Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 21 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி
2 October, 2017, Mon 16:18 GMT+1  |  views: 1699
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 21 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்றிலை பெற்றுள்ளது.
 
இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அபுதாபியில் இடம்பெற்றது.
 
இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
 
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக்களமிறங்கிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 419 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
 
இலங்கை அணிசார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய அணித் தலைவர் சந்திமல் ஆட்டமிழக்காது 155 ஓட்டங்களைப்பெற்றுக்கொடுக்க, திமுத்து கருணாரத்ன 93 ஓட்டங்களையும் டிக்வெல்ல 83 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
 
பாகிஸ்தான் அணி சார்பாக பந்துவீச்சில் மொஹமட் அப்பாஸ் மற்றும் யசீர் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
 
இந்நிலையில் பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து  422 ஓட்டங்களைப்பெற்று 3 ஓட்டங்களால் முன்னிலை வகித்தது.
 
பாகிஸ்தான் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் அசர் அலி 83 ஓட்டங்களையும் ஹரிஸ் சொகைல் 76 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
 
பந்து வீச்சில் அசத்திய இலங்கையின் சுழல் மன்னன் 93 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 
 
3 ஓட்டங்களால் பின்னிலை வகிக்க தனது 2 ஆவது இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை அணி பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாது அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து  138 ஓட்டங்களைப்பெற்றது.
 
இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் ஓரளவு தாக்குப்பிடித்த டிக்வெல்ல ஆட்டமிழக்காது 40 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
 
பாகிஸ்தான் அணி சார்பாக பந்துவீச்சில் யசீர் ஷா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 
இந்நிலையில் இன்றைய 5 ஆம் நாள் ஆட்டநேர நிறைவுக்குள்  136 ஓட்டங்களைப்பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி இலங்கையின் பந்துவீச்சளார்களின் மிகவும் துல்லியமான பந்துவீச்சுக்கு முகங்கொடுக்கத் தடுமாறி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ஓட்டங்களைப்பெற்று 21 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
 
21 ஓட்டஙகளால் வெற்றி பெற்ற இலங்கை அணி பாகிஸ்தான் அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலைபெற்றுள்ளது.
 
இப் போட்டியின் 2 இன்னிங்ஸிலும் 11 விக்கெட்டுகளை வீழ்த்திய சுழல் மன்னன் ரங்கன ஹேரத், 400 விக்கடெ்டுகளைக் கைப்பற்றிய முதலாவது இடதுகை சுழற்பந்துவீச்சாளர் என்ற உலகசாதனையைப் படைத்தார்.
 
இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான பகலிரவு டெஸ்ட் போட்டி எதிர்வரும் 6 ஆம் திகதி டுபாயில் இடம்பெறவுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* புதினாவின் தமிழ்ப் பெயர்

  ஈஎச்சக்கீரை

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மைதானத்தில் கதறி அழுத ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்!
ஆசியக் கோப்பை தொடரின் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது, போட்டி முடிந்ததும் ஆப்கான் வீரர்
23 September, 2018, Sun 3:15 | views: 178 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆப்கானிஸ்தான் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போராடி வீழ்த்திய பாகிஸ்தான்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 3
22 September, 2018, Sat 6:39 | views: 363 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!
நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிய்யின் சூப்பர் 4 ஆட்டம் ஒன்றில் இந்திய அணி வங்கதேச அணி 7
22 September, 2018, Sat 6:36 | views: 219 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆப்கானின் பந்து வீச்சில் சின்னாபின்னமானது பங்களாதேஷ்...!!
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் லீக் போட்டியில் பங்களாதேஷ் அணி
21 September, 2018, Fri 4:49 | views: 609 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி
20 September, 2018, Thu 4:41 | views: 666 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS