Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில ஆசிரியர்
200218
அழகுக் கலைநிபுனர் தேவை
190218
Baill விற்பனைக்கு
160218
ஆசிரியர் தேவை
160218
Bail விற்பனைக்கு
030218
Bail விற்பனைக்கு
010218
கடை Bail விற்பனைக்கு
130118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
பாகிஸ்தானை வெள்ளையடிப்புச் செய்த இலங்கை!
10 October, 2017, Tue 14:39 GMT+1  |  views: 1879
பாகிஸ்தானுக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் 68 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரை 2-0 என வெள்ளையடிப்புச் செய்த இலங்கை அணி ஐக்கிய அரபு இராச்சியத்தில்  சாதனையையும் படைத்துள்ளது.
 
பிங் நிறப்பதில் விளையாடிய முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி  வெற்றிபெற்று தனது டெஸ்ட் அந்தஸ்தை நிருபித்தது.
 
இதுவேளை, டுபாயில் வைத்து பாகிஸ்தானை வெள்ளையடிப்புச் செய்து வெற்றிபெற்று இலங்கை அணி சாதனை படைத்துள்ளது.
 
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அபுதாபியில் இடம்பெற்றது.
 
இந்நிலையில் அபுதாபியில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 21 ஓட்டங்களால் வெற்றிபெற்று 1-0 என இலங்கை அணி முன்னிலை பெற்றிருந்தது.
 
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 68 ஓட்டங்களால் வெற்றி பெற்று 2-0 என பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை வெள்ளையடிப்புச் செய்து சாதனை படைத்தது.
 
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில்  5 ஆவதும் இறுதியுமான இன்றைய நாளில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற 5 விக்கெட்டுகள் மீதமிருக்க 119 ஓட்டங்கள் பெறவேண்டிய தேவை இருந்தது.
 
இலங்கை அணி, துல்லியமான பந்துவீச்சின் உதவியுடன் பாகிஸ்தான் அணிகளின் விக்கெட்டுகளை சாய்த்து 68 ஓட்டஙகளால் வெற்றிபெற்றது.
 
இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த்து.
 
அந்தவகையில் தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 482 ஓட்டங்களைப்பெற்றது.
 
இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய திமுத்து கருணாரத்ன 196 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
 
பந்த வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக யஷீர் ஷா 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
 
இந்நிலையில் தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 262 ஓட்டங்களைப் பெற்று 218 ஓட்டங்களால் பின்னிலை பெற்றது.
 
பாகிஸ்தான் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் அசார் அலி 59 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
 
இலங்கை அணி சார்பாக பந்துவீச்சில் டில்ருவான் பெரேரா மற்றும் ஹேரத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
 
இதையடுத்து 218 ஓட்டங்களால் முன்னிலைபெற்ற இலங்கை அணி தனது 2 ஆவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடியது.
 
பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சுக்களை தாக்குப்பிடிக்கத் தடுமாறிய இலங்கை அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிய, இறுதியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
 
பந்துவீச்சில் பாகிஸ்தான் அணிசார்பாக வகாப் ரியாஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
 
இதையடுத்து 317 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி தனது 2 ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி இன்றைய 5 ஆம் நாளில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 248 ஓட்டங்களைப்பெற்று 68 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
 
பாகிஸ்தான் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் அசாத் சௌபீக் 112 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
 
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக டில்ருவான் பெரேரா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
 
பாகிஸ்தானுக்கெதிரான தொடரை 2-0 எனக் கைப்பற்றிய இலங்கை அணி டுபாயில் வைத்து பாகிஸ்தானை வெற்றிகொண்டு சாதனையை நிலைநாட்டியது.
 
இப் போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடரின் ஆட்டநாயகனாகவும் இலங்கை அணியின் திமுத்து கருணாரத்ன தெரிவு செய்யப்பட்டார்.
 
இந்த வெற்றியின் மூலம் சந்திமல் தலைமையிலான இலங்கை டெஸ்ட் அணி சொற்ப காலத்தில் மீள் எழுச்சிபெற்று இலங்கை அணி ரசிகர்களின் நம்பிக்கைக்கும் விசுவாசத்திற்கும் வலுச்சேர்த்துள்ளது.
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* மண்புழுக்களில் ஆண், பெண் என்ற தனித்தன்மை கிடையாது.
* கண் இல்லாத உயிரினம் மண்புழு.
* தோலினால் சுவாசிக்கும் உயிரினம் மண்புழு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தூக்கில் தொங்கிய கிரிக்கெட் வீரர்!
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரின் மகன், யு-19 அணி தேர்வில் நிராகரிக்கப்பட்டதால் தற்கொலை
22 February, 2018, Thu 8:45 | views: 360 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் டி-20 தொடர் போட்டியில் முதல்
22 February, 2018, Thu 4:47 | views: 449 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
லாராவை பின்தள்ளி முன்னிலை பெற்ற விராட் கோஹ்லி!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக அதிக புள்ளிகளை பெற்ற வீரர்களின் பட்டியலில், மேற்கிந்திய
21 February, 2018, Wed 7:25 | views: 609 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சச்சினின் சாதனையை விராட் கோஹ்லி முறியடிப்பார்!
இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கட் ஜாம்பவானுமாகிய சச்சின் டென்டுல்கரின் 100 சதங்கள் என்ற
20 February, 2018, Tue 9:04 | views: 848 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
டி20 போட்டியே வேண்டாம்!
கிரிக்கெட்டில் இருந்து டி20 போட்டியை நீக்க வேண்டும் என்று இங்கிலாந்து பயிற்சியாளர் திரோவர் பேலிஸ் கூறியுள்ளது
20 February, 2018, Tue 8:40 | views: 612 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
F3 A LOUER
1100 €
Paristamil Annonce
TOYOTA VERSO
3900 EURO €
Paristamil Annonce
APPARTEMENT 4 PIÈCES A VENDRE
199 000 €
Paristamil Annonce
STUDIO A LOUER
800 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Actif assurance
Advertisements  |  RSS