Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
வெயில் காலத்தில் சன் ஸ்கிரீன் அவசியமா?
12 May, 2017, Fri 11:54 GMT+1  |  views: 2209

 காலை 9 மணிக்கே வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கிறது. 5 நிமிடங்கள் வெயிலில் சென்றாலே தலை முதல் பாதம் வரை கருத்துவிடுகிறது. ``வீட்டை விட்டு வெயிலில் வெளியே சென்றால் மட்டுமல்ல... வெயில் காலங்களில் வீட்டுக்குள் இருக்கும் போதுகூட சன் ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டியது அவசியம்’’.

 
சன் ஸ்கிரீன், சன் பிளாக், சன் டான் லோஷன், சன்பர்ன் கிரீம், சன் கிரீம், பிளாக் அவுட்... எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். எல்லாமே ஒன்றுதான். இவை எல்லாமே சூரியனின் கடுமையான பாதிப்புகளில் இருந்து சருமத்தைக் காப்பவை. சூரிய வெளிச்சம் பட்டு சருமம் கருத்துப் போவது, வயதுக்கு முந்தைய முதுமை, சருமச் சுருக்கங்கள் போன்றவை வராமல் தடுக்கக்கூடியவை. 
 
சன் ஸ்கிரீனில் உள்ள பிரதானப் பொருளானது, சூரியனின் புறஊதாக் கதிர்களை உறிஞ்சிக் கொண்டு, அது சருமத்தின் ஆழத்தில் உள்ள லேயர்கள் வரை ஊடுருவுவதைத் தடுக்கிறது அல்லது அந்தக் கதிர்களின் தாக்கம் சருமத்தை பாதிக்காமல் காக்கிறது. சன் ஸ்கிரீன் உபயோகிக்கிற காரணத்தினால், எந்தக் கவலையும் இல்லாமல் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வெயிலில் நிற்கலாம் என அர்த்தமில்லை. சன் ஸ்கிரீன் என்பது சூரியனின் எல்லா கதிர்களில் இருந்தும் சருமத்துக்குப் பாதுகாப்பு அளிக்காது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கிரீம், லோஷன், ஜெல், ஸ்டிக், ஸ்பிரே என பல வடிவங்களில் சன் ஸ்கிரீன் கிடைக்கிறது.
 
அதென்ன எஸ்.பி.எஃப்?
 
எல்லா சன் ஸ்கிரீன்களிலும் எஸ்.பி.எஃப் (SPF - Sun Protection Factor) என ஒரு எண் குறிப்பிடப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். குறிப்பிட்ட அந்த சன் ஸ்கிரீனுக்கு எந்தளவுக்கு சூரியனின் பாதிப்புள்ள கதிர்களின் வீரியத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்க முடியும் என்பதற்கான குறியீடுதான் அது. வெயிலில் சென்ற பத்தாவது நிமிடத்தில் உங்களால் தாக்குப்பிடிக்க முடியாது என்றால், எஸ்.பி.எஃப். 15 உள்ள சன் ஸ்கிரீன் உங்களுக்கு 150 நிமிடங்களுக்கு பாதுகாப்பு தரும். 
 
 
 
அதாவது, 10X15. இது தோராயமான ஒரு கணக்குதான். நீங்கள் வெயிலில் செலவிடப் போகிற நேரத்தைப் பொறுத்து அதிக அளவு எஸ்.பி.எஃப். உள்ள சன் ஸ்கிரீனை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். தவிர, இது ஒருவரது சருமத்தின் தன்மை, வெயிலின் கடுமை, உபயோகிக்கிற சன் ஸ்கிரீனின் அளவு என பல விஷயங்களைப் பொறுத்து மாறும்.
 
எஸ்.பி.எஃப். 75, 100 என்றெல்லாம் கிடைக்கிற சன் ஸ்கிரீன் சருமத்துக்கு அதிகபட்ச பாதுகாப்பைக் கொடுக்கும் என்பது சிலரது நம்பிக்கை. அதிக அளவு எஸ்.பி.எஃப். கொண்ட சன் ஸ்கிரீன், UVB கதிர்களிடம் இருந்துதான் அதிகமாகப் பாதுகாக்கும். UVA கதிர்களிடமிருந்தும் சருமம் பாதுகாக்கப்பட வேண்டும். எஸ்.பி.எஃப். 15 உள்ள சன் ஸ்கிரீன் எல்லாருக்கும் ஏற்றது. அதை வெயில் நேரடியாகப் படுகிற எல்லா பகுதிகளிலும் தடவிக் கொள்வதுடன், ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கு ஒரு முறையும் மறுபடி தடவ வேண்டும் என்பதே பொதுவான அறிவுரை.
 
PABA (para-aminobenzoic acid) ஃப்ரீ என குறிப்பிடப்பட்டிருக்கிற சன் ஸ்கிரீனே சிறந்தது. ஆயில் ஃப்ரீயாகவும் வாசனைகள் அற்றதாகவும்,
ஹைப்போஅலர்ஜெனிக் என குறிப்பிடப்பட்டதாகவும், கெமிக்கல் கலக்காததாகவும் இருக்க வேண்டும்.
 
ஆயில் ஃப்ரீ சன் ஸ்கிரீன் லோஷன் என்றால் சருமத் துவாரங்களை அடைக்காமலும் பருக்களை அதிகப்படுத்தாமலும் இருக்கும்.
Non-comedogenic என குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அப்படிஎன்றால் சரும துவாரங்களை அடைக்காது என அர்த்தம்.
 
* எண்ணெய் பசை சருமத்துக்கு... வாட்டர் அல்லது ஜெல் based சன் ஸ்கிரீன்களே சிறந்தவை. ஆயில் ஃப்ரீ என குறிப்பிடப்பட்டிருக்கிறதா என கவனிக்க வேண்டும்.
 
* வறண்ட சருமத்துக்கு... கிளிசரின் மற்றும் கற்றாழை கலந்தவற்றை உபயோகிக்கலாம். ஆல்கஹால் கலந்த ஸ்பிரே மற்றும் ஜெல் வகைகளைத் தவிர்க்கவும்.
 
 
 
எப்படி உபயோகிப்பது?
 
* முகத்துக்கு உபயோகிக்கிற அதே சன் ஸ்கிரீனை உடலுக்கும் உபயோகிக்கக் கூடாது.
 
* பருக்களுக்கு பிரத்யேக கிரீம் உபயோகிக்கிறவர் என்றால் அதை முதலில் தடவிக் கொண்டு, 20 நிமிடங்கள் கழித்தே சன் ஸ்கிரீன்
உபயோகிக்க வேண்டும்.
 
* தூங்கச் செல்வதற்கு முன் முகத்திலுள்ள சன் ஸ்கிரீனை அகற்றி சுத்தப்படுத்த வேண்டியது அவசியம்.
 
* சன் ஸ்கிரீன் கவரில் உள்ள குறிப்புகளைப் படித்து அதன்படி உபயோகிக்கவும்.
 
* வெயிலில் செல்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாகவே சன் ஸ்கிரீன் தடவப்பட வேண்டும்.
 
* ஸ்பிரே வடிவிலான சன் ஸ்கிரீன் உபயோகிக்கும் போது கவனம் தேவை. அருகில் புகையோ, நெருப்போ இருக்கக்கூடாது.
 
* சன் ஸ்கிரீனை கண்களில் படாமல் உபயோகிக்க வேண்டும்.
 
* குழந்தைகளுக்கு சன் ஸ்கிரீன் உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
 
எஸ்.பி.எஃப். 15 உள்ள சன் ஸ்கிரீன் எல்லாருக்கும் ஏற்றது. அதை வெயில் நேரடியாக படுகிற எல்லா பகுதிகளிலும் தடவிக் கொள்வதுடன், ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கு ஒரு முறையும் மறுபடி தடவ  வேண்டும் என்பதே பொதுவான அறிவுரை. சன் ஸ்கிரீனை கண்களில் படாமல் உபயோகிக்க வேண்டும். குழந்தைகளுக்கு சன் ஸ்கிரீன் உபயோகிப்பதைத் தவிர்க்கவேண்டும்.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய கண்டம் எது?
   ஆசியாக் கண்டம்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மன அழுத்தம் நீங்க வழிகள்
தற்கால சூழ்நிலையில் பள்ளிக்கு போகும் சிறுவர்கள் முதல் ஓய்வு பெறும் முதியோர்கள் வரை எல்லோரும் மன அழுத்தத்திற்கு உட்படுகின்றனர். ப
25 September, 2018, Tue 11:49 | views: 207 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கூந்தல் வெடிப்பை தடுக்கும் வீட்டு வைத்தியம்
சிலருக்கு கூந்தலின் முனைகள் பிளவுபட்டு இருக்கும். இப்படி முடியின் முனைகளில் வெடிப்புக்கள் இருந்தால், முடியின் வளர்ச்சி தடுக்கப்பட
17 September, 2018, Mon 15:32 | views: 689 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சருமத்திற்கு பூசணி தரும் அழகு
பூசணிக்காயை சமையலுக்கு மட்டுமின்றி சரும அழகுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். அதிலிருக்கும் வைட்டமின் ஏ, சி மற்றும் ஆன்டி ஆக்சிடெண்ட
14 September, 2018, Fri 11:11 | views: 454 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்கள்
கண்ணுக்கு கீழ் ஏற்படும் கண் கருவளையத்தால் பெரும்பாலான பெண்கள் இதனால் பாதிப்படைந்துள்ளனர். அதிலும் திருமணமாகாத பெண்களுக்கு கண் கரு
8 September, 2018, Sat 14:15 | views: 707 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவு முறைகள்
ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் மூளை நரம்புகள் வயது முதிர்ச்சியாலும், மன அழுத்தத்தினாலும் சோர்வடைவதே. அதனால் மூளை சரியாக எதையும் ஞாப
6 September, 2018, Thu 11:17 | views: 1040 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS