Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
கடை Bail விற்பனைக்கு
090618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
இடம் தேவை
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா!
8 October, 2017, Sun 11:26 GMT+1  |  views: 1671
ராஞ்சியில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் டி.எல். விதிப்படி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
 
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் ராஞ்சியில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ரகானே, அக்சார் பட்டேல் நீக்கப்பட்டு தவான் மற்றும் சாஹல் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
 
வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வார்னர் 8 ரன்களில் புவனேஸ்வர் பந்தில்  ஸ்டம்பை பறிக்கொடுத்தார்.
 
அடுத்து பிஞ்ச் உடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். 7-வது ஓவரின் மூன்றாவது பந்தில் மேக்ஸ்வெல் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் விளையாடிய ஆரோன் பிஞ்ச் குல்தீப் யாதவின் 10-வது ஓவரின் 5-வது பந்தில் ஸ்டம்பை பறிக்கொடுத்தார். பிஞ்ச் 30 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 42 ரன்கள் சேர்த்தார்.
 
பிஞ்ச் ஆட்டமிழந்த பின்னர் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் அப்படியே மந்தமானது. ஹென்ரிக்ஸ் 8 ரன்களிலும், ட்ராவிஸ் ஹெட் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பும்ரா வீசிய 18-வது ஓவரின் முதல் பந்தில் பெய்ன் ஸ்டம்பை பறிகொடுத்தார். 4-வது பந்தில் கவுல்டர்-நைல் போல்டானார்.
 
19-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். முதல் பந்தில் கிறிஸ்டியன் ரன்அவுட் ஆனார். இந்தியா 18.4 ஓவர்கள் வீசியிருந்த நிலையில் மழை பெய்தது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்திருந்தது.
 
தொடர்ந்து மழை பெய்ததால் இத்துடன் ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸ் முடித்துக் கொள்ளபட்டு டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியாவின் வெற்றிக்கு 6 ஓவர்களில் 48 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், ரோஹித் சர்மாவும் களமிறங்கினர்.
 
ரோஹித் சர்மா 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கவுல்டர்-நைல் வேகத்தில் போல்டானார். அடுத்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி 5.3 ஓவர்களில் 49 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தது. தவான் 12 பந்துகளில் 15 ரன்களுடனும், கோலி 14 பந்துகளில் 22 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
 
சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்திய குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 2-வது டி-20 போட்டி வருகிற 10-ம் தேதி கவுஹாத்தியில் நடைபெற உள்ளது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள்?

  எகிப்தியர்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஜெர்மனியை வீழ்த்திய மெக்சிகோ!
உலகக்கோப்பை கால்பந்தில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் ‘எஃப்’ பிரிவில் நடப்பு சாம்பியனான
18 June, 2018, Mon 4:54 | views: 181 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கோஸ்டா ரிகாவை 1-0 என வீழ்த்திய செர்பியா!
உலகக்கோப்பை கால்பந்தில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ‘ஈ’ பிரிவில் கோஸ்டா ரிகாவை 1-0 என வீழ்த்தியது
18 June, 2018, Mon 4:38 | views: 143 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரேசில் - சுவிட்சர்லாந்து இடையிலான போட்டி சமநிலையில் முடிந்தது!
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற பிரேசில், சுவிட்சர்லாந்து இடையிலான லீக் ஆட்டம் 1-1 என
18 June, 2018, Mon 4:10 | views: 152 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஐஸ்லாந்துடன் தோல்வியடைந்த ஆர்ஜன்டீனா!
உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிச் சுற்றில் கன்னிப் பிரவேசம் செய்துள்ள சிறிய நாடான ஐஸ்லாந்து, குழு
17 June, 2018, Sun 6:20 | views: 1200 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெரு அணியை வீழ்த்திய டென்மார்க்!
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ‘சி’ பிரிவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டென்மார்க் அணி 1-0 என்ற கோல்
17 June, 2018, Sun 5:37 | views: 493 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS