Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
100718*15
வேலைக்கு ஆள் தேவை!
070718*15
சாரதி அனுமதிப்பத்திரம்...
020718*15
கடை Bail விற்பனைக்கு
270618
கடை Bail விற்பனைக்கு
270618
வேலை வாய்ப்பு
260618
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
Spoken English classes
150518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
பெங்களூரை வீழ்த்தியது ராஜஸ்தான்!
16 April, 2018, Mon 3:53 GMT+1  |  views: 669
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 19 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ். 
 
ஐபிஎல் தொடரின் 11-வது போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் 45 பந்தில் 2 பவுண்டரி, 10 சிக்சருடன் 92 ரன்கள் அடித்து அணியின் ரன்குவிப்புக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
 
பின்னர் 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் மெக்கல்லம், குயின்டான் டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். நான்கு ரன்கள் எடுத்த நிலையில் மெக்கல்லம் முதல் ஓவரிலேயே ஆட்டம் இழந்தார்.
 
அடுத்து குயின்டான் டி காக் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். விராட் கோலி தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அணியின் ஸ்கோர் 8 ஓவரில் 81 ரன்னாக இருக்கும்போது டி காக் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். 26 பந்தில் அரைசதம் அடித்த விராட் கோலி 30 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது ராயல் சேலஞ்சர்ஸ்  பெங்ங்களூர் அணி 10.2 ஓவரில் 101 ரன்கள் எடுத்திருந்தது.
 
விராட் கோலி அவுட்டானதும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஸ்கோர் சரிய ஆரம்பித்தது. அதிரடி மன்னன் டி வில்லியர்ஸ் 18 பந்தில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நெஹி 3 ரன்னில் ஆட்டமிழக்க, 6-வது விக்கெட்டுக்கு மந்தீப் சிங் உடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார்.
 
16-வது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். இந்த ஓவரில் பெங்களூர் அணி 6 ரன்கள் மட்டுமே எடுத்தது. 17-வது ஓவரை உனத்கட் வீசினார். இந்த ஓவரில் வாஷிங்டன் சுந்தர் ஒரு சிக்ஸ், மந்தீப் சிங் இரண்டு பவுண்டரிகள் விளாசினார்கள்.
 
கடைசி மூன்று ஓவரில் பெங்களூர் அணிக்கு 61 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை லாக்லின் வீசினார். இதில் வாஷிங்டன் சுந்தர் ஒரு சிக்ஸ் அடிக்க பெங்களூர் அணிக்கு 13 ரன்கள் சேர்த்தது.
 
கடைசி 2 ஓவரில் 48 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். முதல் பந்தை பவுண்டரிக்கும், 2-வது பந்தை சிக்சருக்கும் தூக்கினார் வாஷிங்டன் சுந்தர். 5-வது பந்தில் க்ளீன் போல்டானார். வாஷிங்டன் சுந்தர் 19 பந்தில் 1 பவுண்டரி 3 சிக்சருடன் 35 ரன்கள் சேர்த்தார். அடுத்து கிறிஸ் வோக்ஸ் களம் இறங்கினார். கடைசி பந்தில் இவர் ரன் அடிக்கவில்லை.
 
பெங்களூர் அணிக்கு கடைசி ஓவரில் 36 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த அணியால் 16 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் பெங்களூர் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்து 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. மந்தீப் சிங் 25 பந்தில் 6 பவுண்டரி, 1 சிக்சருடன் 47 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார்.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாடு,

  ஜெர்மனி

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் ஒருவருக்கு விளையாட தடை விதித்த கிரிக்கெட் சபை!
தனுஷ்க குணதிலக, அனைத்து வகையான சர்வதேசப் போட்டிகளிலும் விளையாட இடைக்காலத் தடை
23 July, 2018, Mon 4:29 | views: 392 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறைத் தண்டனைக்குப் பதிலாக ரொனால்டோ எடுத்த அதிரடி முடிவு!
கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டாண்டு தண்டனைக்குப் பதிலாக 16.8 மில்லியன் பவுண்டு செலுத்த சம்மதம்
22 July, 2018, Sun 4:53 | views: 1936 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஏபி டி வில்லியர்ஸ்க்கு கடும் எதிர்ப்பு..!!
ஏபி டி வில்லியர்ஸ்க்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்திய ரசிகர்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.
21 July, 2018, Sat 4:00 | views: 625 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகளின் 2வது டெஸ்ட் இன்று ஆரம்பம்!
இலங்கை, தென்ஆப்பிரிக்காவுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று
20 July, 2018, Fri 4:33 | views: 380 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் டோனி?
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோல்வி அடைந்த ஆட்டத்தில் டோனி பந்தை வாங்கி சென்றதால் அவர்
19 July, 2018, Thu 4:47 | views: 844 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
PARTITION LEGAL NOTICE
10 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS