கண்களில் சிறைப்பட்டு இதயத்தில் உயிர் பெற்று நினைவுகளில் படர்ந்து பரிதவிக்கும் காதலே வந்த வழியே மீண்டும் செல்வாயோ? முட்களில் உறங்கும் இதயக் கூட்டில் உனக்கேது வேலை இங்கு? நேற்று வரை இல்லாத தவிப்புகளை என்னில் தொடரலையாய் ஏற்படுத்தும் உன்னை அரவணைக்கும் எண்ணமில்லை. சிந்தனையை கலைத்து சிதறடிக்கும் உன் உன்னத உணர்வால் சீர்குலைகின்றது என் வாழ்க்கை.. ஆயுதமின்றி எனை தாக்கும் உன்னை தாக்கும் பிடிக்கும் தைரியம் என்னிடம் இல்லை. நிம்மதி நிலை குலைந்து நிர்கதியாக நிற்கும் என்னை விட்டு ஓடு.. நாளைய பொழுதுகள் எனக்காகவும் விடியலாம் அன்று சந்திக்கலாம். அதுவரை நினைவுகளை மட்டும் எனதாக்கி விட்டு செல் காலமெல்லாம் நானாகவே வாழ்ந்திடுவேன்.
http://pirashathas.blogspot.com/
* உடலில் ரத்தம் பாயாத பகுதி
கருவிழி