வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வாடகைக்கு வீடுகள்
080817-15days
வேலையாள்த் தேவை
060817
Bail விற்பனை Paris 12
050717
Bail விற்பனைக்கு
La Chapelle
270617
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
தமிழக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் தேவைப்பட்டால் கொண்டுவருவோம் மு.க.ஸ்டாலின்
12 August, 2017, Sat 5:40 GMT+1  |  views: 349
  • coffee-bharath
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

அ.தி.மு.க. இரண்டாக உடைந்ததை தொடர்ந்து, சசிகலா தலைமையில் அ.தி.மு.க. (அம்மா) என்ற பெயரில் ஒரு அணியும், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) என்ற பெயரில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகின்றன.

அ.தி.மு.க. (அம்மா) அணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்து வருகிறார். இந்த அணியில் 123 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கும், ஆட்சியாளர்களுக்கும் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, அ.தி.மு.க. அம்மா அணியில் பிளவு ஏற்பட்டு உள்ளது.

அ.தி.மு.க. அம்மா அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானவர்கள் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவாக உள்ளனர். டி.டி.வி. தினகரனை கணிசமான எம்.எல்.ஏ.க்கள் ஆதரிக்கிறார்கள்.

இந்த நிலையில், சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நேற்று முன்தினம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில், டி.டி.வி.தினகரனை துணை பொதுச் செயலாளராக நியமித்தது செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள டி.டி.வி.தினகரன், தன்னை நீக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லாது என்றும், எடப்பாடி பழனிசாமியை நீக்கும் அதிகாரம் தனக்கு உண்டு என்றும் கூறி இருக்கிறார். பதவியில் இருக்கும் வரை சுருட்ட பார்ப்பதாகவும் அவர் குற்றம்சாட்டி இருக்கிறார்.

அத்துடன், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப் படுத்தி இருக்கும் அவர், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

டி.டி.வி.தினகரனை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்பினால், அவரது அரசுக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இதனால் இனிவரும் நாட்களில் தமிழக அரசியலில் அதிரடி திருப்பங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், முதன்மை செயலாளர் துரைமுருகன் முன்னிலையில் நேற்று காலை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டம் முடிந்ததும் மு.க. ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக உணர்கிறீர்களா?

பதில்:- தமிழகத்தில் நிச்சயம் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. ஆளும் அ.தி. மு.க. அரசு 3 அணிகளாக பிரிந்து இருக்கிறது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். விரைவில் இதற்கு ஒரு நல்ல முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

கேள்வி:- தமிழக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப் படுமா?

பதில்:- தேவைப்பட்டால் கொண்டுவருவோம்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டசபையில் சபாநாயகர் நீங்கலாக அ.தி.மு.க. (அம்மா) அணிக்கு 123 எம்.எல்.ஏ.க்களும், அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணிக்கு 11 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். எதிர்க்கட்சியான தி.மு.க.வுக்கு 89 எம்.எல்.ஏ.க்களும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு 8 எம்.எல்.ஏ.க்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ.வும் உள்ளனர். ஒரு இடம் காலியாக இருக்கிறது.

அ.தி.மு.க. (அம்மா) அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களில் டி.டி.வி.தினகரனை ஆதரிக்கும் எல்.எல்.ஏ.க்களும் அடங்குவார்கள்.

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ஏரோமீட்டர் (Aerometer)

காற்று மற்றும் வாயுக்களின் எடை மற்றும் அடர்த்தியை அளக்கும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் -அருண்ஜெட்லி கடிதம்
பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை எரிவாயு மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்று மாநில முதல்-மந்திரிகளுக்கு நிதி மந்திரி
19 August, 2017, Sat 5:36 | views: 245 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கட்சி, ஆட்சியில் பதவிகளை பிரிப்பதில் இழுபறி அ.தி.மு.க. அணிகள் இணைவதில் சிக்கல்
கட்சி, ஆட்சியில் பதவிகளை பிரிப்பதில் இழுபறி நீடிப்பதால், அ.தி.மு.க. அணிகள் இணைவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
19 August, 2017, Sat 5:33 | views: 174 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி செல்கின்றனர்
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி செல்கின்றனர் என தகவல் வெளியாகி உள்ளது.
18 August, 2017, Fri 15:57 | views: 683 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அதிமுக அணிகள் இணைப்பு குறித்து பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுடன் ஆலோசனை
அதிமுக அணிகள் இணைப்பு குறித்து பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளார்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர்.
18 August, 2017, Fri 15:54 | views: 269 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சசிகலா சில ஆலோசனைகளை வழங்கி உள்ளார் விரைவில் சில ஆபரேஷன்கள் நடக்கும் டிடிவி தினகரன்
சசிகலா சில ஆலோசனைகளை வழங்கி உள்ளார் விரைவில் சில ஆபரேஷன்கள் நடக்கும் என டிடிவி தினகரன் கூறி உள்ளார்.
18 August, 2017, Fri 13:07 | views: 361 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS