர சிங் டோனியை, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரும் முன்னாள் தலை
20 January, 2019, Sun 10:59 | views: 456 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உபாதையிலிருந்து தப்பினார் குசல் மெண்டிஸ்!
கிரிக்கெட் அவுஸ்திரேலிய பதினொருவர் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியின் போது உபாதைக்குள்ளான இலங்கை அணியின் குசல் மெண்டிஸின் உபாதை
20 January, 2019, Sun 6:42 | views: 306 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கோஹ்லியின் சாதனையை முறியடித்து அசத்திய டோனி!
அவுஸ்திரேலியா அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் கடைசி வரை களத்தில் நின்று வெற்றி தேடித்தந்த டோனி, சேஸிங்கில் கோஹ்லியின்
19 January, 2019, Sat 9:41 | views: 619 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மீண்டும் அதிரடிய காட்டிய இலங்கை வீரர்
B.P.L இறுதி ஓவரில் திசர பெரேராவின் அதிரடி துடுப்பாட்டத்தினால் Comilla Victorians அணி வெற்றியை தனதாக்கியது. Khulna Titans மற்று
19 January, 2019, Sat 6:55 | views: 735 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அவுஸ்திரேலிய மண்ணில் அணி அபார வெற்றி! வரலாற்று சாதனை படைத்த இந்தியா
சரித்திர டெஸ்ட் தொடரை வென்ற கையோடு அவுஸ்திரேலியா அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும், இந்தியக் கிரிக்கெட் அணி
18 January, 2019, Fri 12:38 | views: 685 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS