Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
வாடகைக்கு வீடு
191117
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
யாழ் மக்களுக்கு எச்சரிக்கை! தயார் நிலையில் அதிகாரிகள்
13 November, 2017, Mon 4:34 GMT+1  |  views: 1421
இலங்கையின் வடக்குப் பகுதியில் மிகக் கடுமையான மழையும் கடும் காற்றும் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
 
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள வளிமண்டலக் குழப்பத்தினால்,  இந்த நிலை ஏற்படும் என நம்பப்படுகின்றது.
 
வடக்கு, வடமேல், மேல், தென் மாகாணங்களின் கரையோரப்பகுதிகளில் கடும் காற்று வீசும். வடக்கு மாகாணத்திலும், திருகோணமலை மாவட்டத்திலும் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.
 
அதேவேளை,  கடந்த சில நாட்களில் 500 மி.மீ மழை வீ்ழ்ச்சி பதிவாகிய யாழ்ப்பாண மாவட்டத்தில் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் சாத்தியங்கள் உள்ளது.
 
இதனால் அனைத்து அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், காவல்துறையினர், படையினர் முழுமையான தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
 
யாழ்ப்பாண கடல்நீரேரியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. மழை தொடர்ந்து பெய்யுமானால், அடுத்த சில நாட்களில் வெள்ளம் அனர்த்தம் ஏற்படும் சாத்தியம் உள்ளது.
 
சடுதியான வானிலை மாற்றங்கள் ஏதும் நிகழலாம் என்பதால், அனர்த்த முகாமைத்துவ நிலையம் வவுனியாவில் சிறப்பு அலகு ஒன்றை உருவாக்கி, தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
 
இதற்கிடையே, கடந்த சில நாட்களில் பெய்த மழையினால் யாழ். மாவட்டத்தில் 9 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
பொம்மைவெளி உள்ளிட்ட பகுதிகளில் வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
 
நாவற்குழி – யாழ்ப்பாணம் வீதி, அச்சுவேலி- தொண்டைமானாறு வீதி, அராலி – யாழ்ப்பாணம் வீதி என்பனவற்றை மேவி வெள்ளம் பாய்கிறது.
 
தொண்டைமானாறு கடல்நீரேரியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதையடுத்து, உவர்நீரேரி தடுப்பணையின் கதவுகள் திறந்து விடப்பட்டு, நீர் கடலுக்குள் வெளியேற்றப்பட்டு வருகிறது.
 
அதுபோல, வழுக்கையாற்று பகுதியில் நீர்மட்டம் அதிகரித்துள்ளாதால் அராலி தடுப்பணையின் கதவுகளும், நாவற்குழி பகுதியில் உள்ள தடுப்பணையின் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன.
 
 
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும்

  அது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நான்கு பிள்ளைகளின் தந்தைக்கு நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி தீர்ப்பு.!
நான்கு பிள்ளைகளின் தந்தைக்கு 15 ஆண்டுகால கடூழிய சிறைத் தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி
20 November, 2017, Mon 13:37 | views: 665 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெளிநாடு சென்ற இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!
வெளிநாட்டுக்குப் பணிப் பெண்ணாக சென்று, பாரிய காயங்களுடன் பெண் ஒருவர் இலங்கை
20 November, 2017, Mon 11:47 | views: 490 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தென்னை மரத்திலிருந்து திருடனை இறக்க வானவெடிகளை கொளுத்திய பொலிஸார்!
திருட்டுத்தனமாக மரத்தில் ஏறி தேங்காய் பறித்த நபரை பொலிஸார் வானவெடி கொளுத்தி கீழே இறக்கி கைது
20 November, 2017, Mon 6:33 | views: 727 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கையில் காலநிலை மாற்றம்! பொது மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் இன்று முதல் எதிர்வரும் சில தினங்களுக்கு பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை காலநிலை
20 November, 2017, Mon 5:47 | views: 895 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வவுனியாவில் பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல்? கடைகள் எரிந்து நாசம்
வவுனியா நகர பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் எற்பட்ட தீ விபத்தில் இரு கடைகள் எரிந்து
20 November, 2017, Mon 4:44 | views: 529 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS