Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கடை Bail விற்பனைக்கு
130118
தேவை - அழகு நிபுணர்
130118
வேலையாள்த் தேவை
110118
தேவை பாரஊர்தி ஓட்டுனர் (Permit-C)
060118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்
10 January, 2018, Wed 3:07 GMT+1  |  views: 285

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

மு.க.ஸ்டாலின்:- போக்கு வரத்துத் தொழிலாளர்கள் 04-01-2018 இல் இருந்து தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். தொழிலாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்து, அரசு செலவிட்ட 7000 கோடி ரூபாயை உடனடியாக திருப்பித் தர வேண்டும். இந்த கோரிக்கைகளை முன்வைத்து தான் தொழிலாளர்கள் தொடர்ந்து அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். எனவே, இந்த அரசை நான் கேட்டுக்கொள்ள விரும்புவது, அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் ஒரு சுமுகமான தீர்வு எட்டப்படாத காரணத்தால், முதல்- அமைச்சரே நேரடியாக இதில் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி, இதற்கு சுமூகமான நிலையை ஏற்படுத்தி தர வேண்டுமென நான் மட்டுமல்ல, எல்லாக் கட்சிகளின் தலைவர்களும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

அமைச்சர் விஜயபாஸ்கர்:- போக்குவரத்து தொழிலாளர்களுடன் இந்த அரசு 23 முறை பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. ஊதிய பிடித்தம் 7 ஆயிரம் கோடி என்று சொல்கிறார்கள். 5 ஆயிரம் கோடி தான். தொழிலாளர்களுக்கு அதிகப்படியான ஊதிய உயர்வை இந்த அரசு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. போக்குவரத்துறை நஷ்டத்தில் இயங்கி வருகிறது. ஒரு நாளைக்கு ரூ.9 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு வருகிறது என்றாலும், போக்குவரத்துத்துறை சேவை துறையாக செயல்படுத்தி வருகிறோம். எனவே ஊதிய ஒப்பந்தத்தை ஏற்று தொழிற்சங்கங்கள் பணிக்கு திரும்ப எதிர்க்கட்சி தலைவரும், மற்ற உறுப்பினர்களும் வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

மு.க.ஸ்டாலின்:-போக்குவரத்துத்துறை அமைச்சர் ஒரு நல்ல கருத்தை எடுத்துச் சொல்லியிருக்கிறார். நான் தயார். அவர்களை அழைத்து சுமுகமான முறையில் இதற்கு ஒரு தீர்வு கண்டிட எதிர்க்கட்சித்தலைவர் என்கிற முறையில் ஒத்துழைப்பு தர நான் தயாராக இருக்கிறேன். காரணம், இது பொதுமக்களின் பிரச்சினை. நான் வைத்த கோரிக்கை, முதல்-அமைச்சர் அழைத்துப் பேசினால் இது சுலபமாக முடிந்து விடும். முதல்-அமைச்சர் அழைத்துப் பேசுவதற்கு உறுதி தந்தால், நானும் அவர்களிடத்தில் பேசி சுமுகமான வகையில் முடிவெடுத்திட எல்லா வகையிலும் துணை நிற்கிறேன்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:-ஒவ்வொரு முறையும் போக்குவரத்துத்துறை அமைச்சர் தொழிலாளர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது என்னிடம் ஆலோசனை பெற்று தான் முடிவுகளை அறிவிக்கிறார்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்:-போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கும் போதே பேச்சு வார்த்தை தோல்வி என்று தி.மு.க., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் வாட்ஸ் அப்பில் பீதியை கிளப்பினார்கள். அவர்கள் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை தூண்டி விட்டனர்.

(இதற்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.)

மு.க.ஸ்டாலின்:-வாட்ஸ்அப்பில் வந்திருக்கும் செய்திகள் எல்லாம் இங்கு பதிவு செய்யப்பட்டால், வாட்ஸ் அப்பில் தொடர்ந்து வரக் கூடிய செய்திகளை இங்கு பேசும்போது நாங்களும் பதிவு செய்வதற்கு, நீங்கள் அனுமதி தர வேண்டும். இல்லையென்றால், அதையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். அந்தப் பதிவு அவைக்குறிப்பில் இருக்க வேண்டுமென்று நீங்கள் முடிவு செய்தால், தொழிற்சங்கங்களை, தொழிலாளர்களை அவமானப் படுத்தக் கூடிய வகையில், துணை முதல்-அமைச்சர் இங்கு தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார் என்று நான் பதிவு செய்வேன்.

(இந்த நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் துரைமுருகன் எழுந்து தன்னை பேச அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டார். அவருக்கு சபாநாயகர் வாய்ப்பு வழங்கினார்.)

துரைமுருகன்:-இவ்வளவு நேரம் இங்கு விவாதமே தேவையில்லை. எதிர்க்கட்சி தலைவர் என்ன கேட்டார், முதல்-அமைச்சர் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பது தான். கேட்ட கேள்விக்கு பதில் இல்லை. பிரச்சினையை தீர்க்க முதல்-அமைச்சருக்கு ஆர்வம் இல்லையா?.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:-வேலை நிறுத்தம் என்றால் முறைப்படி அறிவிப்பு கொடுக்க வேண்டும். ஆனால் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே திடீரென்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது யார்?. இதனால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படவில்லையா?.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:-ஏற்கனவே நான் தெளிவாக சொல்லி இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் துறை அமைச்சர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்து பேசிய போது, என்னுடன் பேசிவிட்டு சென்று தான், எங்களுடைய கருத்தின் அடிப்படையிலே தான் அங்கே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதாவது, என்னிடம் (முதல்-அமைச்சர்) சொல்லித்தான் அவர் அந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு 2.44 மடங்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை தந்தார். ஆகவே, முதல்-அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று சொல்வது தவறானது. முதல்-அமைச்சர் என்ற முறையில் ஊழியர்களை மதிக்கக்கூடியவன், உழைப்பவர்களை மதிக்கக்கூடியவன்.

தற்போது இருக்கின்ற நிலைமை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். உங்களுடைய ஆட்சியிலேயே ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய 922 கோடி ரூபாய் பாக்கி வைத்திருக்கிறீர்கள். ஆகவே, அதனுடைய நிதி நிலைமை உங்களுக்கு நன்றாக தெரியும். ஆகவே, இதையெல்லாம் உணர்ந்து தான் தற்போது இருக்கின்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு, நான் தற்போது 2.44 மடங்கு ஊதிய உயர்வை வழங்க வேண்டும் என்று முடிவு எடுத்து அதை அறிவிக்கப்பட்டுள்ளது. அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் என்னுடைய நிலைபாடு. ஆகவே, எதிர்க் கட்சி தலைவரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும் உதவிகரமாக இருக்க வேண்டும்.

வேலை நிறுத்தத்திலே ஈடுபட்டவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். ஏனென்றால் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியே தெரிவித்திருக்கிறார். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இரண்டு முறை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் வேலைக்கு திரும்ப வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளார்கள். அதை எல்லாம் மதித்து, இருக்கின்ற நிலைமை உணர்ந்து பொதுமக்களுக்கு சேவை செய்யக் கூடிய நிறுவனமாக போக்குவரத்து கழகம் இருக்கின்ற காரணத்தினாலே, எதிர்க்கட்சித்தலைவர் குறிப்பிட்டதைப்போல மாணவர்கள், பொதுமக்கள், வேலைக்கு செல்பவர்கள் எல்லாம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை எல்லாம் உணர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு எடுத்துச் சொல்லி, பிரதிநிதிகளும், அதோடு போக்குவரத்து ஊழியர்களும் பணிக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது?
   எவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் தமிழக ராணுவவீரர் குண்டு பாய்ந்து பலி
எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் குண்டு பாய்ந்து பலி ஆனார்.
19 January, 2018, Fri 4:03 | views: 269 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தமிழகத்தில் முதலீடு செய்ய வாருங்கள் எடப்பாடி பழனிசாமி அழைப்பு
தமிழகத்தில் முதலீடு செய்ய வாருங்கள், என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
19 January, 2018, Fri 3:54 | views: 176 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மன்மோகன்சிங் மீது ஆ.ராசா வேதனை
மன்மோன்சிங் மீது ஆ.ராசா வேதனையை வெளிப்படுத்தி உள்ளார். “என் நியாயமான நடவடிக்கைகளை காப்பதில் மவுனம் காத்தார்” என்று குறிப்பிட்டு
19 January, 2018, Fri 3:52 | views: 133 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தாய் மொழியில் புலமை பெற்றால் உயர்ந்த இடத்தை அடையலாம் வெங்கையா நாயுடு பேச்சு
தாய் மொழியில் நல்ல புலமை பெற்றால் உயர்ந்த இடத்தை அடையலாம் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.
19 January, 2018, Fri 3:51 | views: 126 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் வீட்டில் இருந்து அரசியல் பயணம் தொடங்குகிறார் நடிகர் கமல்ஹாசன்
ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் வீட்டில் இருந்து நடிகர் கமல்ஹாசன் வரும் 21ந்தேதி அரசியல் பயணத்தினை தொடங்குகிறார்
18 January, 2018, Thu 3:07 | views: 892 |  செய்தியை வாசிக்க
kerven-medias-france-lebara-play
amma-alimantation

Amthyste International
  Annonce
AUDI A4 2.0 TDI 120 BERLIN NOIR 93700 Km
11200 Euro €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
175000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS