Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வாடகைக்கு வீடு தேவை
100818*15
அழகுக் கலைநிபுனர் தேவை
100818*15
பிரெஞ்சுக் குடியுரிமை வழிகாட்டல்...
100818*15
வீட்டு வேலைக்கு ஆள் தேவை
100818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
Bail விற்பனைக்கு
230618
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
சவரத் தொழிலாளியும் அரசனும்...!!
30 September, 2017, Sat 14:37 GMT+1  |  views: 2065
அரச‌ர்க‌ள் அ‌‌ன்றைய‌ கால‌த்‌தி‌ல் பொது ம‌க்களை‌ப் ப‌ற்‌றி அ‌றி‌ந்து கொ‌ள்ள பல முய‌ற்‌சிக‌ளி‌ல் ஈடுப‌ட்டன‌ர். ஒ‌வ்வொருவரு‌ம் ஒரு முறையை‌ப் ‌பி‌ன் ப‌ற்‌றி ம‌க்களை‌ப் ப‌ற்‌றி அ‌றி‌ந்தன‌ர். இர‌வி‌ல் மாறுவேட‌ம் அ‌ணி‌ந்து நக‌ர்வல‌ம் வருத‌ல், மாறுவேட‌ம் அ‌ணி‌ந்து ம‌க்களோடு ம‌க்களாக‌ப் பழகுது‌ல், ‌சிலரை அழை‌த்து கரு‌‌த்து கே‌ட்பது எ‌ன்று பல முய‌ற்‌சிகளை ஈடுப‌ட்டன‌ர். 
 
அ‌ப்படி‌யொரு முய‌ற்‌சி‌யி‌ல் இற‌ங்கு‌ம் அர‌ச‌னி‌ன் தவறு எ‌ன்னவெ‌ன்று பு‌ரியு‌ம் இ‌ந்த கதை‌யி‌ன் மூல‌ம்.
 
ஒருமுறை அரச‌ர் ஒருவ‌ர் சவரம் செய்து கொண்டா‌ர். சவரத் தொழிலாளி அவருக்குச் சவரம் செய்தபோது, தன் நாட்டு மக்களின் நிலை குறித்து சவரத் தொழிலாளியின் கருத்தைக் கேட்டா‌ர். 
 
``எனது குடிமக்கள் அனைவரும் வளமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளார்களா?'' என்று வினவினா‌ர் அரச‌ர். 
 
``ஆமாம் மகராஜா'' என்று பதில் சொன்னான் சவரத் தொழிலாளி. ``நம் நாட்டில் மிகவும் வறிய ஏழைகள் கூட எலுமிச்சை அளவு தங்கம் வைத்திருக்கிறார்கள்'' என்றும் சவரத் தொழிலாளி கூறினான்.
 
அரச‌‌‌ர் அதைக் கேட்டு ஆச்சரியப்பட்டுப் போனா‌ர். சவரத்தை முடித்துத் தொழிலாளி சென்றதும், தனது மூத்த, மதியூக மந்திரியை அழைத்தா‌ர் அரச‌‌‌ர்.
 
``நமது நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். ஆக, நான் ஒரு நல்ல ராஜா!'' அரச‌‌‌ர் பெருமிதத்தோடு தெரிவித்துக் கொண்டா‌ர்.
 
அரச‌‌‌ர் எப்படி அவ்வாறு நம்புகிறா‌ர் என்பதை ஆராய்ந்து அறிந்த அமைச்சர், மக்களின் நிலை குறித்த கருத்தை நம்பவில்லை.
 
ஒருநாள் அமைச்சர், சவரத் தொழிலாளி இல்லாத நேரத்தில் அவனது வீட்டுக்குள் புகுந்துவிட்டார். அங்கே ஒரு பையில் எலுமிச்சை அளவில் ஒரு தங்க உருண்டை இருப்பதை அமைச்சர் கண்டார். `சவரத் தொழிலாளி அப்படிக் கூறியதற்கான காரணத்தை கண்டுபிடித்துவிட்டேன்' என்று தனக்குள் சொல்லிக் கொண்டார் அமைச்சர்.
 
பின்னர் அவர் அந்த தங்க உருண்டையை எடுத்துக்கொண்டு சத்தம் போடாமல் அரண்மனைக்குத் திரும்பிவிட்டார்.
 
அரச‌ரிடம் தான் செய்ததைக் கூறி, சவரத் தொழிலாளியிடம் மறுநாள், முன்பு கேட்ட கேள்வியையே கேட்குமாறும், அவன் தனது கருத்தை மாற்றிக் கொண்டிருப்பான் என்றும் அமைச்சர் கூறினார்.
 
அடுத்த நாள், தொலைந்த தங்கத்தைத் தேடி அலுத்துக் களைத்துப் போயிருந்த சவரத் தொழிலாளி தாமதமாக அரண்மனைக்கு வந்தான். அவன் வாடிப் போன முகத்தோடு அரசருக்குச் சவரம் செய்யத் தொடங்கினான்.
 
குடிமக்களின் நிலை எப்படி இருக்கிறது என்று முந்திய நாள் கேட்ட கேள்வியையே மறுபடி கேட்டா‌ர் அரச‌‌‌ர். ``மகாராஜா, எல்லோரும் சந்தோசமாக இருக்கிறார்கள் என்று கூற முடியாது. சிலர் மன அமைதியின்றி கவலையால் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்!'' என்றான் சவரத் தொழிலாளி.
 
உடனே அரச‌‌‌ர், ஒவ்வொரு மனிதனும் தனது சூழ்நிலையின் அடிப்படையிலேயே உலகத்தைப் பற்றிக் கணிக்கிறான் என்பதை அரச‌‌‌ர் உணர்ந்தா‌ர். அந்த உண்மையை உணர வைத்த அமைச்சருக்கும் அரச‌‌‌ர் உரிய பரிசளித்துக் கவுரவித்தான்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகவும் வரண்ட பாலைவனம் எது?  
  ஆடகாமா பாலைவனம் (சிலி)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இலாபம் பெரும் நோக்கமே முதலாலித்துவம்...!!
ஒரு ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்து வந்தான். தனது ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளைக் கொண்டு சென்று
10 August, 2018, Fri 12:29 | views: 665 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரண்டு புலிக்கு எங்கே போவேன்...?
ஓர் ஊரில் பெண் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. அவள் கணவன் வணிகத்திற்காக
29 July, 2018, Sun 14:23 | views: 1312 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ராமு சுயநலவாதியா?
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தில் ஏறி அதில் தொங்கும் உடலைக் கீழே
22 July, 2018, Sun 12:54 | views: 765 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஏன் திறக்கவில்லை சொர்க்கவாசல்?
கரிஷி மந்தபாலர் கடும் பிரம்மச்சாரி. எப்போதும் இறைச் சிந்தனையில் தோய்ந்திருப்பவர். அவருக்கு சொர்க்கம்
15 July, 2018, Sun 16:19 | views: 775 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கடுமையான முயற்சி..!!
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே
8 July, 2018, Sun 14:33 | views: 796 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi / crêpier

Paristamil Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
STUDIO A LOUER
500 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS