Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
தினசரி அசைவம் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?
28 June, 2017, Wed 11:44 GMT+1  |  views: 2590

 நமது உடல் ஆரோக்கியமாக இயங்க கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, நீர்ச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள், நுண்ணூட்டச்சத்துகள் என ஒவ்வொன்றுமே மிகவும் அவசியம். இவற்றில் ஏதேனும் ஒன்று குறையும்போதும் நம் உடலின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.

 
நாம் உண்ணும் உணவை நம் உடல் கொழுப்பாக மாற்றி வைத்துக்கொள்ளும். உடலுக்கு ஆற்றல் தேவைப்படும்போது கொழுப்பை உடைத்து, தனக்குத் தேவையான ஆற்றலை உடல் தயாரித்துக்கொள்கிறது. தினசரி அசைவம் சாப்பிடும்போது, நம் உடலுக்கு கொழுப்புச்சத்து அளவுக்கு அதிகமாகக் கிடைக்கிறது. இந்தக் கொழுப்பு அப்படியே நம் உடலில் தங்கும்போது உடல்பருமன் ஏற்படுகிறது. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், இதய நோய்கள் போன்றவற்றுக்கு உடல்பருமன்தான் தலைவாசல்.
 
அசைவத்தில் நிறைவுற்ற கொழுப்பு அதிகம் உள்ளது. இது இதய ரத்த நாளங்களில் உள்ள நல்ல கொழுப்பைக் கட்டுப்படுத்தி, கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்யும்போது, ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதால், மாரடைப்பு, திடீர் இதயத்துடிப்பு முடக்கம், பக்கவாதம் போன்ற தீவிரமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
 
உடலில் அளவுக்கு அதிகமாகத் தங்கும் கொழுப்பைக் கல்லீரல்தான் சேமித்து, தேவைப்படும்போது ஆற்றலாக மாற்றுகிறது. இப்படிக் கொழுப்பு அளவுக்கு அதிகமாக சேர்ந்துகொண்டே போகும்போது கல்லீரல் பாதிக்கப்படுகிறது. இதனால், கல்லீரல் சுருக்கம் ஏற்படுகிறது.
 
 
 
அசைவ உணவுகளைப் பொரித்துச் சாப்பிடுவது இன்னமும் மோசமானது. ஹோட்டல்களிலும், ரெஸ்டாரன்ட்களிலும் உள்ள அசைவ உணவுகளில் பதப்படுத்துவதற்காக நைட்ரேட் சேர்க்கப்படுகிறது. இதை உயர் வெப்பநிலையில் சமைக்கும்போது, புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் (Carcinogenic) வெளிப்படுகின்றன. இந்த கார்சினோஜீன் உடலில் சேரும்போது, புற்றுநோயை ஏற்படுத்துகிறது. 
 
ப்ராஸ்டேட், மலக்குடல்வாய்ப் புற்றுநோய், இரைப்பைப் புற்றுநோய் போன்றவை ஏற்படக்கூடும். சமைத்த எண்ணெயையே மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதும் புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளில் பிரதானமானது. எனவே, ஹோட்டல்களில் பொரித்த அசைவ உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்ப்பதே நல்லது.
 
தினசரி அசைவம் சாப்பிடும்போது உடலில் அளவுக்கு அதிகமாகப் புரதம் சேர்கிறது. இந்தப் புரதத்தை நீக்கவேண்டிய பணியை சிறுநீரகங்கள் செய்கின்றன. தொடர்ந்து அளவுக்கு அதிகமாக வேலை செய்ய நேர்கிறபோது, ஒருகட்டத்தில் சிறுநீரகங்கள் பழுதாகி, முழுமையாகச் செயல்படாமல் போகவும் வாய்ப்பு உள்ளது.
 
 
 
அசைவ உணவுகளில் ஹார்மோன்கள் அதிக அளவில் உள்ளதால், நமது பாலியல் சுரப்பைத் தூண்டித், தேவையற்ற பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக, பிராய்லர் கோழிகளுக்கு அவற்றின் வேகமான வளர்ச்சிக்காகவும் அதிகக் கறிக்காகவும் ஈஸ்ட்ரோஜென் ஊசி போடப்படுகிறது. பெண்களின் இனப்பெருக்க மண்டலத்தின் வளர்ச்சி இயக்கத்தைத் தூண்டும் ஹார்மோன் இது. 
 
பெண்கள் பிராய்லர் சிக்கனை அடிக்கடி சாப்பிடும்போது அவர்கள் உடலில் அளவுக்கு அதிகமாக ஈஸ்ட்ரோஜென் சேர்கிறது. இதனால், மிக இளம் வயதிலேயே பூப்பெய்துவது, சீரற்ற மாதவிடாய்க் கோளாறுகள், கர்ப்பப்பை பிரச்னைகள், பி.சி.ஓ.எஸ் பிரச்சனைகள், கர்ப்பப்பைப் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. பேலியோ டயட்டில் கொழுப்புச்சத்துதான் உடலுக்கான பிரதான எரிபொருளாக உள்ளது. 
 
இதனால், இதைப் பின்பற்றுபவர்கள் அசைவம் அதிகமாகச் சாப்பிடுகிறார்கள். இதுபோன்ற டயட் முறைகள் நல்ல பலன் தருவதாகப் பெரும்பாலானவர்கள் சொன்னாலும், இதன் விளைவுகள் பற்றி உடனடியாகச் சொல்ல முடியாது. நீண்டகால அளவில் இவை உடலில் எப்படிச் செயல்படுகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் சொல்லமுடியும். ஏனெனில், அளவுக்கு அதிமான கொழுப்பு நமது செரிமான மண்டலத்துக்கு ஆபத்து.
 
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது?
  ஏஞ்சல் நீர்வீழ்ச்சி  (வெனிசுலா)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தலையில் புண்கள் ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்....!!
நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்களால், தலையில் புண் உண்டாக காரணமாகி விடுகிறது. இத்தகைய பொருட்கள் அப்படியே ஒரு படலம் போல் தலையின
23 January, 2019, Wed 10:02 | views: 552 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சரும அழகை பாதுகாக்கும் தேங்காய் பால்
தேங்காயை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் முகம் மற்றும் முடியின் அழகையும் நாம் பராமரிக்கலாம். இன்று தேங்காய் பாலை பயன்படுத்தி சரும
16 January, 2019, Wed 16:23 | views: 484 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கற்பூர எண்ணெய்
உங்கள் முடியை நன்கு அழகுபடுத்த கற்பூரத்தை எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதைப் பற்றியும், கற்பூர எண்ணெயின் சிறந்த குணப்படுத்தும் ப
9 January, 2019, Wed 16:35 | views: 537 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தினமும் 30 நிமிட நடைபயிற்சி தரும் பயன்கள்
எளிய உடற்பயிற்சியான நடைபயிற்சியினை தினமும் செய்யுங்கள் என எப்போதும் மருத்துவ குறிப்பு கூறுபவர்களும் வலியுறுத்திக் கொண்டேதான் இருக
4 January, 2019, Fri 13:12 | views: 648 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கருப்பு சருமம் அழகானது...ஆரோக்கியமானது...
இன்றைய தலைமுறையினர், செக்கச் சிவந்த மேனியைத் தான், அழகு என்று போற்றி, அதை, பெரிதும் விரும்புகின்றனர். கருப்பாக இருந்தாலும், "களை’
2 January, 2019, Wed 11:30 | views: 600 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS