Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
வாடகைக்கு வீடு
201017
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
வாடகைக்கு வீடுகள்
061017
கடை விற்பனைக்கு
210917
Bail விற்பனைக்கு
210917
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
நீலத்திமிங்கல விளையாட்டில் இருந்து வெளியேற வழி உண்டு
25 September, 2017, Mon 11:57 GMT+1  |  views: 1333
நீங்களோ, உங்கள் நண்பரோ தெரியாமல் அல்லது தீவிர ஆர்வத்தால் நீலத்திமிங்கல விளையாட்டில் நுழைந்துவிட்டு, வெளியே வர முடியாமல் தவித்தால் இங்கே தரப்படும் யுத்திகளைக் கையாளுங்கள்...
 
ஆபத்தான நீலத்திமிங்கல விளையாட்டிற்கு அதிக விளக்கம் தரத் தேவையில்லை. ஆனால் அதிலிருந்து மீண்டு வர முடியாது என்றே பலரும் பதிவிட்டு வருகிறார்கள். நிச்சயம் அதில் இருந்து மீண்டு வர முடியும். நீங்களோ, உங்கள் நண்பரோ தெரியாமல் அல்லது தீவிர ஆர்வத்தால் உள்ளே நுழைந்துவிட்டு, வெளியே வர முடியாமல் தவித்தால் இங்கே தரப்படும் யுத்திகளைக் கையாளுங்கள்...
 
நீலத்திமிங்கல சவால் விளையாட்டில் முதலில் கையில் பிளேடால் கீறவும், அதிகாலையில் எழுந்து தனிமையில் பேய்ப்படம் பார்க்கவும் என்பதுபோன்ற சாதாரண சவால்கள் கொடுக்கப்படுகிறது. தனிமையில் செய்துகொள்ளும் வித்தியாசமான சவால்களை அவர்கள் நமக்கு எதிராக மிரட்டல் ஆதாரமாக சேகரித்துக் கொள்கிறார்கள். அப்படி மிரட்டியே அடுத்தடுத்த கட்டளைகளுக்கு பணிய வைப்பார்கள்.
 
சிலர் சின்னச்சின்ன சவாலில் ஜெயிப்பவர்கள், விளையாட்டில் தீவிரமாகி, உளப்பூர்வமாக அடிமையாகிவிடுகிறார்கள். தானே மிகப்பெரிய திமிங்கலம் (சிறந்த சாதனையாளர்) என்ற மாய எண்ணத்தை உருவாக்கி, தன்னைப்போல யாரும் சாதனை செய்ய முடியாது என நினைக்க ஆரம்பிக்கிறார்கள். அதனால் உயிரை விடுவதையும் ஒரு சவாலாக நினைத்து துணிந்துவிடுகிறார்கள். அதனால்தான் இறந்துபோன பலரும், ‘என் சாதனையை பார்க்க நான் இருக்க மாட்டேன்’ என்றும், ‘என்னுடைய படம் மட்டுமே உங்களிடம் மீதமிருக்கும்’ என்ற வகையிலும் வாக்குமூலம் எழுதிவிட்டு போயிருக்கிறார்கள்.
 
நீங்கள் நீலத்திமிங்கல விளையாட்டில் சிக்கியிருப்பவர் என்றால், உங்களை கீழ்க்காணும் உளவியல் சாவல்களே அதில் இருந்து மீட்டுக் கொண்டு வரும். நீங்கள் இதை சாதித்துக் காட்டுங்கள் பார்க்கலாம்...
 
 
1. “நான் வலிமையானவன், என்னால் எதுவும் முடியும், நான் நினைப்பதை செய்து முடிப்பேன்” என 50 முறை எழுதுங்கள்.
 
2. காலையில் 10 மணி வரை தூங்கி எழுங்கள். எழுந்ததும் ஜன்னலைத் திறந்து ‘எத்தனை இனிமையான உறக்கம், எத்தனை இனிமையான வாழ்வு’ என்பதை நினைவு கொள்ளுங்கள்.
 
3. சூரியன் மறையும் அஸ்தமன வேளையில் கடற்கரையில் காற்று வாங்க நடைபோடுங்கள், இனிமையான இசையை கேட்டுக் கொண்டே பயணித்தாலும் தவறு இல்லை.
 
4. உங்களுக்கு என்ன உணவு பிடிக்கும், சிக்கன் பிரியாணியா? மசால் தோசையா? அதை ஓட்டலில் சென்றுதான் ருசிக்க வேண்டுமா? உங்களால், உங்களுக்குப் பிடித்த உணவை செய்துவிட முடியுமா? அந்த சவாலைச் செய்து முடித்தால், ஓட்டல் போலவே சுவையாக தயாரித்துவிட்டால் நீங்கள்தான் சவாலில் வென்றவர். எங்கே உங்கள் திறமையைச் சோதிக்க, உணவை ருசித்துப் பார்க்க நாங்களும் வரட்டுமா?
 
5. இரைச்சல் இல்லாத இயற்கையின் இசையை கேட்டிருக்கிறீர்களா? அதிகாலை வேளையில் எழுந்து அமைதியான பாதையில் நடந்து இயற்கையின் பாஷையை ஒரு கவிதையாக வடியுங்கள். உங்கள் வலைத்தளத்தில் அதை பதிவிட்டு, லைக்ஸ் அள்ளுங்கள்.
 
6. இந்த சவால் மிகக் கடினமானது. இதை சாதித்தால் உங்களை வாழ்வில் வெற்றி கொள்ள முடியாது. நீங்கள் நிஜமாகவே நீல திமிங்கலம்தான். இதுதான் சவால்... ‘நீங்கள் வழக்கமாகச் செல்லும் வழியிலேயே செல்லுங்கள். அடிக்கடி சந்தித்தும், அறிமுகம் இல்லாத 5 பேரிடம் பேச்சு கொடுங்கள். உங்களால் அறிமுகத்தைத் தாண்டி பேச முடிகிறதா? நீங்கள் யார், அவர் யார்? என்பதை உணர்கிறீர்களா? அவரது திறன் நீங்கள் மதிப்பிட்டதுபோல இருக்கிறதா? இல்லை அவர் பிரமிப்பான மனிதராக தோன்றுகிறாரா? உங்களால் இரண்டொரு வார்த்தைகளுக்குமேல், ஒரு நிமிடத்திற்கு மேல் உரையாட முடியவில்லையா? என்பதைச் சோதியுங்கள். அந்த அறிமுக உரையாடல் நட்பாகத் தொடரும்வகையில் நீங்கள் நல்ல பண்பாளர் என்றால் நீங்கள்தான் நிஜமான நீலத்திமிங்கலம். உங்களைப்போல் பிரமாண்டமானவர் எவரும் இல்லை என கர்வம் கொள்ளுங்கள். அந்த சவாலில் தோற்றுப் போனால், நாளை மீண்டும் புதிய மனிதர்களை சந்தியுங்கள். பழக்க வழக்கத்தை மேம்படுத்தி சாதித்துக் காட்டுங்கள்.
 
7. மற்றவரிடம் பேசுவதே இவ்வளவு பெரிய சவாலாக இருக்கும்போது, இது அதைவிடவும் பெரிய சாதனை. சவாலுக்கு தயாராகிறீர்களா? இதோ சவால், “வாழ்க்கையில் நீங்கள் சாதித்துவிட்டதாக நினைக்கிறீர்களா? அல்லது வாழ்க்கை உங்களை புறக்கணித்துவிட்டதாக நினைக்கிறீர்களா? வாழ்க்கை உங்களை ஒதுக்கியிருக்கிறது என நினைத்தால், வாழ்க்கை என்னை புறக்கணிக்க என்ன காரணம், என்ன இருந்தால் வாழ்க்கையை நான் வெல்ல முடியும் என்று சிந்தித்து சவால் விடுங்கள். வாழ்க்கையிடம் நீங்கள் நிரூபித்துக்காட்டுங்கள் நானும் ஒரு நிஜ திமிங்கலமென்று! சவாலில் ஜெயித்து, வசதியாய் வாழ்ந்து காட்டுங்கள். நீலத்திமிங்கலமாய் நிமிர்ந்து நில்லுங்கள். இப்போதுதான் நீங்கள், “நானே நீலத்திமிங்கலமென்று” கர்ஜிக்க சரியான நபர்.
 
இந்த கட்டளைகள் அனைத்தும் சாதாரணமாகத் தோன்றினாலும், சாதிக்க மிகக் கடினமானவைதான். வாழ்ந்து சாதிக்க முடியாதவர்கள்தான், வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். நீலத்திமிங்கல விளையாட்டிற்குள் நுழைந்துவிட்டு மன இறுக்கத்தில் இருப்பவர்களை மீட்பதற்காக மனோதத்துவ ரீதியில் உருவாக்கப்பட்டவை இந்த சவால்கள். முடிந்தால் இதில் ஜெயித்துக் காட்டுங்கள்.
 
இன்னும் உரக்க சவால்விடுவதென்றால், நீலத்திமிங் கல விளையாட்டை உருவாக்கிய பிலிப் பியுடெய்க்கின் வாக்குமூலத்தை கவனியுங்கள்... “வாழத் தகுதியற்றவர்களை இந்த சமூகத்தில் இருந்து களையெடுக்கவே என் விளையாட்டு” என்பதே அவரின் திமிர் வாக்குமூலம். உங்களை வாழத் தகுதியற்றவன் என்று இழிவுபடுத்தும் அவனது வார்த்தைகளை நிறைவேற்றுவதுதான் உங்கள் வாழ்நாள் சாதனையா? என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்க மீண்டும் ஒருமுறை அர்த்தமுள்ள சவால் பட்டியலை படித்து நிறைவேற்றுங்கள்! வெற்றியுடன் சந்திப்போம்! 
 
  முன்அடுத்த   
paristamil
மரண அறிவித்தல் Paristamil Marana Arivithalதிரு நாகலிங்கம் பஞ்சலிங்கம்
Paristamil Marana Arivithal
மண்ணில்:23-05-1960
விண்ணில்:13-10-2017
Paristamil Marana Arivithal

யாழ். கரவெட்டி கிழக்கு யார்க்கருவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம்

பிறந்த இடம் : யாழ். கரவெட்டி கிழக்குஇறந்த இடம்:  ஜெர்மனி
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சூஜியோகிராபி (Zoogerogrphy)

பூமிப் பரப்பில் விலங்கினங்கள் உருவான விதம் குறித்து அறியும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
WhatsAppஇல் புதிய அம்சம் அறிமுகம்!
வாட்ஸ்அப் செயலியில் லைவ் லொகேஷன் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய வசதி எவ்வாறு வேலை
20 October, 2017, Fri 15:39 | views: 565 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Android கூகுள் தேடல்களை அழிப்பது எப்படி?
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் நீங்கள் மேற்கொண்ட கூகுள் தேடல்களை, உங்களது அனுபவத்தை மேம்படுத்த கூகுள்
15 October, 2017, Sun 14:41 | views: 779 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
40 மொழிகளை மொழி பெயர்க்கும் கூகுளின் ஹெட்போன்!
கூகுள் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஆச்சரியம் தரும் வசதிகளை அவ்வப்போது அறிமுகம் செய்து வரும்
7 October, 2017, Sat 7:38 | views: 1727 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சார்ஜ் செய்யும் போது பாதியாக பிளந்து கொண்ட iPhone 8!
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்த போது வெடித்து,
3 October, 2017, Tue 12:13 | views: 1924 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Twitterஇல் ஏற்பட்ட புதிய மாற்றம்!
டுவிட்டரில் பதிவிட 140 எழுத்துக்கள் பயன்படுத்த முடியும் என்ற நிலையில் தற்போது அந்த விதிமுறையில் மாற்றம்
29 September, 2017, Fri 14:14 | views: 792 |  செய்தியை வாசிக்க
  Annonce
offre d'emploi / TRAVAIL

Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS