Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
100718*15
வேலைக்கு ஆள் தேவை!
070718*15
வேலைவாய்ப்பு
(5 ஊழியர்கள் தேவை)
030718*15
சாரதி அனுமதிப்பத்திரம்...
020718*15
கடை Bail விற்பனைக்கு
270618
கடை Bail விற்பனைக்கு
270618
வேலை வாய்ப்பு
260618
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
Spoken English classes
150518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
உங்கள் துணையுடன் நேரத்தை எப்படி செலவிடுவது .....
17 May, 2017, Wed 12:37 GMT+1  |  views: 4294

 அதிகாலை தூங்கி எழுந்ததும் அடுத்தடுத்த வேலைகளில் தங்களை ஐக்கியப்படுத்திக்கொள்பவர்கள் பெண்கள். குடும்பத்திற்காகவே தினமும் பெரும்பாலான நேரத்தை செலவிடும் பெண்களுடன் குடும்பத்தில் உள்ளவர்கள் செலவிடும் நேரம் குறைவாகவே இருக்கிறது. அதிலும் வேலைக்கு செல்லும் கணவன் தனது மனைவியுடன் முகம் கொடுத்து பேசுவதற்கே நேரமில்லாத சூழ்நிலையில், “என் மேலே அவருக்கு அக்கறையே இல்லை” என்ற மனக்குறை பெண்களிடம் வெளிப்படும்.

 
தம்பதியருக்குள்ளே நடக்கும் ஐந்து நிமிட உரையாடல் மூலமாக கூட அன்றைய நாளை ஆனந்தமாக கழிக்கலாம். ஆனால் ஆவேசத்தில் ஒரு நிமிடத்தில் கொட்டிவிடும் வார்த்தைகள் அன்றைய பொழுதின் நிம்மதியை குலைத்துவிடும். எதுவும் பேசாமல் பாராமுகத்துடன் இருந்தாலும் மனஸ்தாபத்தை உண்டாக்கிவிடும். ஆதலால் உங்கள் துணையுடன் நேரத்தை எப்படி செலவிடுவது என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. இருவருக்கும் பிடித்தமான பொதுவான விஷயங்களில் நேரத்தை செலவிடுவது சுலபமான வழி.
 
 
 
அதிகாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வழக்கத்தை இருவரும் தொடரும் பட்சத்தில் ஒருவருக்கொருவர் தங்கள் விருப்பங்களை வெளிப்படுத்தும் வாய்ப்பை உருவாக்கி கொள்ளலாம். மனைவி வீட்டுவேலைகளில் திக்குமுக்காடி கொண்டிருக்கும்போது கணவன் ஒத்துழைப்பது அவசியம். அது வேலையை விரைவாக முடிக்க உதவுவதோடு இருவருக்குமிடையே நேசத்தை அதிகப்படுத்தும்.
 
வேலைக்கு செல்லும் தம்பதிகளாக இருந்தால் காலையிலும், மாலையிலும் வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்ளலாம். ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை இருவரும் மனம் திறந்து பேசுவதற்காக ஒதுக்குங்கள். இரவில் சாப்பிட்ட பிறகு டி.வி.யிலோ, செல்போனிலோ முகத்தை பதித்துவிடாமல் துணையுடன் அன்றைய பொழுதில் நடந்த சம்பவங்களை பற்றி பேசலாம். நிறைய பேர் செல்போன் உலகுக்குள் தங்களை ஐக்கியப்படுத்திக்கொள்வது குடும்ப உறவுக்குள் மனஸ்தாபத்தை ஏற்படுத்த வழிவகுக்கிறது.
 
 
 
வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற இணைய தகவல்களை பற்றிகூட இருவரும் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளலாம். அதற்கு சிறிது நேரத்தை ஒதுக்கிவிட்டு மற்ற விஷயங்களை பற்றி பேசலாம். அது நாட்டு நடப்புகளை அறிந்துகொள்வதற்கு வழிவகுப்பதோடு இருவருக்கும் இடையே உரையாடும் நேரத்தை அதிகப்படுத்த வழிவகுக்கும். வார இறுதி நாட்களில் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் இருவரும் சேர்ந்து விளையாடலாம்.
 
அதில் குடும்ப உறவினர்களும் பங்கு பெறும்போது எவரும் தனிமைப்படுத்தப்படும் சூழலை உணரமாட்டார்கள். ஒருசிலர் வார இறுதி நாட்களில் பெரும் பகுதியை வெளியிலேயே கழிக்க விரும்புவார்கள். துணையை தவிர்த்து விட்டு நண்பர்களுடனோ, மற்றவர்களுடனோ அதிக நேரத்தை செலவிடுவதை தவிர்க்க வேண்டும். தேவையற்ற சகவாசங்களைக் குறைத்துவிட்டு வார இறுதி நாட்களை வீட்டில் செலவிடுவது துணைக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உறவை இனிமையாக்கும். 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* 1972-ம் ஆண்டு வங்காள தேசத்தின் தேசிய விளையாட்டாக கபடி அறிவிக்கப்பட்டது.
சஞ்சீவனி, காமினி மற்றும் அமர் ஆகிய பெயர்களில் 3 விதங்களில் கபடி ஆட்டம் நடைபெறுகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
டீன்ஏஜ் வயதில் பெண்களிடம் ஏற்படும் தடுமாற்றம்
சிறுமிகள், டீன்ஏஜ் பெண்கள் பாலியல் தொடர்புடைய சிக்கல்களில் எளிதாக மாட்டிக் கொள்கிறார்கள். செல்போன், இன்டர்நெட் போன்றவை அதற்கு கார
10 July, 2018, Tue 11:02 | views: 822 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நீங்கள் திருமணத்திற்கு தயாரா? -
திருமணம் பற்றிய நிஜம் ஒன்றை சமூகத்திடம் மறைக்காமல் சொல்லித்தான் ஆகவேண்டும். மனோதத்துவ ஆலோசனைக்கு வரும் திருமணமான பெண்களில் 80 சதவ
6 July, 2018, Fri 14:56 | views: 667 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உறவில் நேர்மை இருந்தால்......
ஒரு ஆரோக்கியமான உறவென்பது காதலை தாண்டி, அதில் இருக்கும் நேர்மையை சார்ந்திருக்கிறது. எத்தனையோ ஆண்கள், பெண்கள் தங்கள் துணையை உண்மைய
4 July, 2018, Wed 11:11 | views: 1147 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெண்களால் வீட்டில் ஆண்கள் ஓரங்கட்டப்படுகிறார்களா?
“வரவர குடும்பத்தில் எனக்கு மரியாதையே இல்லை” என புலம்பும் ஆண்கள் பெருகிவிட்டார்கள். உண்மையில் ஆண்கள் ஓரங்கட்டப்படுகிறார்களா? என்பத
26 June, 2018, Tue 5:10 | views: 885 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆண்கள் மனைவிடம் கூறாமல் மறைக்கும் விஷயங்கள்!
பெரும்பாலும் வருங்கால துணை சார்ந்து பெண்களுக்கு எப்படியான விருப்பங்கள், ஆசைகள் இருக்கிறது என்ற கேள்வியை தான் நாம் அறிந்திருப்போம்
9 June, 2018, Sat 18:17 | views: 2134 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
PARTITION LEGAL NOTICE
10 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS