Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
அதிக எடை கொண்ட கருந்துளை வானியல் கண்டுபிடிப்பு!
9 December, 2017, Sat 6:56 GMT+1  |  views: 1065
வானியல் நிபுணர்கள் தொலைதூரத்தில் உள்ள மிக அதிக எடை கொண்ட கருந்துளை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
 
இக்  கருந்துளை வியத்தகு 13 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. ஆனால் சூரியனின் எடையை விட 800 மில்லியன் மடங்கு எடை கொண்ட இக் கருந்துளை பிரபஞ்சம் தோன்றியதற்குப் பிறகு இத்தகைய மிகப்பெரிய அளவை குறுகிய நாட்களில் எட்டியுள்ளது விஞ்ஞானிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இக் கருந்துளை ஒரு நட்சத்திர மண்டலத்தின் மையத்தில் இருந்துகொண்டு தன்னை அண்மிக்கும் பொருள்களை கவர்ந்து கொள்வதால் இக் கருந்துளை குவாசர் என்று அழைக்கப்படுகிறது.
 
'' குவாசர் மிகவும் பிரகாசமான மற்றும் அதிக தொலைவில் உள்ள விண்பொருள்களில் ஒன்றாகும். அவை பிரபஞ்சத்தின் தொடக்கத்தைப் புரிந்துகொள்ள மிகவும் முக்கியமான ஒன்றாகும்'' என்று ஜெர்மனியில் உள்ள மாக்ஸ் பிளாங்க் வானியல் நிறுவனத்தைச் சேர்ந்த  ஆசிரியர் ப்ராம் வெனிமன்ஸ் கூறியுள்ளார்.
 
குவாசரின் தொலைவானது "ரெட்ஷிப்ட்" என்னும் ஒரு அளவுகோல் மூலம் அளவிடப்படுகிறது. பேரண்டம் விரிவடைவதன் காரணமாக குவாசரின் ஒளியின் அலை நீளம் புவியை அடைவதற்கு முன்பு எந்த அளவு இழுபட்டுள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த ரெட் ஷிப்ட் மதிப்பிடப்படுகிறது. புதிதாக கண்டுபிடித்த கருந்துளை 7.54 ரெட்ஷிப்ட் அளவைக் கொண்டுள்ளது.
 
எந்த அளவிற்கு ரெட்ஷிப்ட் அதிகமாக இருக்கின்றதோ அந்த அளவிற்கு அதன் தொலைவும் அதிகமாக இருக்கும்.
 
இந்த கண்டுபிடிப்பிற்கு முன்பு அதிக தொலைவுள்ள குவாசராக அறியப்பட்டது பிரபஞ்சம் தோன்றி 800 மில்லியன் ஆண்டுகள் ஆன பொழுது தோன்றியது.
 
விரிவான ஆராய்ச்சிகள் செய்யப்பட்ட போதும் இவ்வளவு தூரத்தில் உள்ள ஒரு பொருளை காண்பதற்கு ஐந்தாண்டு காலம் ஆகியிருக்கிறது. என்றும் இந்த பிரமாண்ட கருந்துளை உருவாவதற்கான செயல்முறை ஒன்று பேரண்டத்தின் ஆரம்பகாலத்தில் இருந்திருக்கிறது என்று கூறுகிறார்  ஆசிரியர் எடுராடோ பனாதோஸ்.
 
எதிர்பாராத இந்த கண்டுபிடிப்பு உலகெங்கிலும் உள்ள பல்வேறு ஆய்வுமையங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பிற்கு உதவிய பலவற்றில் ஹவாயின் ஜெமினி வடக்கு தொலைநோக்கி மையமும், நாசாவின் வைட் ஃபீல்டு அகச்சிவப்பு ஆய்வுத் தொலைநோக்கியும் முக்கியமானவை ஆகும்.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலே ஆயிரம் ஏரிகளின் நாடு என்றழைக்கப்படும் நாடு எது?
  பின்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஏலியன்களை சிக்க வைக்க நாசாவின் அதிரடித் திட்டம்!
முன்னைய தலைமுறையினர் இரவு நேரங்களில் வானத்திலுள்ள நட்சத்திரங்களை பார்த்து மகிழ்ந்தனர்.
22 April, 2018, Sun 11:44 | views: 708 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பூமியில் இரண்டாவது காந்தப்புலம் கண்டுபிடிப்பு!
பூமியில் வடக்கு தெற்காக ஏற்கணவே காந்தப் புலம் காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் மற்றுமொரு
15 April, 2018, Sun 13:45 | views: 713 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
செவ்வாய் கிரகத்திற்கு செல்ல தயாராகும் ரோபோ தேனீக்கள்!
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம், செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு ரோபோ தேனீக்களை அனுப்ப
11 April, 2018, Wed 14:03 | views: 500 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஏலியன்கள் வாழும் இடம் குறித்து தகவல் வெளியிட்ட நாசா!
வேற்றுகிரக வாசிகள் உண்மையில் இருக்கிறார்களா? இல்லையா? அப்படி இருந்தால் எங்கு வாழ்வார்கள்? என பல
8 April, 2018, Sun 14:58 | views: 1599 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விண்வெளியில் நிர்மாணிக்கப்படும் ஒரு சொகுசு ஹோட்டல்!
அமெரிக்க நிறுவனம் ஒன்று விண்வெளியில் சொகுசு ஓட்டல் ஒன்றை அமைக்க உள்ள நிலையில் அந்த ஓட்டலில்
6 April, 2018, Fri 14:38 | views: 536 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS