வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வாடகைக்கு வீடுகள்
080817-15days
வேலையாள்த் தேவை
060817
Bail விற்பனை Paris 12
050717
Bail விற்பனைக்கு
La Chapelle
270617
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
வடகொரியாவுடன் போர் இல்லை அமெரிக்க ராணுவ மந்திரி சூசகம்
12 August, 2017, Sat 5:51 GMT+1  |  views: 1111
  • coffee-bharath
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்கள், அமெரிக்காவுக்கு பெருத்த தலைவலியாக அமைந்துள்ளது. கடந்த மாதம் அமெரிக்க நகரங்களை குறி வைத்து தாக்குகிற ஆற்றல் வாய்ந்த 2 ஏவுகணைகளை வடகொரியா ஏவி சோதித்தது, இது அமெரிக்காவுக்கு எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல் ஆயிற்று.

இதன் காரணமாக அமெரிக்காவின் முயற்சியால், வடகொரியாவுக்கு மேலும் நெருக்கடி ஏற்படுத்துகிற வகையில், அந்த நாட்டின் நிலக்கரி, இரும்பு, இரும்புத்தாது, ஈயம், மீன், கடல் உணவுகள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதிக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்தது. இந்த புதிய பொருளாதார தடையால் அந்த நாட்டுக்கு ரூ.6 ஆயிரத்து 500 கோடி வருமானம் கிடைக்காமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
போர்ப் பதற்றம்

இதில் ஆத்திரம் அடைந்த வடகொரியா மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்காவின் அதிகார எல்லைக்குள் வருகிற குவாம் தீவின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்போவதாக அறிவித்தது.

இதற்கான திட்டத்தை அந்த நாட்டின் அரசு டெலிவி‌ஷனில் வரைபடங்களுடன் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்போ, ‘‘அமெரிக்காவுக்கு எதிராக வடகொரியா செயல்பட்டால் மிகுந்த பதற்றத்தை சந்திக்க வேண்டியது வரும். வடகொரியாவுக்கு சிக்கல் ஏற்படும்’’ என எச்சரித்தார்.

இதனால் இரு நாடுகள் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
திடீர் திருப்பம்

ஆனால் இதில் திடீர் திருப்பமும் ஏற்பட்டுள்ளது. வடகொரியாமீது அமெரிக்கா போர் தொடுக்காது என்பதை சூசகமாக அமெரிக்க ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கலிபோர்னியாவில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் பேசுகையில், ‘‘நான் ராணுவ மந்திரி என்ற வகையில், (வடகொரியாவுடன்) மோதலுக்கு தயார் ஆவதுதான் என் வேலை. ஆனால், வெளியறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன், ஐ.நா. சபைக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி ஆகிய இருவரும் ராஜ்ய ரீதியில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது நல்ல விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது’’ என்று கூறினார்.
பேச்சு வார்த்தை

ஆனால் ராஜ்ய ரீதியில் எடுத்து வருகிற நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து அவர் விளக்கவில்லை.

மேலும், ‘‘போரின் சோகம், ஏற்கனவே அறியப்பட்டுள்ளது. அது பேரழிவை ஏற்படுத்தும் என்பதற்கு அப்பால் அதன் குணாதிசயங்கள் குறித்து விளக்கத் தேவையில்லை’’ என்று கூறினார்.

அமெரிக்க ராணுவத்தின் தாக்குதல் திட்டம் பற்றிய கேள்விக்கு ஜேம்ஸ் மேட்டிஸ் பதில் அளிக்கையில், ‘‘ மோதலுக்கு நாடு தயாராக இருக்கிறது. ஆனால் நான் என்ன செய்யப்போகிறேன் என்பது குறித்து எதிரிக்கு முன்கூட்டியே கூற வேண்டிய அவசியம் இல்லை’’ என்று கூறினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், ‘‘அமெரிக்கா எப்போதுமே பேச்சு வார்த்தையைத்தான் பரிசீலித்து வந்திருக்கிறது’’ என்றும் குறிப்பிட்டார்.

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

வெர்னியர் (Vernier)

சென்டிமீட்டர் அளவைவிட மிகக் குறைவான அளவீட்டை அளக்கும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தங்கையின் உடலுறுப்புகளை வெட்டி குப்பையில் வீசிய அண்ணன்! காரணம் என்ன?
இத்தாலி தலைநகர் ரோமில் 62 வயதான அண்ணன் ஒருவர் 59 வயதான தனது தங்கையை கொன்று அவரது உடலுறுப்புகளை
19 August, 2017, Sat 5:21 | views: 1339 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பதவியை ராஜினாமா செய்யும் ட்ரம்ப்?
அமெரிக்க அதிபராக உள்ள டொனால்ட் ட்ரம்ப் தனது பதவியை விரைவில் ராஜினாமா செய்வார் என அவரது நெருங்கிய
19 August, 2017, Sat 4:43 | views: 515 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறையில் கலவரம்: 37 கைதிகள் பலி!
வெனிசுலா நாட்டுச் சிறையில் கைதிகளுக்குள் ஏற்பட்ட பயங்கர மோதலில், 37 கைதிகள் பரிதாபமாக இறந்த சம்பவம்
19 August, 2017, Sat 3:58 | views: 358 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பின்லாந்தில் பயங்கரவாத தாக்குதல்! பலர் காயம்
பின்லாந்தில் மர்மநபர் ஒருவர் மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர்
18 August, 2017, Fri 17:08 | views: 1791 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஸ்பெயின் நாட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்பு
ஸ்பெயின் நாட்டில் நடத்தப்பட்ட வாகன தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
18 August, 2017, Fri 7:54 | views: 1606 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS