Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
ஒரு நிர்வாண மாடலின் வாழ்க்கை கதை...!!
1 April, 2018, Sun 7:42 GMT+1  |  views: 1314
‘‘நிர்வாண மாடலிங்கான எனக்கு அதற்குரிய மரியாதை கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது’’ என்கிறார் லட்சுமி. மும்பையில் உள்ள சர் ஜே.ஜே. நுண்கலைக் கல்லூரியில் சுமார் 30 ஆண்டுகாலமாக நிர்வாண மாடலாக இருப்பவர் இவர். பல்வேறு கஷ்டங்களைத் தாண்டி நிர்வாண மாடலிங்கில் பெயர் பெற்றிருப்பதாக சொல்கிறார், லட்சுமி.
 
‘‘என் மகனுக்கு மூன்று வயதானபோது என் கணவர் இறந்துவிட்டார். அப்போது ஏதாவது ஒரு வேலைக்குப் போகவேண்டிய நிர்பந்தத்தில் நான் இருந்தேன். நான் வேலைக்காக என் அத்தை ஒருவரை தொந்தரவுபடுத்திக்கொண்டே இருப்பேன். அவரும், பார்க்கலாம் பார்க்கலாம் என்று சொல்லிக்கொண்டிருப்பார். ஒருநாள் மதியம், அவர் பணிபுரியும் ஜே.ஜே. நுண் கலைக் கல்லூரிக்கே சென்றுவிட்டேன். அங்குதான் அவர், ‘அனாடமி’ மாடலாகப் பணிபுரிவதை அறிந்தேன். அப்போது அவர், ‘வேலை வேலை என்கிறாயே.... இந்த வேலை பார்க்கிறாயா?’ என்று கேட்டார். எனது இரு குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் இருந்த நான், எனது தயக்கத்தையும் கூச்சத்தையும் உதறி உடனே சரி சொல்லிவிட்டேன்.
 
பல ஆண்களின் கண்களுக்கு முன்னால் நான் என் ஆடைகளைக் களைந்த முதல்நாள் எனக்கு ரொம்ப நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் மிகவும் தயங்கித் தயங்கி அதைச் செய்தேன். இடையிடையே, உடைந்து அழவும் ஆரம்பித்தேன். ஆனால் அங்குள்ள பேராசிரியர்களும் மாணவர்களும் மிகவும் உறுதுணையாக இருந்தார்கள். இன்று, உலகிலேயே மிகச் சிறந்த வேலையை நான் பார்க்கிறேன் என்று பெருமையோடு சொல்வேன்’’ என்கிறார் லட்சுமி.
 
இவர் மாடலாக பணிபுரிந்த கட்டிடத்தில் சமீபத்தில் இவருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.
 
‘‘பெரிதும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கும் ஒரு வேலையில் நான் பல ஆண்டுகளைக் கழித்துவிட்டேன். கடைசியில், அதற்கு உரிய அங்கீகாரம் கிடைத்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. இந்தத் தருணத்துக்காகத்தான் நான் வாழ்நாள் முழுவதும் காத்திருந்தேனோ என்னவோ!’’ என்கிறபோது, லட்சுமியின் விழியோரம் நீர் கசிகிறது.
 
லட்சுமியின் கதை, மராத்தி மொழியில் திரைப்படமாகத் தயாராகிறது. ஸீ ஸ்டூடியோஸ் தயாரிப்பில், ரவி ஜாதவ் இயக்கும் இப்படம், வருகிற ஏப்ரல் 27-ந் தேதி வெளியாகிறது. 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய பாலைவனம் எது? 
  சஹாரா பாலைவனம் (ஆபிரிக்கா)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஓர் நாரையின் அழகான காதல் கதை!
தென்னாப்பிரிக்காவிலிருந்து மிகப்பெரிய மஞ்சள் மூக்கு நாரைகள் (Stork), ஐரோப்பாவில் உள்ள குரேஷியா நாட்டின்
22 April, 2018, Sun 13:33 | views: 703 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விளம்பி தமிழ் புதுவருடம்! 12 இராசிகளுக்குமான பலன்கள்!
விளம்பி வருடம் உத்தராயணப் புண்ணிய காலத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி சனிக்கிழமை காலை கிருஷ்ண பட்சம்
13 April, 2018, Fri 10:54 | views: 1843 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கனவு காண்பதால் நிகழும் அதிசயம்!
ஏதாவது தவறு செய்துவிட்டாலோ, அல்லது நினைவில்லாமல் மறந்துவிட்டாலோ பிறரிடம் இருந்து முதலில் வரும்
8 April, 2018, Sun 17:33 | views: 1037 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தமிழுக்கு வயது 4500!
இந்தியாவில் 22 கோடி மக்களால் பேசப்படும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய திராவிட மொழிகள் 4500
26 March, 2018, Mon 13:37 | views: 1042 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பைதகரஸ் தேற்றத்தை கண்டுபிடிக்க உதவிய தமிழர்கள்!
கணித வல்லுநர் பித்தகரஸ் கிறிஸ்துவுக்கு முன் ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
12 March, 2018, Mon 13:11 | views: 1525 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS