யோகாவில் கின்னஸ் சாதனை படைத்த பெண்மணி! வீடியோ இணைப்பு
20 January, 2018, Sat 14:14 GMT+1 | views: 1316
சென்னையை சேர்ந்த பெண் தொடர்ந்து தொடர்ச்சியாக 6 நாட்கள் யோகா செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
சென்னையைச் சோந்தவா் கவிதா பரணிதரன். இவருக்கு சிறு வயதிலிருந்தே யோகா மீது ஆர்வம் இருந்துள்ளது. பல யோகா போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றுள்ளார்.
யோகாவில் கின்னஸ் சாதனை படைக்க முடிவு செய்த கவிதா தொடர்ச்சியாக மாரத்தான் யோகா செய்வதனெ முடிவு செய்தார்.
இதனையடுத்து கடந்த 23ம் தேதி காலை 7 மணி முதல் தற்போது வரை அவர் மார்த்தான் யோகாவில் ஈடுபட்டு வருகிறார்.
முன்னதாக நாசிக்கைச் சோ்ந்த பிரதன்யா பாட்டீல், கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை மொத்தம் 103 மணி நேரம் தொடா்ந்து மாரத்தான் யோகா செய்து கின்னஸ் சாதனை படைத்திருந்தார்.
அவரது சாதனையை நேற்று பிற்பகல் 2 மணியளவில் கவிதா முறியடித்துள்ளார். அவர் தொடர்ந்து யோகா செய்து வருகிறார். கவிதா நாளை யோகாவை நிறைவு செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.
யோகாவில் கின்னஸ் சாதனை படைத்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்த கவிதா பரணிதரனை பலர் பாராட்டி வருகின்றனர்.
மின்சாரம், வோல்டேஜ், திறன் எல்லாவற்றையும் மொத்தமாக அளவிடும் கருவி.
•
உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு:இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.