Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
வாடகைக்கு வீடு
191117
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
இலங்கையை வெள்ளையடிப்பு செய்து சாதனை வெற்றி படைத்த இந்தியா!
4 September, 2017, Mon 4:49 GMT+1  |  views: 1733
இலங்கைக்கு எதிரான 5 ஆவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-0 என வெற்றிபெற்று தொடரை வெள்ளையடிப்புச் வரலாற்று வெற்றியை பதிவுசெய்துள்ளது.
 
முன்னதாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என வெள்ளையடிப்புச்செய்த இந்திய அணி, ஒருநாள் தொடரையும் சொந்த மண்ணில் வைத்து வெள்ளையடிப்புச் செய்து இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
 
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் ஒரேயொரு இருபதுக்கு-20 போட்டியிலும் விளையாடி வருகின்றது.
 
டெஸ்ட் தொடரை 3-0 என வெள்ளையடிப்புச் செய்த இந்திய அணி, ஒருநாள் தொடரையும் தற்போது வெள்ளையடிப்புச் செய்துள்ளது.
 
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் பகலிரவுப் போட்டியாக இடம்பெற்ற இன்றைய 5 ஆவது ஒருநாள் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
 
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி 49.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 238 ஓட்டங்களைப் பெற்றது.
 
இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் திரிமன்னே 67 ஓட்டங்களையும் மெத்தியூஸ் 55 ஓட்டங்களையும் உபுல் தரங்க 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
 
இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார் 42 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 
இந்நிலையில் 239 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பம் ஆட்டங்கண்ட போதிலும் அணித் தலைவர் கோலி உறுதியுடன் துடுப்பெடுத்தாடி 110 ஓட்டங்களைப்பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
 
இறுதியில் இந்திய அணி 46.3 ஓவர்களில் 21 பந்துகள் மீதமிருக்க வெற்றி இலக்கை அடைந்து 6 விக்கெட்டுகளால் 5 ஆவது ஒருநாள் போட்டியை வெற்றிபெற்று 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-0 என கைப்பற்றி இலங்கையை அதன் சொந்த மண்ணில் வெள்ளையடிப்புச் செய்துள்ளது.
 
இத் தொடரின் ஆட்ட நாயகனாக இந்திய அணியின் பந்துவீச்சாளர் பும்ரா தெரிவுசெய்யப்பட்டார்.
 
தனது சொந்தமண்ணில் இலங்கையை வேறு நாட்டு அணியொன்று ஒருநாள் போட்டித் தொடரை வெள்ளையடிப்புச் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான ஒரேயொரு இருபதுக்கு-20 போட்டி எதிர்வரும் 6 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும்

  அது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
திக்வெல்லவுடன் மோதலுக்கு சென்ற சமி , கோஹ்லி! வீடியோ இணைப்பு
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் நேரத்தை கடத்த திக்வெல்ல நக்கல் செய்ததால், இந்திய அணியின் பந்து
21 November, 2017, Tue 6:12 | views: 891 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இந்தியா - இலங்கை ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!
இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து முதலாவது டெஸ்ட் போட்டியில் தற்போது விளையாடி
20 November, 2017, Mon 5:10 | views: 1100 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஏமாற்றிய இலங்கை வீரர்! நேற்றைய போட்டியில் நடந்தது என்ன?
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று
19 November, 2017, Sun 7:54 | views: 1392 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிக்கு ஏற்பட்டுள்ள நிலை!
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம்
18 November, 2017, Sat 3:34 | views: 795 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விராட் கோஹ்லி தேசிய கீதத்தை அவமதித்தாரா???
இந்திய அணியின் கேப்டன் கோலி தேசிய கீதத்தை அவமதித்தாகவும், தேசிய கீதம் பாடும் போது வாயில் சூயிங் கம்
17 November, 2017, Fri 12:32 | views: 639 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS