Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
070318
வீடு வாடகைக்கு
040318
ஆங்கில ஆசிரியர்
200218
அழகுக் கலைநிபுனர் தேவை
190218
Baill விற்பனைக்கு
160218
ஆசிரியர் தேவை
160218
Bail விற்பனைக்கு
030218
Bail விற்பனைக்கு
010218
கடை Bail விற்பனைக்கு
130118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
இன்னிங்ஸ் மற்றும் 239 ஓட்டங்களால் இலங்கை அணி படுதோல்வி!
27 November, 2017, Mon 10:12 GMT+1  |  views: 1572
இந்திய அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 239 ஓட்டங்களால் இலங்கை அணி படுதோல்வியடைந்துள்ளது.
 
இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது.
 
இத் தொடரின் முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன்கார்டன் மைதானத்தில் இடம்பெற்றது.
 
இப்போட்டி மழையின் குறுக்கீடுகளுக்குமத்தியில் இடம்பெற்ற போதிலும் போட்டி இறுதியில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.
 
இந்நிலையில், இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது போட்டி கடந்த 24 ஆம் திகதி நாக்பூரில் ஆரம்பமாகியது.
 
இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
 
அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ஓட்டங்களைப்பெற்றுக்கொண்டது.
 
பந்து வீச்சில் இந்திய அணி சார்பாக அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், இசாந்த் சர்மா மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
 
இந்நிலையில் தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இந்திய அணி விராட்கோலியில் இரட்டைச்சதம் மற்றும் முரளி விஜய், புஜாரா, ரோஹித் சர்மா ஆகியோரின் சதங்களின் துணையுடன் 6 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 610 என்ற ஸ்திரமான ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றிருந்தபோது இந்திய அணி ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.
 
இலங்கை அணி சார்பாக பெரேரா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
 
405 ஓட்டங்களால் முன்னிலைபெற்ற போது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடை நிறுத்திய இந்திய அணி நேற்றைய 3 ஆம் நாள் ஆட்டத்தின் தேனீர் இடைவேளையின் பின்னர்  இலங்கை அணியை 2 ஆவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடுமாறு அழைத்தது.
 
நேற்றைய 3 ஆம் நாள் ஆட்ட நிறைவின்போது இலங்கை அணி ஒரு விக்கெட்டை இழந்து 21 ஓட்டங்களைப்பெற்றிருந்தது.
 
இன்று 4 ஆம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், மதியநேர இடைவேளையின் பின்னர் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ஓட்டங்களைப்பெற்று இன்னிங்ஸ் மற்றும்  239 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.
 
இப்போட்டியில் இந்திய அணித் தலைவர் விராட்கோலி 213 ஓட்டங்களைப்பெற்றார்.
 
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 300 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார்.
 
இலங்கை அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
 
இரு அணிகளுக்குமிடையிலான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி டில்லியில் இடம்பெறவுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* 1990-ம் ஆண்டு பீஜிங் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல் முதலாக கபடி ஆட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

2004-ம் ஆண்டு முதல் உலக கோப்பைக்கான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சுதந்திரக் கிண்ணத்தொடரில் இருந்து வெளியேறியது இலங்கை!
சுதந்திரக்கிண்ணத் தொடரின் முக்கியமான இன்றைய போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுகளால் தோற்கடித்த
17 March, 2018, Sat 2:44 | views: 487 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புதிய சாதனை படைத்த மெஸ்ஸி!!
உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவரான மெஸ்ஸி, சாம்பியன் லீக் போட்டிகளில் 100 கோல்கள் அடித்து புதிய
16 March, 2018, Fri 13:09 | views: 609 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரு அணிகளுக்கும் வாழ்வா? சாவா? போட்டி இன்று!
இலங்கை - வங்காளதேச அணிகள் மோதும் வாழ்வா? சாவா? டி20 போட்டி இன்று கொழும்பில் உள்ள பிரேமதாசா
16 March, 2018, Fri 7:35 | views: 576 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கோலி - அனுஷ்காவுக்கு இலங்கை வருமாறு அமைச்சர் அழைப்பு!
தனது மனைவி அனுஷ்காவுடன் விராத் கோலி இலங்கைக்கு வர வேண்டும் என்று அந்நாட்டின் விளையாட்டுத் துறை
15 March, 2018, Thu 11:49 | views: 824 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
முத்தரப்பு டி20 தொடரில் வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய
15 March, 2018, Thu 1:36 | views: 562 |  செய்தியை வாசிக்க
isai-vizha-paris
new-veeras-le-blanc-mesnil-france

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
F2 A LOUER
800 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS