வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
040717
Bail விற்பனை Paris 12
050717
வீடுகள் வாடகைக்கு, விற்பனைக்கு
040717
தேவை
040717
வேலையாள்த் தேவை
040717
Bail விற்பனைக்கு
La Chapelle
270617
தேவை
270617
Bail விற்பனைக்கு
150617
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
குடியிருப்பு வரி - 2018 இல் 80% நீக்கப்படும் - அரசாங்கத்தின் வாக்குறுதி!!
France Tamilnews
இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்
17 May, 2017, Wed 4:24 GMT+1  |  views: 1614
  • coffee-bharath
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
மும்பை இந்தியன்ஸை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட் அணி முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.
 
மும்பையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்
ஐ.பி.எல். சீசன் 10-ன் முதல் குவாலிபையர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. 
 
இதையடுத்து களமிறங்கிய புனே அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 162 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்டசமாக மனோஜ் திவாரி 58 (48) ரன்களும், ரஹானே 56 (43) ரன்களும், தோணி 40 (26) ரன்களும் எடுத்தனர். இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் சிம்மன்ஸ் - பார்த்திவ் படேல் முதலில் அதிரடி காட்டினர். இந்த ஜோடி 35 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், ஆட்டத்தின் 4வது ஓவரின் போது தாகூர் வீசிய ஓவரில் அவரிடமே ரன் அவுட்டாகி வெளியேறினார் சிம்மன்ஸ் 5 (13). 
 
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரோகித் சர்மா 1 (2), ராயுடு 0 (3), பொல்லார்டு 7 (10) ஆகிய மூன்று முக்கிய வீரர்களை தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் வீழத்த அணியின் போக்கே மாறியது. அடுத்த வந்த ஹர்திக் பாண்டியா 14 (10) ரன்களும், குரூனல் பாண்டியா 15 (11) ரன்களும் எடுத்து வெளியேறினர். 
 
மறுமுனையில் தனது அதிரடி ஆட்டத்தால் அணியின் ஸ்கோரை உயர்த்திய பார்த்திவ் படேல் 40 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 52 ரன்களை சேர்த்திருந்த போது தாகூர் பந்தில் கிறிஸ்டியனிடம் கேட்ச் கொடுத்து வெளியேற மும்பை அணியின் தோல்வி உறுதியானது. 
 
இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து புனே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இதையடுத்து மும்பை அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட் முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றது.
 
நாளை கொல்கத்தா - ஐதராபாத் இடையே எலிமினேட்டர் ஆட்டம் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் அணி வருகிற 19-ஆம்தேதி மும்பையுடன் தகுதிச்சுற்றுப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி வருகிற 21-ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் புனேவை சந்திக்கும்.
 
பொதறிவுத் துணுக்கு :

* தபால்தலையை (Stamp) வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு

  மலேசியா

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இந்திய அணி 446 ரன்களில் முன்னிலை!
காலே டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்துள்ளது
28 July, 2017, Fri 4:04 | views: 150 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புதிய உலக சாதனை படைத்த அஷ்வின்
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் புதிய உலக சாதனை
27 July, 2017, Thu 14:54 | views: 1072 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடும் இந்திய அணி!
இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நாணயச்சுழற்சியில்
26 July, 2017, Wed 14:00 | views: 604 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இந்தியா - இலங்கை முதல் டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பம்!
இந்திய அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை
25 July, 2017, Tue 13:20 | views: 641 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
போராடி தோல்வியடைந்த இந்திய மகளிர் அணி!
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியுடன்
24 July, 2017, Mon 13:18 | views: 713 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS