வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
Bail விற்பனைக்கு
210917
தேவை
190917
தேவை
190917
வீடு வாடகைக்கு
180917
Bail விற்பனைக்கு
180917
அழகுக் கலைநிபுனர் தேவை
180917
தேவை
160917
தேவை
160917
வாடகைக்கு வீடுகள்
310817-15days
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
காண்டிராக்டர் தற்கொலை வழக்கு முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கைதாகிறார்?
13 September, 2017, Wed 15:52 GMT+1  |  views: 315

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி யுள்ள டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் குஷால் நகரில் உள்ள பெண்டிங்பான் எனும் தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
இந்த நிலையில் நேற்று இந்த சொகுசு விடுதிக்கு கோவை பதிவெண் கொண்ட வாகனத்தில் கோவை பேரூர் டி.எஸ்.பி.வேல்முருகன் தலைமையில் கோவை போலீசார் திடீரென வந்த னர்.

அவர்களுடன் நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. சத்தியமூர்த்தி உள்ளிட்ட போலீசாரும் வந்திருந்தனர். விடுதி நிர்வாகத்தின் அனுமதி பெற்று விடுதிக்குள் நுழைந்த போலீசார் எம்.எல். ஏ.க்களின்  அறைகளில் சோதனை நடத்தினார்கள்.

நாமக்கல் காண்ட்ராக்டரும்,  சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் நண்பருமான  சுப்பிரமணியம் மர்ம மரணம் வழக்கில் தொடர்புடைய முன்னாள் அமைச்சரும்  பாப்பி ரெட்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.வுமான பழனியப்பன் குறித்து விசாரணை நடத்த அவரை அழைத்து செல்ல வந்திருப்பதாக கூறினார்கள். இது  சம்பந்தமான கோர்ட்டு உத்தரவு நகலையும் அவர்கள் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களிடம் காண்பித்தனர். பின்னர் பழனியப்பன் தங்கி இருக்கிறாரா? என்று ஒவ்வொரு  அறையாக சோதனையிட்டனர். ஆனால்  அவர்  அங்கு இல்லை.

இந்த  சோதனைக்கு எம்.எல்.ஏ.க்கள் தங்க தமிழ்ச்செல்வன், சோளிங்கர்  பார்த்திபன், ஜெயந்தி பத்மநாபன், கதிர்காமு உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். சோதனை நடத்த வாரண்டு உள்ளதா? என்றும் கேள்வி எழுப்பினார்கள். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

எங்கள்  கடமையை செய்ய விடுங்கள் என்று போலீசார்  கூறியதை அடுத்து எம்.எல்.ஏ.க்கள் அமைதியானார்கள். அதன் பிறகு ஒவ்வொரு அறையாக சென்று போலீசார் சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனை நடத்திய போது, பழனியப்பன் அங்கு இல்லை.  அவர் அங்கிருந்து  திடீரென மாயமாகி  விட்டதாக கூறப்படுகிறது. போலீசார் வருவதை முன்கூட்டியே மோப்பம் பிடித்த டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் பழனியப்பனை  நேற்று காலையே வேறு ஒரு இடத்திற்கு மாற்றிவிட்டதாக கூறப்படுகிறது.  பழனியப்பன் சொகுசு விடுதியில் இல்லாததால் சுமார் 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்ட போலீசார் பின்னர் விடுதியை விட்டு வெளியே வந்தனர்.

இன்று 2-வது நாளாக சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. சத்திய மூர்த்தி தலைமையில் போலீசார் குடகு பகுதியில் முகாமிட்டு பழனியப்பன் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும் போது, நாமக்கல் காண்ட்ராக்டர் சுப்பிரமணியம் தற்கொலை வழக்கில் நேரில் ஆஜராகு மாறு பழனியப்பனுக்கு 2 முறை நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால் அவர் விசா ரணைக்கு ஆஜராகவில்லை. எனவே, கோர்ட்டு உத்தரவின்   பேரில் அவரை தேடி வருகிறோம்.  அவர் குடகில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சோதனை நடத்தினார்கள் என்றார்.

இந்த நிலையில் பழனியப்பன் எம்.எல்.ஏ. தனது சொந்த ஊரான தர்மபுரி மாவட்டம் பாப்பி ரெட்டிப்பட்டி அருகே  மோளையானூரில் உள்ள  வீட்டுக்கும் போலீசார்  சென்று சோதனை நடத்தினார்கள். பழனியப்பன் அங்கும் இல்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப் பட்டுள்ளது. அவரை தேடும் பணியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார்  தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவரது வீட்டையும் கண்காணித்து வருகின்றனர்.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக வருமான வரித்துறையினர் தமிழகத் தில்  35 இடங்களில் சோதனை நடத்தினர். சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும்  அவரது நெருங்கிய நண்ப ரான நாமக்கல், ஆசிரியர் காலனியை சேர்ந்த காண்டி ராக்டர் சுப்பிரமணியம் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

இதற்கடுத்த சில நாட்களில் செவிட்டுரங்கம்பட்டியில் உள்ள தனது தோட்டத்தில் சுப்பிரமணியம் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த தமிழக அரசு உத்தர விட்டது.

இதனை தொடர்ர்ந்து சுப்பிரமணியம் தனது தற்கொலைக்கான காரணம் குறித்து எழுதிய கடிதங்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் சிக்கியது. அதில்  பழனியப்பன் பெயரும் இடம்பெற்றிருந்தது.

இது தொடர்பாக ஏற்கனவே ஒரு முறை சம்மன் அனுப்பப்பட்டு, நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் பழனியப்பன் நேரில் ஆஜராகி விளக்கம்
அளித்தார். 2-வது முறை சம்மன் அனுப்பப்பட்டு அவர் ஆஜராகவில்லை. எனவே  கோர்ட்டு உத்தரவுப்படி கைது வாரண்டுடன்  போலீசார் வந்ததாக கூறப்படுகிறது.

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* 1972-ம் ஆண்டு வங்காள தேசத்தின் தேசிய விளையாட்டாக கபடி அறிவிக்கப்பட்டது.
சஞ்சீவனி, காமினி மற்றும் அமர் ஆகிய பெயர்களில் 3 விதங்களில் கபடி ஆட்டம் நடைபெறுகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பொதுக்குழு தீர்மான நகலை தேர்தல் ஆணையத்தில் வழங்குகிறார்கள்
தேர்தல் ஆணையத்தில் அமைச்சர்கள் ஜெயக்குமார், சண்முகம் உள்ளிட்டோர் பொதுக்குழு தீர்மான நகலை இன்று காலை 11 மணிக்கு அளிக்கின்றனர்.
22 September, 2017, Fri 8:19 | views: 260 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரதமர் மோடியின் தூய்மை சேவை திட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் முழு ஆதரவு
பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை சேவை திட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் தனது முழு ஆதரவை தெரிவித்து டுவிட்டரில் கருத்து வெளியிட்டு உள்ளார்.
22 September, 2017, Fri 8:17 | views: 175 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில்தான் உள்ளார் : சகோதரர் இப்ராகிம் காஸ்கர் கூறியதாக போலீசார் தகவல்
தாவூத் இப்ராகீம் பாகிஸ்தானில்தான் உள்ளார் என்று அவரது சகோதரர் இப்ராகீம் காஸ்கர் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
22 September, 2017, Fri 8:16 | views: 149 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் மீதான இறுதி விசாரணை முடிவடைந்ததை
21 September, 2017, Thu 5:16 | views: 331 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க நினைப்பவர்களின் எண்ணம் பகல் கனவாக முடியும்-எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க நினைப்பவர் களின் எண்ணம் பகல் கன வாக முடியும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
21 September, 2017, Thu 5:15 | views: 218 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS