Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கடை Bail விற்பனைக்கு
130118
தேவை - அழகு நிபுணர்
130118
வேலையாள்த் தேவை
110118
தேவை பாரஊர்தி ஓட்டுனர் (Permit-C)
060118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.750 கோடி நிலுவை தொகை பொங்கலுக்குள் வழங்கப்படும்
11 January, 2018, Thu 4:10 GMT+1  |  views: 325

அரசு போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் சம்பள உயர்வு மற்றும் ஓய்வூதிய நிலுவை தொகைகளை வழங்கக்கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு விட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று சட்டசபையில் நேற்று முன்தினம் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.

இந்தநிலையில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.750 கோடி நிலுவை தொகை வழங்குவது தொடர்பாக முக்கிய அறிவிப்பை சட்டசபையில் முதல்–அமைச்சர் நேற்று வெளியிட்டார்.

சட்டசபையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110–விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
அ.தி.மு.க. அரசு போக்குவரத்துக்கழகங்களின் நிதிப்பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, போக்குவரத்துக்கழகங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, 2011–ம் ஆண்டு முதல் 2017–ம் ஆண்டு வரை, அதிகப்படியான நிதி வழங்கி வந்துள்ளது. கடந்த காலங்களில், அதிகரித்து வந்த செலவினத்தை ஈடு செய்வதற்கு ஏற்ப, நிரந்தர நிதி ஆதாரத்தை ஏற்படுத்தாததால், போக்குவரத்துக்கழகங்கள் பெரும் நஷ்டத்தில் இயங்கின. இச்சூழ்நிலையில், போக்குவரத்துக்கழகங்களின் நிதி நிலைமையை சரி செய்யும் பொருட்டு, நிதி ஆதாரத்தை ஏற்படுத்துவதற்கான உத்திகளை கடைபிடித்ததோடு, அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 2011 முதல் இந்நாள் வரை, டீசல் விலை ஏற்றத்திற்கான தொகை 2,848.36 கோடி ரூபாயை அரசு மானியமாக வழங்கியுள்ளது. மேலும் இந்த அரசு பொது மக்களின் நலன் கருதி, போக்குவரத்து கட்டணத்தை குறைந்த அளவிலேயே பராமரித்து வருகிறது.

கடந்த 2011–ம் ஆண்டு முதல் 2017–ம் ஆண்டு வரை, அரசு போக்குவரத்துக்கழகங்களின் நிதிப் பற்றாக்குறையை ஈடு செய்திட, 5,138.57 கோடி ரூபாய் அளவிற்கு நிதி வழங்கியுள்ளது. 2017–2018–ம் ஆண்டில் மட்டும், ஓய்வு பெற்ற போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு நிலுவை தொகை வழங்க 1,397.39 கோடி ரூபாயும், தற்போது பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உள்ளிட்ட நிலுவை தொகைக்காக, 291.99 கோடி ரூபாயும் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.
போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்ட இந்த அரசு, போக்குவரத்துக்கழகங்களில் 30.11.2017 வரை பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகைக்காக 750 கோடி ரூபாயினை இந்த அரசு வழங்கும் என்பதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். மேலும், இந்த அறிவிப்பின் மூலம் வழங்கப்படும் 750 கோடி ரூபாய் தொகையானது, போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அளிக்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்போது, அரசால் வழங்கப்படும் இத்தொகையுடன் சேர்த்து, போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வு கால பலன்களுக்காக மட்டும், இதுவரை தமிழ்நாடு அரசு 2,147.39 கோடி ரூபாய் வழங்கியுள்ளது என்பதையும் இம்மாமன்றத்திற்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆகவே, போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் கோரிக்கைகள் பலவற்றை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள், பொதுமக்களின் நலன் கருதி, தங்கள் போராட்டத்தை உடனடியாக கைவிட்டு, பணிக்குத் திரும்புமாறு இந்த அவையின் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

எலெக்ட்ரோ டைனமோமீட்டர் (Electro Dynameter)

மின்சாரம், வோல்டேஜ், திறன் எல்லாவற்றையும் மொத்தமாக அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் தமிழக ராணுவவீரர் குண்டு பாய்ந்து பலி
எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் குண்டு பாய்ந்து பலி ஆனார்.
19 January, 2018, Fri 4:03 | views: 264 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தமிழகத்தில் முதலீடு செய்ய வாருங்கள் எடப்பாடி பழனிசாமி அழைப்பு
தமிழகத்தில் முதலீடு செய்ய வாருங்கள், என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
19 January, 2018, Fri 3:54 | views: 175 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மன்மோகன்சிங் மீது ஆ.ராசா வேதனை
மன்மோன்சிங் மீது ஆ.ராசா வேதனையை வெளிப்படுத்தி உள்ளார். “என் நியாயமான நடவடிக்கைகளை காப்பதில் மவுனம் காத்தார்” என்று குறிப்பிட்டு
19 January, 2018, Fri 3:52 | views: 132 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தாய் மொழியில் புலமை பெற்றால் உயர்ந்த இடத்தை அடையலாம் வெங்கையா நாயுடு பேச்சு
தாய் மொழியில் நல்ல புலமை பெற்றால் உயர்ந்த இடத்தை அடையலாம் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.
19 January, 2018, Fri 3:51 | views: 125 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் வீட்டில் இருந்து அரசியல் பயணம் தொடங்குகிறார் நடிகர் கமல்ஹாசன்
ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் வீட்டில் இருந்து நடிகர் கமல்ஹாசன் வரும் 21ந்தேதி அரசியல் பயணத்தினை தொடங்குகிறார்
18 January, 2018, Thu 3:07 | views: 891 |  செய்தியை வாசிக்க
kerven-medias-france-lebara-play
amma-alimantation

Amthyste International
  Annonce
AUDI A4 2.0 TDI 120 BERLIN NOIR 93700 Km
11200 Euro €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
175000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS