Paristamil France administrationParistamil France administration
வர்த்தகர் பதிவு விளம்பரம் செய்ய வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
கடை Bail விற்பனைக்கு
090618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
Spoken English classes
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
மரண பூக்கள் பற்றி தெரியுமா??
1 September, 2017, Fri 4:18 GMT+1  |  views: 3949
பூக்கள் மென்மையானவை. ஆனால் எல்லா பூக்களும் அப்படி இல்லை. சில பூக்கள் உயிரைப் பறிக்கும் தன்மையுடையவை. அப்படிப்பட்ட பூக்களில் ஒரு சில இதோ...
 
கால்மியா லாடிஃபோலியா (Kalmia Latifolia):   
 
பிங்க் மற்றும் வெள்ளை நிறத்தை சேர்த்த வண்ணம். அமெரிக்காவின் பென்சில்வேனியா, கனக்டிகட் உட்பட உலகின் பல்வேறு இடங்களிலும் இந்தப் பூக்கள் இருக்கின்றன.
 
இந்த பூவில் கொடிய விஷத்தன்மை உண்டு. தெரியாமல் இதை கொஞ்சம் அழுத்தமாய் முகர்ந்தாலோ, பறித்து வாயில் போட்டாலோ வாந்தியில் தொடங்கி, ஹார்ட் அட்டாக், கோமா என மரணத்தில் கொண்டு விடும். 
 
இந்த பூவில் தேன் குடிக்கும் தேனீ சேமித்து வைக்கும் தேனைச் சாப்பிட்டாலும் மரணம் நேரும். 
 
ஓனாதே க்ரோகாடா (Oenanthe Crocata):  
 
வெள்ளை நிறத்தில் இங்கிலாந்து, சுவீடன், பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற இடங்களில் இந்த பூக்கள் அதிகமாய் வளரும். பெரும்பாலும் ஈரமான பிரதேசங்களில் காணப்படும். 
 
இந்த பூவைத் தெரியாமல் சாப்பிட்டால், மூளை மயங்கி போதை ஏறும். 70 சதவீதம் மரணம் நிச்சயம்.
 
மயக்கமடைவது, பித்துப்பிடித்தது போல அலைவது, உளறிக்கொட்டுவது, பின்நோக்கி விழுவது, சட்டென உடலில் எங்கோ ஒரு வலி தோன்றி தலையில் போய் சம்மட்டி அடிப்பது, கண்கள் மேல் நோக்கி சொருகுவது, மூக்கில் ரத்தம் வடிவது என கொடுமை படுத்தும்.
 
அடேனியம் ஒபிசம் (Adenium Obesum):
 
ஆப்பிரிக்க கண்டத்தில் விளையும் இந்த வகைப் பூ கொடிய விஷம் உடையது.
 
இந்தப் பூக்களைப் பறித்து அரை நாள் கொதிக்க விட்டு, நீர் ஆவியாகிப் போனபின் வற்றிக் கிடக்கும் கெட்டியான பிசின் கொடிய விஷம். ஆதிவாசிகள் அம்புகளின் நுனியில் விஷத்தைத் தடவி விலங்குகள் மீது எய்துவதற்கு பயன்படுவது பெரும்பாலும் இந்த விஷம் தான்.
 
இது கொஞ்சம் உடம்பில் சென்றால் கொஞ்சம் கொஞ்சமாக அந்த விலங்கோ, மனிதனோ கொஞ்ச நேரத்திலேயே மயங்கி விழுந்து இறந்து விடுவான்.
 
சங்குனாரியா கனாடெனிசிஸ் (Sanguinaria Canadensis):  
 
கர்ப்பமான பெண்கள் இதை முகர்ந்து பார்த்தால், தாய்மை நிலை கேள்விக்குறியாகி விடும். அதுமட்டுமல்ல, இதன் நச்சுத் தன்மை உடலில் இறங்கினால் கோமா நிலைக்குப் போய்விடும் அபாயமும் உண்டு.
 
இந்த பூக்கள் தோலிலுள்ள செல்களை கொன்று விடுமளவுக்கு ஆபத்தானவை.
 
செர்பெரா ஒடொல்லம் (Cerbera odollam):
 
இது நமது இந்தியாவிலுள்ள ஒரு பூ. ‘சைலன்ட் கில்லர்’ என அழைக்கப்படுகிறது. இந்த பூவில் விஷத்தன்மை உண்டு. அந்த விஷத் தன்மை உடலில் கலந்து விட்டால் வெளியே தெரியாது.
 
கொஞ்சம் கொஞ்சமாக உடலுக்குள் அந்த விஷம் மெதுவாய்ப் பரவி முதலில் மயக்கத்தையும், அப்படியே மரணத்தையும் தந்து விடும். விஷம் உடலில் கலந்திருப்பதையும் கண்டு பிடிப்பது கடினம். 
 
கோல்கியம் ஆடம்னேல் (Colchicum Autumnale):
 
இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற இடங்களில் தான் இவை செழித்து வளரும்.
 
இதை நிறைய சாப்பிட்டால் மரணம் நிச்சயம். ஆனால், உடலின் ஒவ்வொரு பாகமும் செயலிழக்க, வலியில் துடித்து சாக வேண்டி வரும். 
 
கேஸ்டர் செடி (Castor plants):
 
ஆமணக்கு எண்ணெய் இந்த செடியிலிருந்து தான் வருகிறது. இந்தியாவில் எல்லா இடங்களிலும் கிடைக்கும் இந்தச்செடி விஷத்தன்மை உடையது.
 
தெரியாமல் ஒன்றிரண்டு விதைகளைச் சாப்பிட்டால் மரணம் நேரிடுவதைக் கூட தவிர்க்க முடியாது. 
 
இப்போதைக்கு கின்னஸ் உலக சாதனைப் பட்டியல் நூலில் அதிக விஷமுடைய செடி எனும் பெயர் இதற்கு உண்டு. 
 
ஏஞ்சல் ட்ரம்பெட் (Angel Trumpet):
 
ட்ரம்பெட் இசைக்கருவியைப் போன்ற அமைப்பில் கொத்துக் கொத்தாய்த் தொங்கும். தென்னமெரிக்கக் காடுகளில் இது அதிகம் காணப்படுகின்றன.  
 
ஆனால் இந்த பூக்களிலுள்ள நச்சுத்தன்மை உடலில் கலந்தால் அவர்கள் சுயநினைவில்லாதவர்கள் போல எதையெதையோ செய்ய ஆரம்பிப்பார்கள். ஆனால் முழுமையான உணர்வுடன் தான் இருப்பார்கள். உளவியல் ரீதியிலான பாதிப்புகளை இந்த பூ உண்டாக்கிவிடும். 
 
டெத் காமாஸ் (Death Camas):
 
இந்த செடியில் இரண்டு வகைப் பயிர்கள் உண்டு. ஒன்று சாப்பிடக்கூடிய வகை, அதை ‘எடிபிள் காமாஸ்’, இன்னொரு வகை ‘டெத் காமாஸ்’.
 
இரண்டையும் பார்த்து சட்டென வித்தியாசம் காண முடியாது. கொஞ்சம் சாப்பிட்டால் கூட உள் உறுப்புகளையெல்லாம் காலி செய்து மனிதனை சாகடிக்கும் இந்த தாவரம். 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* புதினாவின் தமிழ்ப் பெயர்

  ஈஎச்சக்கீரை

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பாம்பால் மனிதனை எவ்வாறு முழுதாக விழுங்க முடியும்?
7 மீட்டர் நீள மலைப் பாம்பு, இந்தோனேசியப் பெண் ஒருவரைக் கொன்று முழுதாக விழுங்கியுள்ளது.
19 June, 2018, Tue 15:15 | views: 601 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெப்பநிலைக்கும் தேர்வுகளுக்கும் என்ன தொடர்பு?
வெப்பநிலை அதிகமாக இருக்கும் காலங்களில், மாணவர்கள் தேர்வுகளைச் சிறப்பாகச் செய்வதில்லை என்று அண்மை
10 June, 2018, Sun 15:21 | views: 659 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மனித மூளை குறித்து ஆய்வில் புதிய தகவல்!
மனிதர்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும், புனிதமான தெய்வீக அனுபவங்களை ஆன்மா மற்றும் உள்மனம் சார்ந்து
3 June, 2018, Sun 11:24 | views: 1178 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆவிகள் ஏன் கேமராவில் மட்டும் சிக்குகின்றன தெரியுமா??
பலருக்கு ஆவிகள் பேய்கள் என்றால் பயம் உண்டு. ஆனால், பெரும்பாலும் ஆவிகள் கேமராக்கலில் ஏன் சிக்குகின்றன
27 May, 2018, Sun 10:36 | views: 2046 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புகை ஏன் மேல் நோக்கி செல்கிறது என தெரியுமா?
புகை ஏன் மேல் நோக்கி நகர்கிறது என்பதற்கான காரணத்தை நீங்கள் சிந்தித்துண்டா? இதன் பின்னால் இருக்கும்
20 May, 2018, Sun 13:12 | views: 1476 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS