Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கரவை மக்கள் ஒன்றியம் - பிரான்சு
200618
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
கடை Bail விற்பனைக்கு
090618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
Spoken English classes
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
சாவின் மடியில் தூங்கிய தமிழச்சியின் குரல்!!
1 September, 2017, Fri 4:31 GMT+1  |  views: 1482
நான் தெளிவானவள்.
என் உடல் வலிமை மிக்கது
என் விழிகள் உறக்கத்தை விரும்பியதில்லை
என் கால்கள் என்றும் நடப்பதை
நிறுத்தியதில்லை
நான் தொலை தூர பயணத்தில்
விடியலின் திசை நோக்கி நடந்து
கொண்டு இருந்தேன்...
 
மலைகள் வெளிகள் ஆறுகள்
ஆயிரம் தடைகள்
கிடங்குகள் விளைநிலங்கள் 
சேற்று சகதிகள்
பல குறுக்கே வந்த போதும்
என் பயணத்தில் தடை இல்லை
நடந்தேன் நடந்து கொண்டே இருந்தேன்
வானம் மடிந்து பூமிக்குள்
அமிழும் அந்த கரை நோக்கி நான்
சென்று கொண்டே இருந்தேன்
இடையே பெருங்கடல் குறுக்கறுத்த போது
தாண்டும் வலிமை
எனக்கு இருக்கவில்லை
நான் கடலின் ஓட்டத்தில்
அடிபடத் தொடங்கினேன்.
மூழ்கி மூழ்கி என் இறுதி மூச்சுக்காக
துடித்து கொண்டிருந்தேன்...
 
எனக்கான ஒரு துரும்புக்காக
அழ தொடங்கிய நாட்களில் 
சிறு மீன் கூட துரும்பாகவில்லை
தத்தளித்து தவழ்ந்து கொண்டிருந்தேன்
எனக்கான நீர் வளையம் ஒன்றை 
எங்கிருந்தோ வர கண்டேன்.
அதை நான் என் துரும்பாக
நானே நிர்மானித்தேன்
என்னை அந்த வளையத்துக்குள்ளே
நான் தொலைத்துவிட்டேன்
மரணம் என்னை துரத்தி கொண்டிருந்தது
மரணத்தின் வாசலாக
வந்து சேர்ந்தது நீர் வளையம்
தினமும் என்னை தின்ன தொடங்கியது
என் உடலை மட்டுமல்ல
உயிரையும் தின்று கொண்டிருந்தது
நான் நிலையற்று கிடந்தேன்
நான் நடந்து வந்த பாத சுவட்டை
மட்டுமே நீர் வளையம் சுற்றி கொண்டிருந்து
தினமும் என் உதடுகளை சப்பி துப்பியது போல
என் நடந்த பாதையையும் சப்ப தொடங்கியது
எனக்கு வலு இருக்கவில்லை
தடை போடும் நிலை இருக்கவில்லை
நீரின் வளையம் என் உடலில் மூட்டிய
தீ சுற்று சுழன்று என்னை தின்று கொண்டிருந்த போதும்
என்னை தினமும் தின்ன தவறவில்லை
என் பாதுகாப்பாய் உணர்ந்த என் நீர்வளையம்
என்னை முழுதாக தின்றுவிட்டது
இன்று என் உடலை அணுவணுவாக தின்ற
கதையை ஊர் முழுக்க சொல்லி
சிரிக்கிறது...
 
நான் என்ன செய்வேன்...?
கடலின் ஆழ் நிலத்தில் என்னை
புதைத்துவிட்டு என்
புதைகுழி மேலே நின்று
என் பாத சுவடுகள் என்று
என் உடலின் வலியை கூறி ஊர் சிரிக்க
மகிழ்கிறது...
 
நான் மௌனித்து கிடக்கிறேன்
நீர் வளையம் மட்டும் மீண்டும் மீண்டும்
என் இறந்த உடலை தின்ன 
சுற்றி சுற்றி வருகிறது....
 
செத்தும் சாகடிக்க காத்திருக்கும்
நீர்வளையத்துக்கு என் மனசு தெரியவில்லை
அது கொண்ட உப்பு நீர் கூட்டத்தின் 
சுழியில் தீண்டப்பட வேண்டிய
தமிழின் தமிழிச்சியே....
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சிஸ்மோலொஜி (Seismology)

பூமி அதிர்வு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இரை தேடும் பறவை....!!
இறைவன் அளித்ததோ இரு இறக்கைகள் பறக்கத் தெரிந்தபின் சிறகடித்து
17 June, 2018, Sun 14:38 | views: 276 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஓவியங்கள்!
பிசிறின்றி நேர்த்தியாய் வரையப்பட்ட ஓவியங்கள்
10 June, 2018, Sun 13:34 | views: 414 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சாதி மறு! சண்டையொழி!
சதையறுக்கும் பச்சைவாசம் ஐயோ சாதிதோறும் வீசவீச, தெருவெல்லாம் சிவப்புநாற்றம்
3 June, 2018, Sun 14:34 | views: 445 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காரம் நிமித்த இரவுகள்...!
அல்சர் புண்ணேறிய பொத்தல் வயிறு குறித்து அக்கறைப்பட்டு காது நீட்டும்
27 May, 2018, Sun 14:10 | views: 711 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தேகம் துறத்தல்...!
பின்னிரவின் உறக்கம் கலைக்கும் மழை இப்போதெல்லாம் புலன்களைக் கிளர்த்துவதில்லை உனது வலுத்த கரங்களுக்குள் சிறைப்படத்
20 May, 2018, Sun 13:56 | views: 550 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS