வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
040717
Bail விற்பனை Paris 12
050717
வீடுகள் வாடகைக்கு, விற்பனைக்கு
040717
தேவை
040717
வேலையாள்த் தேவை
040717
Bail விற்பனைக்கு
La Chapelle
270617
தேவை
270617
Bail விற்பனைக்கு
150617
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
குடியிருப்பு வரி - 2018 இல் 80% நீக்கப்படும் - அரசாங்கத்தின் வாக்குறுதி!!
France Tamilnews
அவதானம்!! உந்துருளிகளின் இலக்கத்தகடுகள் சனிக்கிழமைக்கு முதல்!!
France Tamilnews
ஜனாதிபதி தேர்தல் தமிழகத்தில் 234 பேர் வாக்களித்தனர் கருணாநிதி வாக்களிக்கவில்லை
17 July, 2017, Mon 14:36 GMT+1  |  views: 982
  • coffee-bharath
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

ஜனாதிபதி தேர்தலில்  இன்று காலை 10 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதல் நபராக சென்று பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு தனது வாக்கைப் பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து சபாநாயகர்  தனபால், எதிர்க் கட்சி  தலைவர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி தலைவர் ஓ.பன்னீர் செல்வம், கேரளா மாநில எம்.எல்.ஏ. பரக்கல் அப்துல்லா வாக்களித்தனர். பிறகு அ.தி.மு.க., தி.மு.க. எம். எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக வந்து ஓட்டு போட்டு சென்றனர்.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் வாக்களிப்பதற்காக ஏற்கனவே தேர்தல் கமிஷனிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்றிருந்தார். காலை 8.17 மணிக்கெல்லாம் அவர் சென்னை தலைமை செயலகக்துக்கு வந்து விட்டார். 6 வது நபராக வந்து அவர் தன் வாக்கை பதிவு செய்தார்.

ஒட்டுச்சாவடி அறைக்குள் அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் ஏஜெண்டாக  துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பணியாற்றினார். அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் செம்மலை, தி.மு.க. சார்பில் கொறடா சக்கரபாணி பணியாற்றினார்கள்.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக தி.மு.க., அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் காலையிலேயே தலைமை செயலகத்துக்கு வந்திருந்தனர். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் காலை 9 மணிக்கெல்லாம் கோட்டைக்கு வந்திருந்தனர்.

10 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியதும் எம்.எல்.ஏ.க் கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். முதல் 30 நிமிடத்தில் அதாவது 10.30 மணிக்குள் 50 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்திருந்தனர்.

தமிழக சட்டசபை மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 234. இதில் ஜெயலலிதா மறைவு காரணமாக ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளது. மீதமுள்ள 233 எம்.எல்.ஏ.க்களில் தி.மு.க. தலைவர் கருணாநிதி முதுமை, உடல்   நலக்குறைவு காரணமாக வாக்களிக்க வர இயலாத நிலையில் உள்ளார்.

எனவே 232 எம்.எல். ஏ.க்கள் வாக்களித்தனர். இவர்கள் அனைவரும் காலை 10 மணிக்கு தொடங்கி 11.55 மணிக்குள் வாக்களித்தனர். இதனால் தமிழ்நாட்டில் ஜனாதிபதி தேர்தல் 2 மணி நேரத்தில் நடந்து முடிந்து விட்டது.

அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி ஏஜெண்டு செம்மலை   கடைசியாக வாக்களித்தார்.  மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கேரள மாநில எம்.எல்.ஏ. அப்துல்லா ஆகியோரும் சென்னையில் வாக்களித்தனர். இதனால் சென்னை கோட்டையில் 233 எம்.எல்.ஏ.க்களும், ஒரு எம்.பி.யும் வாக்களித்துள்ளனர்.

புதுச்சேரியிலும்  சுமார் 2 மணி நேரத்துக்குள் 30 எம்.எல்.ஏ.க்களும்  வாக்கு அளித்து முடித்து விட்டனர். அந்த  மாநில ஓட்டுகள் கொண்ட வாக்கு பெட்டியும் 5 மணிக்கு சீல் வைத்து சென்னைக்கு எடுத்து வரப் படும். பிறகு தமிழகம், புதுச்சேரி இரு மாநில ஓட்டுப் பெட்டிகளும் ஒன்றாக சென்னையில் இருந்து டெல்லிக்கு கொண்டு செல்லப்படும்.

பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

எலெக்ட்ரோ டைனமோமீட்டர் (Electro Dynameter)

மின்சாரம், வோல்டேஜ், திறன் எல்லாவற்றையும் மொத்தமாக அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இந்திய–ரஷிய உறவுக்கு அடையாளம் கூடங்குளம் அணுமின் நிலையம்
ரஷிய அறிவியல் பண்பாட்டு மைய இயக்குனர் மிக்கையில் கோர்படோவ், இந்திய–ரஷிய உறவுக்கு அடையாளம் கூடங்குளம் அணுமின் நிலையம்
26 July, 2017, Wed 5:00 | views: 437 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விமான பணிப்பெண்ணாக தொடர்ந்து பணியாற்றுவேன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மகள் பேட்டி
நாட்டின் புதிய ஜனாதிபதியாக நேற்று பதவி ஏற்றுக்கொண்ட ராம்நாத் கோவிந்தின் ஒரே மகள் சுவாதி. அவர், ஏர் இந்தியா நிறுவனத்தில்
26 July, 2017, Wed 4:57 | views: 459 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குஜராத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் பறந்து பார்த்தார்
குஜராத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் பறந்து பார்வையிட்டார்.
26 July, 2017, Wed 4:56 | views: 199 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சசிகலாவுக்கு அமைச்சர் வீட்டில் இருந்து ஆம்புலன்சில் சென்ற சாப்பாடு-காய்கறி, பழங்கள்
சசிகலாவுக்கு அமைச்சர் வீட்டில் இருந்து ஆம்புலன்சில் சாப்பாடு-காய்கறி, பழங்கள் ஆகியவற்றை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கொண்டு சென்று
25 July, 2017, Tue 10:50 | views: 915 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நாட்டின் 14–வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்பு, பிரணாப் முகர்ஜி வாழ்த்து
நாட்டின் 14–வது ஜனாதிபதியாக அண்மையில் தேர்வு செய்யப்பட்ட ராம்நாத் கோவிந்த் பதவியேற்றுக் கொண்டார்.
25 July, 2017, Tue 10:49 | views: 293 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS