Montere Fault Yonne(77130)யில் அடுக்கு மாடித் தொடரில் 1ம் மாடியில் 85m² அளவு கொண்ட F4 வீடு வாடகைக்கு உண்டு. மாத வாடகை 750€
Gare de Lyonல் இருந்து 45 நிமிடம் NAVIGO 5 ZONE
தென் ஆப்பரிக்கா - இந்தியா அணிகள் இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பரிக்க அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. கேட் டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பரிக்க அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென் ஆப்பரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 286 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 209 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. இதனால் இந்திய அணி 77 ரன்கள் பின்னடைவில் இருந்தது.
இதையடுத்து இரண்டாவது தொடங்கிய தென் ஆப்பரிக்க அணி 130 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மூன்றாவது நாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்டதை அடுத்து. இன்று நாளவது நாளில் தென் ஆப்பரிக்க அணி விரைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியும் வரிசையாக விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 135 ரன்கள் குவிந்திருந்த நிலையில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் தென் ஆப்பரிக்க அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.