Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
நேரில் ஆஜராகுமாறு அமலாபாலுக்கு உத்தரவு!
8 November, 2017, Wed 12:18 GMT+1  |  views: 626

புதுச்சேரியில் போலியான முகவரி கொடுத்து சொகுசு கார் வாங்கிய விவகாரத்தில் அமலாபால் 10-ந்தேதிக்குள் நேரில் ஆஜராக உத்தரவு கேரள போக்குவரத்து அதிகாரிகள் நோட்டீசு வழங்கியுள்ளார்கள்.

 
பிரபல நடிகை அமலாபால் கடந்த ஆகஸ்டு மாதம் ரூ.1 கோடி மதிப்பில் பென்ஸ் எஸ் கிளாஸ் ரக சொகுசு கார் வாங்கினார். இந்த காரை அவர் தமிழகத்திலோ அல்லது கேரளாவிலோ பதிவு செய்ய வேண்டும் என்றால் அதற்கு பதிவு கட்டணமாக ரூ.20 லட்சம் வரை செலவாகும். ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றால் ரூ. 1½ லட்சத்தில் பதிவு செய்து விடலாம்.
 
இதற்கு புதுச்சேரியில் தங்கியிருப்பதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி, அமலாபால் புதுச்சேரியில் நம்பர் 6, செயின்ட் தெரசா தெரு, திலாஸ்பெட், புதுச்சேரி என்ற முகவரியில் தங்கியிருப்பதாக ஆவணம் தாக்கல் செய்து காரை பதிவு செய்தார்.
 
அந்த காரை அவர், கேரளாவில் ஓட்டி வந்தார். பிற மாநிலத்தில் பதிவு செய்த கார்கள், கேரளாவில் தொடர்ந்து ஓட வேண்டும் என்றால் அங்குள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சான்றிதழ் பெற வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வாகன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுப்பார்கள்.
 
அதன்படி, அமலாபாலின் சொகுசு கார் குறித்த விவரங்களை எர்ணாகுளம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அமலாபால் ஆவணத்தில் தெரிவித்திருந்த புதுச்சேரி முகவரி போலி என தெரிய வந்துள்ளது.
 
இது தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் அமலாபாலுக்கு நோட்டீசு அனுப்பி உள்ளனர். அதில், வருகிற 10-ந்தேதிக்குள் சொகுசு கார் குறித்த உண்மை ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையேல் வாகனத்திற்கான கேரள பதிவுக்கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று கூறி உள்ளனர்.
 
அமலாபாலின் புதுச்சேரி முகவரியில் கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த இன்னொருவரின் சொகுசு காரும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி அந்த நபரிடம் நிருபர்கள் தொடர்பு கொண்டு கேட்டனர். அதற்கு அமலாபால் தங்கியிருந்தது தரை தளம். நான், அந்த வீட்டின் முதல் தளத்தில் தங்கியிருந்தேன். எனவே தான் இருவரும் ஒரே முகவரியை கொடுத்ததாக கூறி உள்ளார்.
 
இது குறித்தும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

அம்மீட்டர் (Ammeter)

மின்சாரத்தின்  அளவீட்டை கணக்கிடுவது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கவர்ச்சி படத்தை வெளியிட்ட நகைச்சுவை நடிகை!
வீரம், ஜில்லா, வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க உள்ளிட்ட பல படங்களில் நடித்த வித்யுலேகா, தற்போது
19 November, 2017, Sun 16:58 | views: 1900 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தீபிகா படுகோனேவை உயிருடன் எரித்துக் கொன்றால் ரூ.1 கோடி பரிசு!
பத்மாவதி படத்தில் நடித்த நடிகை தீபிகா படுகோனேவை உயிருடன் எரித்துக் கொல்பவருக்கு ஒரு கோடி ரூபாய்
19 November, 2017, Sun 16:56 | views: 281 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விஜய்க்கு பிறகு தற்போது தனுஷ்
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்து வெளியான ‘மெர்சல்’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அட்லி இயக்கிய இந்த படம
18 November, 2017, Sat 13:44 | views: 1068 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விஜய் நடிக்க மறுத்த படத்தில் விஜய் ஆண்டனி
ரியல் ஹீரோவான சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி பற்றி 'டிராபிக் ராமசாமி' என்ற பெயரிலேயே ஒரு படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் டிரா
18 November, 2017, Sat 13:38 | views: 814 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நயன்தாரா போல அந்த மாதிரி படங்களில் நடிக்கிறேன் - அமலாபால்
அரவிந்சாமியுடன் அமலாபால் நடித்திருக்கும் படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. இதில் நடித்த அனுபவம் பற்றி அமலாபாலிடம் கேட்டபோது... ‘‘இந்த
18 November, 2017, Sat 12:12 | views: 743 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS